புறநகரில் ஒருவழிப் போக்கனாய்ப்!
பார்த்தது இது!!
வைகறை கலைந்த இளம் வெய்யில்!
வரிசையான கூடுகள் மேல் படியும்.!
முடங்கிய காகங்களின்!
முகம் தெரியவில்லை!!
காத்திருந்து பார்த்ததில்!
மொண்ணை மூக்குகள் ஒவ்வொன்றாய்!
வெளிப்பட்டு!
நியூஸ் பேப்பர், பால் பாக்கெட் கொத்தித்!
திரும்பும்.!
எல்லாம் அலகு தேய்ந்தவை!
(கூடு கட்டுதல் என்றால் சும்மாவா?)!
குஞ்சுகளுக்கு இரை ஊட்டி!
உண்ணுகின்ற வரையில் தலை காட்டாது!!
கரவாது கரைந்துண்ணல் எல்லாம்!
காலம் கரைத்துவிட்ட கற்பனை போலும்!!
இனி இரை தேடி!
அலகு தேய்க்க!
திக்கொன்றாய்ப் பறக்கும் என நான் அறிவேன்!!
நானும்!
மூக்கைத் தேய்த்தபடி முன் நடந்தேன்.!
!
-- சிதம்பரம் நித்யபாரதி
சிதம்பரம் நித்யபாரதி