மழை சுட்ட.. ரத்தக் கடத்தி..படுகொலை
கோபால் நாதன்
மழை சுட்ட சூரியன்.. ரத்தக் கடத்தி..படுகொலை செய்யப்பட்ட நகரம்!
!
01.!
மழை சுட்ட சூரியன்!
---------------------------!
ஊரெல்லாம் கன மழை !
பெய்து கொண்டிருக்கிறது. !
அணையில்லை, !
ஆனால் குளம் பிறக்கிறது.!
குளத்தின் நடுவில் மிதக்கின்றன எனது வீடு.!
இங்கிருந்துதான் நதி உற்பத்தியாகி!
தெருக்களில் பெருநதியாக நகருகிறது...!
குடை பிடித்து கால்களை நனைத்த நிழல்கள் !
வீட்டை நீர் எங்கோ இழுத்துச் செல்கிறது. !
பூச்சாடிலிருந்து உதிர்ந்த பூவின் படகில் !
பயணிக்கிறது எறும்புகள்.!
விறாந்தையில் குளிர் காய்ந்தது பறவைகள் !
சோம்பல் முறிப்பில் உடைந்தன சிறகு.!
நாட்காலியில் உறங்கும் பூனை!
கனவு கண்டு புன்னகையில் சிலிக்கின்றது. !
கிணற்றைக் காணவில்லை !
நிர்வாணத்தை நீரால் ஆடையணிந்து !
சந்தோசத்தால் மூழ்கியது.!
கோதுமை மாவில் மிளகாயும்,!
வெங்காயமும் கலவையாகிய ரொட்டி!
பழைய காதலை சுவைக்கிறது. !
இளகிய அதிகாலை சூரியன் !
பனையோலை வேலி செத்தைக்குள் !
மறைந்து ஒழித்துக் கொண்டிருக்கிறது.!
02.!
ரத்தக் கடத்தி !
பின்!
மாலை முடிந்து போன !
இன்னொரு பகல் பொழுது !
அதுவும் இரவு காட்டில் ஒளிந்து மறைந்து !
வானம் இன்னொன்றாய் .... மீளவும் !
மேகங்களை கூட்டி கொண்டு வந்தது!
நிணத்தின் காவுகளை மணல் வெளியில் !
தூக்கி வீசப்பட்டிருந்தது நிலவு!
பிணமழுகி வெடித்து சிதறிய !
காற்றின் வெளிப்பரப்பு மேல் !
பறவைகளும் கணம் தவறி மூச்சு !
திணறல்களால் மௌனிப்போடு !
சிறகசைப்பில்லாமல் ஒளிந்து நிறைகிறது ..!
சாம்பல் மேட்டில் மீதொரு துயர் கரைந்து. !
ஒவ்வொரு விடியற் காலையும் !
வீதியோரங்களின் புல்வெளி !
ரத்தம் பூசிய காகித அட்டைப் பூக்களைத்தான் !
தலை வெட்டப்பட்ட உடல்களால் !
மின் கம்பங்களிலும் , தந்தி தூண்களிலும் ,!
தொங்கி கொண்டிருக்கும் !
பிண்டங்களின் காலிடுக்குள் !
தலைகளாய் பூத்துக்கொள்கிறது.!
எல்லைக்கான புணர்தல் சண்டையில் !
ஆண் சிங்கங்கள் மூர்க்கத்தனமாய்....!
சண்டை உச்ச நிலையடைந்து !
புழுதி அள்ளி பூசும் !
காடுகள் மெல்ல மௌனமாகி...!
செத்துக் கொண்டிருக்கிறது.!
வெற்றி ஆக்ரோசத்தில் !
நிலத்துக்கு உரிமமுடைய !
குட்டிச் சிங்கங்களை கொலைக்கரம் நீள்ந்து!
நிர்வாணமாக அலையும் பெண் சிங்கம் !
சுதந்திரக் பெருங்காற்றை சுவாசித்து !
மல்லாந்து படுத்து உறங்கிறது.!
நடுப்பகலில் !
மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில் !
கொடூரமான சொப்பனத்தில் கரைகிறேன்.!
ஆயுதம் தோலில் சுமந்து கொண்டு !
கரங்களில் ரத்தம் சொட்டிக் கொள்ளும் !
தலைகளுடன் வீரர்கள்...!
முகங்களில் உக்கிரக் கோபத்துடன்!
என்னை ஒரு அடந்த காட்டின்!
மரத்தில் தொங்க விட்டிருந்தார்கள் !
ஒருவனின் சட்டையிலிருந்து விழுந்தது !
கருணாகரனின் !
போரில் செட்டை கழற்றிய கருநாகம் !
கவிதை புத்தகம்.!
!
03.!
படுகொலை செய்யப்பட்ட நகரம்!
------------------------------------!
கற் குவியலாய் நிறைந்து !
வழிகிறது அந்த !
ஆச்சரியமுட்டும் திகில் நகரம் !
மிஞ்சிய பாதிச் சுவர்களில் போரின் !
உக்கிர அதிர்வுகள் தொப்பிள் !
குழிகளின் தோண்டல் துவக்கின் !
அடையாள பொத்தலுடன் சிதைக்கிறது, !
மணல் அரித்து வீசி முடி கவிழ்த்து !
புதைத்திருந்த படகின் நிணமும்,!
பனை, தென்னை மரங்களின் தலை !
முறிந்திருந்த தோப்பின் துயரும்,!
பல்லாயிரம் உடலின் ரகசியங்களை !
மண்ணின் சூன்ய குரூரத்துள்...!
மறைக்கப்பட்டிருக்கிறது. !
பாழ் நிலத்துள் உறைந்து வாழ்கின்ற !
பிடாரனிடம் இன்னும் கை நிறைய !
வன்மம் வழிந்து பீறிட்டுக் தொடர்கிறது.!
நாய்களில்லாத தெருக்களில் !
பிசாசு கொடூரத்தாண்டவம் மீட்சியாய் !
குடியிருப்புக்களை நாசப்படுத்தி சினப்படுத்துகிறது.!
ஆக்கிரமிப்பில் சாத்தானின் கரங்கள் !
ஓங்கி உயிரின் வதைபடலம் !
தொகை தொகையாக நீண்டு...!
வெளியெல்லாம் ரத்தவாடை வெடுக்கெடுக்கிறது.!
கடவுளிடம் உரத்த குரலில் !
கை கூப்பி தொழுது மன்றாடி !
கண்ணீர் மல்கியவர்களின் கரங்களும் !
சிதைந்து அறுந்து விழுந்திற்று....!
சாவின் துயர் கோவில் மண்டபத்தினுள் !
எல்லாவற்றையும் நிறைத்துக் கொண்டன