தாய்மை - s.உமா

Photo by Jan Huber on Unsplash

நீராடி நோன்பிருந்து!
நித்தம் தவமிருந்து-தான்!
கருவுற்ற நேரத்தில்!
கவலை மறந்து !
சிரித்திருந்து சீராய்!
உணவு அருந்தி-பிள்ளை !
பெற்றுவிட்ட போதினிலும்!
தன்னுயிரை அமுதாக்கி!
ஊட்டுவித்து மகிழ்ந்திருந்து!
உள்ளம் நிறைந்திருந்து-தான்!
உற்ற பசி மறந்திருநது!
விழித்திருக்கும் வேளையிலும்!
உடனிருந்து விளையாடி!
இமைமூடி இருக்கையிலும்-சேய்தன்!
பக்கத்தில் துணையிருந்து!
பார்த்திருப்பாள் காத்திருப்பாள்!
பிள்ளையவன் பெரிதாகி-அயல்நாடு!
பறந்த பின்னும் !
அவனுக்காக காத்திருப்பாள்!
கூட்டிப்போகவில்லை என்றாலும்!
கொள்ளிப்போட வந்திடுவான்-மகன்
s.உமா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.