காணவில்லைக் கணவரை-அவர்!
காணமல்போனவர் பட்டியலில்!
காலங்கள் கடக்கின்றனகண்ணீரோடு!
அதரவு யாரும் இல்லை!
அனாதரவாய் நன்இங்கே-என்!
அருமைப் பிள்ளைகளை!
ஆளாக்க வேண்டி!
அயராது உளைக்கையிலே!
ஆந்தை விழிகள் பல-என்னை!
துகில் உரியப் பார்க்கிறது!
அடி மனதில் வலியுடன்!
ஆத்மதிருப்திக்காய்!
ஆலயம்செல்கையிலெ!
அயலவரும் குதிதிகதை பேசிடுவார்!
மனசெல்லாம் ரணமாச்சு!
தமிழர் பண்பாடு என்று!
குங்குமம் எடுத்து வைக்கையிலே!
யாருக்காக இந்தப்போட்டு!
எனவசைபாடுது பல குரல்!
பொட்டின்றி புவிளந்து!
விதியில்நான் சென்று விட்டால்!
விசித்திரமாய் பல கண்கள்மெய்கிறது!
என்உடம்பில்!
துணையில்லை என்ற துணிவுடன்!
நோகுது ஜயோ நெஞ்சம்!
என்னவனைகாலன்தான் கவர்ந்தானோ -இல்லை!
என்னைக் காப்பாற்ற வருவாரோ?!
எனக்கே என்னைப்புரியவில்லை!
என்நிலை என்ன தெரியவில்லை???!
-செம்மதி
செம்மதி