தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பத்து ஹைகூ கவிதைகள்

எஸ். ஷங்கரநாராயணன்
* !
அரேபியாவில் ஏ/சி மெக்கானிக் !
வீடு திரும்புகிறான் !
ஏ/சி சவப்பெட்டி !
* !
மனைவி அல்ல என்றாலும் !
பூவுதிர்க்கிறது !
மரம் கல்லறைமீது !
* !
எதையோ காட்டிக்கொண்டு அரசியல்வாதி !
சிலையடி நிழலில் !
தூங்கும் குடிமகன் !
* !
கூவத்துக் கரையில் !
முளைத்திருந்தது !
ரோஜாச்செடி !
* !
ரயில்வே இன்டர்வியூ !
போய்ச் சேர்ந்தான் !
தாமதமாக !
* !
சற்றுமுன் !
இறந்துபோனார் !
அனந்தசயனம் !
* !
தூக்கத்தில் நடக்கிற வியாதி !
அவதிப் படுகிறான் !
நொண்டி !
* !
தொப்புளைச் சுற்றி ஊசிகள் !
போட்டுக் கொள்கிறார் !
மிருக வைத்தியர் !
* !
இல்லறம் துறந்து !
ஞான மார்க்கம் !
மனைவி பெயர் ஞானம் !
* !
இருட்டிலும் !
பார்த்தபடி !
அம்மன் சிலை !
- எஸ். ஷங்கரநாராயணன் !
s
S Shankaranarayanan

எப்படி வரும்.. அது வந்தபோது

செண்பக ஜெகதீசன்
01.!
எப்படி வரும்...!
------------------!
அணியும் ஆபரணங்களை!
அகற்றிவிடுகிறோம்,!
பகல் முடிந்து இரவில்!
இன்துயில் செல்லுமுன்னே...!
அகங்காரத்தையும்!
அகத்தை அழிக்கும்!
கவலைகளையும்!
கழற்றி வைக்காமல்!
கட்டிலுக்குப் போகிறாயே-!
எப்படி வரும்!
இனிய தூக்கம்...!!
02.!
அது வந்தபோது...!
-------------------!
வானவில் வந்து!
வண்ணக் குடைபிடித்தது!
வையகத்திற்கு-!
வர்ணிக்கிறான் கவிஞன்...!
ஏக்கத்துடன்!
எட்டிப்பார்க்கிறான் விவசாயி-!
வந்த மழையும் போச்சுதே..!
நொந்துகொள்கிறான்

தாத்தா

துரை. மணிகண்டன்
வாழ்க்கை முழுவதையும்!
தவனைமுறையில் இழந்தவர்!
ஆலமரமாக நின்று அரவனைத்த!
அந்த பெரியவரின் வாழ்வு!
இன்று காணல் நீராக...!
தாத்தா கையைப்பிடித்து!
வழி சொல்லும் பேரன் கேட்கின்றான்!
கதைசொல் தாத்தா என்று!
தாத்தா!
கடந்த்காலத்தின் காலச்சுவட்டையும்!
நிகழ்கலத்தின் எதார்த்தத்தையும்!
எதிர்காலத்தின் இனிமையான வரவையும் எடுத்தியம்புகிறார்!
மரத்திலிருந்து விவாகரத்துப் பெற்றுச்செல்லும் இலையைப்போல

வானம்

மீன்கொடி- கோவிந்தராசு
வாயுக்களால்!
வடிமைக்கப்பட்ட!
கூரை!!
புவிஈர்ப்பு விசைக்கெதிராய்!
புறப்பட்ட தாவரங்கள்!
தொட்டு விடத் துடிக்கும்!
தொட முடியாத் திரை!!
நிலத்தைப் பசுமையாக்கும்!
நெடுந்தூரத்து!
நீலம்!!
ஒட்டுத்துணிகளால் தைக்கப்பட்ட!
ஊதா நிற!
ஓட்டைக் குடை!!
ஞாயிறும், திங்களும்!
நட்சத்திரங்களும்!
நாள்தோறும் வந்து!
நடித்து விட்டுச் செல்லும்!
நாடக மேடை!!
உலகை உழவை!
உயிர்ப்பிக்கும் !
கடவுள்!!
-மீன்கொடி கோவிந்தராசு

சுதந்திரம்

மன்னார் அமுதன்
காவல் இல்லாத தோட்டங்களை!
சுதந்திரமாக மேய்கின்றன!
கட்டாக்காலிகள்!
கொண்டாட்டமும், களிப்புமாய்!
அவைகள் !
காணிக்காரனின் சுதந்திரமோ!
கம்பிகளுக்குப் பின்னால்!
கிழக்குச் சமவெளிகள்!
திகட்டிவிட்டதால்!
வடக்கில் வாய் நீள்கிறது!
கடைவாயூறும்!
கட்டாக்காலிகளைக் !
கட்டி வைக்கவோ !
கல்லால் அடிக்கவோ விடாமல்!
காவல் காக்கிறது இறையான்மை!
ஊரான் தோட்டத்தில்!
மேயும் கட்டாக்காலிகள்!
காணிப் பகிர்வையும்!
காவல்காரனையும்!
விரும்புவதில்லை!
தெற்கிலும்!
தென்கிழக்கிலும்!
கட்டாக்காலிகள்!
கால் வைப்பதில்லை!
வாலை நீட்டினால் கூட!
வேட்டையாடி விடுகின்றன!
சிங்கங்கள்!

நல்லெண்ணம்

தமிழ்நம்பி
மாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்!
மனத்தின் எண்ணம்;!
வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ வெறும்மாவே!!
விரைவில் வீழ்வான்!!
சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்!
சரிவே காணா!
ஏந்துடைய நல்வாழ்வு என்றென்றும் ஏய்ந்திடநல்!
எண்ணம் வேண்டும்!!
!
ஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்!
றுணர்ந்து கொள்க!!
ஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் தீங்கினைநீ!
உனக்கே செய்தாய்!!
ஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்!
உடற்கும் உண்டே!!
ஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்!
உயர்த்தும்; வீழ்த்தும்!!
!
தப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்!
தமையே தேர்க!!
எப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் நல்லுறவும்!
இணைத்துக் கொள்க!!
இப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்!
இனிமை சேர்க்கும்!!
முப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்!
முடியும், உண்மை!!
!
ஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்!
உங்கள் நெஞ்சம்!
ஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்!
இயைந்து நின்றால்!
ஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்!
அளிக்கும் வெற்றி!!
தோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்!
துணையாய்க் கொள்க!!
!
எண்ணத்தை ஆக்குவதார்? உள்வாங்கு்ம் செய்திகளே!!
எனவே என்றும்!
ஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்!
ஓர்ந்து தேர்க!!
எண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை!
எண்ணிப் பாரீர்!!
திண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்!
தெளிந்து கொள்க!!
!
நல்லெண்ணம் மனங்கொள்க! நல்லுணர்வைப் போற்றிடுக!!
நனமை நாடி!
நல்லாரோ டுறவாடி நல்லொழுக்கம் பேணிடுக!!
நயந்தே நாளும்!
வல்லாரும் மெல்லியரும் வலியவுள நல்லெண்ணம்!
வளர்த்து வாழ்க!!
எல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே!
இனிது வாழ்க

பாவலர் பாரதியார் நினைவேந்தி

தமிழ்நம்பி
பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்!
பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும்!
தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித்!
தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை!!
வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி!
விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்!
சீரழிந்தே அடிமையுற்ற சிறுமைநிலை போக்கச்!
சீறிஎழச் செய்தஇத ழாசிரியர் இவரே!!
தொன்மையுடன் புதுப்புதுமை தோய்ந்தகருத் தெல்லாம்!
துளித்தயக்கு மில்லாது துணிவுடனே சொன்னார்!!
முன்மையுறத் தாய்மொழியில் முறையாகக் கற்பீர்;!
முந்திடும்ஆங் கிலவழியோ முழுபேடிக் கல்வி!!
வன்மையுடன் அதைத்தவிர்ப்போம்; வண்டமிழின் வழியே!
வழங்கிடுவோம் கல்வியென வழிவகையும் சொன்னார்!!
மென்மையொடும் அன்போடும் மிகப்பரிந்து சொன்னார்!
மேனமையுறத் தாய்மொழியே மிக்கதுணை என்றே!!
ஒருபக்கப் பாரதியே உருவாக்கிக் காட்டும்!
உதவாத போக்கிங்கே உள்ளதிது நன்றோ!!
ஒருவிடுக அயற்சொல்லை ஒல்லும்வா யெல்லாம்!
ஓங்குகலை சேர்த்துதமிழ் உயர்த்திடுக என்றார்!!
தெருளுறவே அவருரைத்த தேர்ந்தகருத் திதனைத்!
தெரிந்திருந்தும் பிறசொல்லைத் தீந்தமிழில் கலக்கும்!
அருவருப்பை மாற்றிடுவோம் அறிவியலும் கலையும்!
அருந்தமிழில் வளர்த்திடுவோம்! அன்புணர்வில் வாழ்வோம்

காதல் வந்ததடி

முருகு கார்தி
காதலுக்கு கண்கள் இல்லை!
ஆனால் தன் காதலியை பார்த்தால் மட்டும்!
அது மௌனமாய் தூது பேசும்.... !
காதலுக்கு காலநேரம் இல்லை!
ஆனால் தன் உடையவளுக்காக நாள் கணக்கில்!
நின்ற இடத்திலேயே சுகம் காணும்....!
காதலுக்கு தூக்கம் இல்லை!
ஆனால் தன் தேவதையுடன் கனவு காண!
கற்பனைகள் தட்டி தாலாட்டு பாடும்....!
காதலுக்கு பேதம் இல்லை!
ஆனால் தன் இனியவள் பேசிய வார்த்தைகளை!
கோர்த்து கவிதைகளாய் வடிக்க தோணும்....!
காதலுக்கு திசைகள் இல்லை!
ஆனால் தன் இளவரசி இருக்கும் இடத்தில்!
குடிசை போட்டு வாழ தூண்டும்....!
காதல் ஒன்றும் கடவுள் இல்லை!
ஆனால் தன் காதலியின் மனதில் தான் இருப்பது தெரிந்தால்!
உயிர் இல்லாமல் வாழும் தேகம்

மனிதம்

உ. கிஷோர் குமார்
மாறி வரும் நாகரிகம் மறந்து வரும் !
அகராதிகளில் மட்டும் அங்கம் பெறும் !
மனிதமில்லா மனங்கள் வெறும் மகரந்தமில்லா மலர்கள் !
இயற்கை பல இன்னல் தந்து அவ்வப்போது அறிமுகம் செய்யும், !
மனிதம் மனத்திற்கு மறக்காமல் இருக்க. !
எதை எதையோ தேடி அலையும் மனிதா நீ !
உன் மனிதத்தை தொலைத்ததெங்கே? !
உன் கட்டிடக்காட்டின் அஸ்திவாரமாக்கி கொண்டாயா? !
நாகராகத்திடம் நல்ல விலைக்கு விற்று விட்டாயா? !
மனிதத்தை தொலைத்துவிட்டு மார்ஸிக்கு செல்கின்றாய் !
அங்காவது தேடு தொலைத்ததை. !
மாறிவரும் மனிதா உன் முகவரி மனிதத்தை தேடிப்பிடி !
ஏனெனில், !
முகவரி இல்லா உனக்கும், !
மரத்தில் வாசம் செய்த உன் முன்னோருக்கும் !
வித்தியாசம் என்ன? !
அவர்களுக்காவது மரம் இருந்தது. !
-உ. கிஷோர் குமார்

மொட்டை உறக்கங்கள்

ஜெ.நம்பிராஜன்
ரீங்காரமிடும் மின்விசிறியின்!
தாலாட்டுடன் உறங்குவது சுகமே!
ஆனாலும் மொட்டை மாடியை!
மனம் மறப்பதில்லை!
வானத்துக்கும் பூமிக்குமிடையே!
மனிதன் எழுப்பிய சுவரைத்!
தகர்த்தது போன்றதொரு மகிழ்வு!
உறக்கம் வராத பொழுதுகளில்!
நட்சத்திரங்களுக்குள் ஓடி விளையாடலாம்!
நிலவில் நிழலாய் இருப்பது!
பாட்டியா, முயலா அல்லது!
பாலூட்டும் அன்னையாயென ஆராயலாம்!
மொட்டை மாடி உறக்கம்!
கனவுகளும் கவிதைகளும் நிறைந்தது!
மின்விசிறி உறக்கத்தில்!
நாளையைப் பற்றிய கணக்குகளிலேயே!
கனவுகள் கலைந்து விடுகின்றன!
என் செய்வது?!
அடுக்ககங்களுக்குள் அடைந்து விட்ட!
என் இப்போதைய உறக்கங்கள் யாவும்!
மொட்டை மாடியற்ற!
மொட்டை உறக்கங்களாகி விட்டன!
!
-ஜெ.நம்பிராஜன்