விழியில் நீர் நிரம்ப!
கண்ணீர் வடிக்கின்றாய்!
வற்றாத ஜீவநதி போல!
தனிமனிதனை விரும்பாமல்!
தனிமையை விரும்புகின்றாய்!
கவிஞன் போல!
வகை வகையாய் வளையல் போட்டான்!
வண்ணம் வண்ணமாய் பொட்டும் வைத்தான்!
வருட கணக்கில் அழ வைக்கவா?!
வாழ்வதற்கெல்லாம் வசதி வேண்டாம்!
வலிமையான இதயம் போதும்!!
மறுவாழ்வை தேடம்மா!
மறுபிறவி நிச்சயமில்லை!!
வங்கக்கடல் பொங்கிய போது!
வாழமீன் போல சுருண்டுபோன!
மனிதர்கள் எத்தனையோ நினைவில்லை!
வாழத்தான் பிறந்திருக்கிறோம்!
வழிந்தோடும் கண்ணீரை துடைத்துக்கொண்டு!
வலிமையுடன் வாகைசூட போராடு!
நடப்பவையெல்லாம் நம்மில் இல்லை!
நம்பிப்கையோடு எழுந்திரு!
நலமோடு வாழ்!
நாட்டையே வெல.!!
கவிதை: கோ.வெற்றி!
தொடர்புக்கு: 93364439
கோ.வெற்றி