தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

மனவெளியின் பிரதி!

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை
வானவெளி உடைவுகளுக்குள்!
அடைகாத்த கனவுகள்!
குஞ்சுகள் பொறித்து!
குதுகலமாக வெளியேறிய!
சிதைவடைந்த நாட்களாக!
இன்றைகள் ஆகிப் போயின!
நறுமனமிழந்த பூக்களை!
கொறித்து துப்பி!
அணில் வேடமிட்ட!
ஆலாக்களின் கால்களில்!
காலத்தின் சாவிகள்!
தொங்குவதை சகிக்க முடியவில்லை!
மரங்களின்!
நிழல் தேடி அலையும்!
ஒரு மைனாகுஞ்சி போல!
மனம் அலைந்து அழுகிறது!
தும்பி பிடிக்க!
தூண்டில் இட்டு!
வண்ணத்திப் பூச்சிகளை!
வேட்டையாடும் அரசியல்!
யாருக்குத் தெரியும்!
கெட்ட கனவாய்!
மறந்து எல்லாம்!
ஒன்றுமில்லை என்று!
நினைக்க!
என் நொண்டிக் கனவுகளுக்கு!
கால்கள் இல்லை!
என்னை விட்டு ஓடிவிட.!

திராவிடயாணம்.. வரலாற்றுக் குதிரை

கு.சிதம்பரம், சீனா
01.!
திராவிடயாணம்!
--------------------!
சீதையை !
லங்காவிற்க்கு கடத்தினான்!
திராவிடன் அன்று!
இராமாயணம் தொடங்கியது!
நவீன இராமன் அனுப்பிய!
வானரப் படைகள்!
திராவிடப் பெண்களின் !
மார்பைக் குத்தி குத்தி குத்தி!
குதறி குதறி எடுத்தது!
எதிர்வினைப் புரிந்தாள்!
திராவிட பெண்ணொருத்தி!
தன் மார்பை வெடித்து!
வீழ்ந்ததோராரிய விண்மீன்!
தொடங்கியது திராவிடயாணம்!
பதில் வினை!
ஊயிர்ப் பெற்றது!
இராமனின் அம்புகள்!
நவீன சிதையின்!
ஆயுத உதவி !
வெடிக்கிறது !
திராவிட இதயம்!
குருதி பாய்கிறது !
கடலில் வெள்ளமென !
குளிர்கிறது!
சீதையின் மனது!
கடல் !
நிறம்மாறி உருமாறி !
புலியென பொங்கியெழுகிறது!
தொடர்கிறது!
திராவிடயாணம்.!
!
02.!
வரலாற்றுக் குதிரை!
------------------------!
குதிரைக்கு !
கொம்பு முளைத்தால்!
உலகம் !
அழிந்து விடும்!
திராவிடன் ஒலித்தது!
கற்பனையல்ல!
வரலாற்றுக் குதிரைக்கு!
கொம்புகள் !
முளைக்க வைத்தான்!
ஆரியன் அன்று!
அழிந்தது திராவிட!
வரலாற்று நாகரீகம்!
இன்றும்!
ஈழதேசத்தை!
அழித்து வருகிறது!
ஆரியக் குதிரைகள்!
கொம்புகளை நீட்டி!
அன்பைக் கொண்டு!
தேசத்தை பாதுகாப்பதால்!
திராவிடனுக்கு!
கொம்புகள் முளைக்கவில்லை !
முளைத்தால்!
ஆரியம் அற்றுப்போய்விடும்!
!
-கு.சிதம்பரம்,சீனா

ஒட்டு மாமரம்

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) !
அந்தப்பக்கம் போய் !
ஆண்டுகள் ஆகிவிட்டன !
ஒரே ஊருக்குள்ளிருந்தும் !
எட்டிப்பார்க்காமல் திரும்பியது !
என் மனத்தில் சுமைதான் !
அதன் நினைவையும் !
நிழலையும் !
நான் அதிகமாகத்தான் !
எழுதியிருந்தேன் என்பதைவிட !
ஆழமாய் உணர்ந்து !
அவதிப்பட்டிருக்கிறேன் !
எட்டிப்பார்க்காததை எண்ணி !
அது ஏதோ வாய்திறந்து !
அழுவதாக நினைத்து !
மனம் தானாகக்கனத்துக் !
கரைகிறது கண்களில் !
கோடையின் வாடையை !
வரவிடாமல் தடுத்த !
அதன் அடர்த்தியை !
உணர்ந்தவர்கள் எல்லாம் !
கைதிகள் ஆனார்கள் !
விடுதலை வேட்கையை !
விட்டுத்தொலைத்தார்கள் !
சூரியக்குதிரைகள் !
நுழைய முடியா !
அடர்த்தி அரண் !
நான் !
அதன் அணைப்பில் !
தூங்கி விழித்தவன் !
அதன் பரிசுகளைச் !
சுவைத்து ருசித்தவன் !
எப்போதோ வரும் !
மின்னல் நினைப்போடு இருந்துகொண்டு !
எழுதிக்குவிப்பதில் !
எத்துணைப் போலித்தனம் !
என்னிடம்

ஐயாசாமியின் ரிஷிமூலம்

வசந்தகுமார்
மகனிடம் வட்டியும் முதலுமாய்!
செலுத்தும் ஒப்புதலுடன்தான்!
அப்பாவிடம் கடன் வாங்கினோம்!
ஒரு சிலருக்குத்தான்!
ஓப்புதல்படி திருப்பிசெலுத்தும்!
வாழ்க்கை அமைகிறது.!
சிலர் முதல் மட்டும்!
திருப்பிச்செலுத்துகின்றனர்!
சிலர் வாழ்க்கை முழுவதும்!
வட்டிமட்டும் செலுத்துகின்றனர்!
சிலர் எதையும் செலுத்தமுடியாமல்!
சாமியாகிவிடுகின்றனர்!
சாமியாகியவனின் மகனின் கண்ணுக்கு!
வீதியில் தெரிவோரெல்லாம்!
தகப்பன்சாமியாய் தெரிகிறார்கள்!
நம்மிடம் ஐயா சாமி என்றபடி!
கடனை திருப்பிக்கேட்கிறான்!
நாம் அவனை பிச்சைக்காரனென்கிறோம்

ரயில்.. கோடுகள்.. மவுன விளையாட்டு

என். விநாயக முருகன்
ரயில் ‌விளையா‌ட்டு.. கோடுகள்.. மவுன விளையாட்டு!
01.!
ரயில் ‌விளையா‌ட்டு!
----------------------------!
வரிசையாக ஐந்து வாண்டுகள்!
ஒன்றின் இடுப்பை!
ஒன்று பிடித்து ‌விளையா‌ட!
காடு மலை பள்ளமென்று!
சளைக்காமல் சென்றது ரயில்.!
நடுவில் திடீரென!
மண்டிப்போட்டு தவழும்!
குழந்தையொன்று வர!
திடீரென பதறிப்போய்!
நின்றது ரயில்.!
நானும் ச்சும்மாங்காட்டி!
ரயில் கடக்கும் வரை!
காத்திருந்து நடந்தேன்.!
02.!
கோடுகள்!
--------------!
கையெழுத்து நேராக!
வரவேண்டுமென்பதற்காக!
கோடுப்போட்ட நோட்டு!
ஒ‌ன்றை வாங்கி தந்தேன்!
ஐந்து வயது‌ மகளுக்கு.!
எப்படி முயற்சித்தும்!
எவ்வளவு திட்டினா‌‌‌லும்!
கோட்டுக்குள் அடங்க மறுத்து!
வெளியே வெளியே!
வ‌ந்து விழுந்தன எழுத்துக்கள்.!
கோபத்தில் இரண்டு அடியும்!
வைத்தேன். சற்றுக் கழித்து!
கோடுபோடாத நோட்டொன்றில்!
கிறுக்கியவள் எழுத்துக்களுக்கு!
ஏற்றாற்போல அழகாக கோடுகள்!
வரைந்து என்னிடம் நீட்டினா‌‌‌ள்.!
03.!
மவுன விளையாட்டு!
-------------------------!
வீட்டு விசேசமொன்றிற்கு!
வ‌ந்த குழந்தைகள்!
இங்கும் அங்குமாய்!
ஆடி ஓடி கூச்சலிட்டு!
துரத்திக்கொண்டு!
ஆர்ப்பாட்டமாய் விளையாடினா‌‌‌ர்கள்.!
யாரோ அதட்டினா‌‌‌ர்கள்.!
சொன்னா ‌‌‌கேக்க மாட்டீங்க?!
மவுனமாக விளையாடுங்க.!
பிறகு குழந்தைகள்!
மவுனத்தை கத்தியபடியே!
அறையெங்கும் ஆடி ஓடி!
அலைந்து சொன்னார்கள்

பிரிவின் சாசனம்

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
ஏதாவது சொல் என்றேன் !
என்ன சொல்ல என்றாய்?!
எதையாவது சொல்லி !
இருக்கலாம் நீ.!
பிரிவின் சாசனமாய் !
ஒரு பதிலாவது !
எஞ்சியிருக்கும்!
நமக்குள்.!
!
-செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி

நீயுமா புரூட்டஸ் ?

சத்தி சக்திதாசன்
நெஞ்சத்தின் சோகத்தையும்!
நிகழ்வுகளின் பாரத்தையும்!
நீ கொண்டு துவண்டபோது!
நானுன்னைத் தேற்றினேன்....!
உறவுகளின் பிணைப்பினால்!
உள்ளத்தில் வடுக்களோடு!
உணர்வுகளால் துளைக்கப்பட்டு!
உடைந்து போன உன்னை!
தூக்கி நானும் நிறுத்தி!
தோளில் நன்றாய்த் தாங்கி!
நேரான வாழ்க்கை நோக்கி!
நடைபோட உதவினேனே.....!
தோழா !!
காலமகள் தோட்டத்திலே!
காற்றின் திசை மாறியதால்!
கண்ணீர் காய்ந்து உன் முகம்!
கவலை மறந்து சிரிக்கிறது!
வாழ்வென்னும் பாதையிலே!
கடந்து வந்த பாதையெல்லாம்!
கண்ட மனிதர் பலரும் இன்று!
கத்தி முதுகில் ஏற்றினாரே !!
ஒரேயரு கத்தி மட்டும்!
ஓரடி ஆழப் பாய்ந்து என்னை!
ஒருமுறை அலற வைத்தது!
ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்தேன்!
ஜயகோ !!
கத்தியை ஏற்றிய கை!
ஏற்றியபடி நிற்கின்றாய்!
எனதருமை நண்பன் நீ!
என்னெஞ்சில் ஒரு நினைவு!
அன்றொருநாள் ரோமாபுரியிலே!
யூலியஸ் சீசர் முதுகில் கத்திகள்!
திரும்ப்பிப் பார்த்தவன் திகைப்புடன்!
நீயுமா புரூட்டஸ் என்கிறான்!
என்னெஞ்சைத் தைத்த முட்களில்!
எண்ணத்தினால் தாலாட்டிய!
என் இனிய நண்பன் நீ!
எறிந்த முள்ளே ஏனோ!
அதிகமாய் வலிக்குதடா !!
-சக்தி சக்திதாசன்

விட்டுப்போன இன்னிசை

செளந்தரி
வாழ்வோடும் சாவோடும்;!
போராடும் மனிதர்களை!
வாழவைக்கும் தாய்நாடே!
உறவுகளைத்தேடி!
ஓடுகின்றது என்மனசு.!
வரவு செலவுப் பதிவும்;!
கொடுத்து வாங்கும் நட்பும்!
பாதிவாழ்வை கொன்று போட்டது;!
அனுபவங்கள் வலிக்கிறது!
ஆயிரம் படிகள் ஏறியும்!
அமைதி கிட்ட மறுக்கிறது!
அமைதியைத் தேடி!
ஓட நினைக்கும் ஓரிடம்!
தாயும் தாய்மண்ணுமே!!
கொட்டித்தந்த செல்வத்தை!
தத்துக் கொடுத்தது போல்!
கைவிட்டு வந்துவிட்டேன்!
எந்த சுகமும் இனிக்கவில்லை!
விட்டுப்போன இன்னிசை!
புயலாக முட்டி மோதுகிறது,!
காற்றோடு பேசும் நெல்மணிகள்!
தலைசாய்த்து வாஎன்று அழைக்கிறது!
களவாக உறவாடும் முகில் கூட்டம்!
கவிதையை மழையாக பொழிகிறது!
நினைவுகளின் போராட்ட முடிவில்!
கால்முத்தம் மண்ணில் பதிக்கிறது.!
வழமைபோல்!
நெல்மணிகள் கதைபேசும்;!
மாமரங்கள் மூச்சுவிட்டுக் காய்க்கும்;!
கட்டிடங்கள் அத்திவாரத்தில் ஏறும்;!
கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்!
கண்ணைப்பறிக்கும் நாவற்பழமும்!
ஆட்டிறச்சிப் பங்கும்!
கோழிக்கறி மொச்சையும்!
ஊரெல்லாம் மணக்கும்;!
சின்னஞ்சிறு வீதிகளில்!
என் கால்களும் பதியும்.!
சிதறிய உறவுகளும்!
சிணுங்காது வந்திறங்க!
புதியபாலம் திறக்கும்!
எண்ணத்தில் தோன்றும் ஆசையிது!
காலம்தான் காட்டவேண்டும் பாதை.!
ஓ! என் தாய்நாடே!
சொந்தமண்ணையும்!
இந்தப்பெண்ணையும்!
தொடுத்த தொப்புள்கொடி!
அறுந்தவிதத்தை எண்ணிப்பார்க்கிறேன்!
மீண்டும் வலிக்கின்றது!!
செளந்தரி

ஏமாற்றங்களின் ஏக்கங்கள் என்னிடமில்லை

ச.ச.ஐஸ்வர்யா
ஏமாற்றங்களே !
வாழ்க்கையாகிப்போனதால்.. !
அதைப்பற்றிய ஏக்கங்கள் !
என்னிடமில்லை..! !
ஆனால் !
அதன் பெறுமதியை பற்றி !
என்னிடம் கேளுங்கள் !
அன்று, உங்களுக்கும் !
புரியும் இவள் !
பட்ட துன்பத்தின் நீளம்! !
“அனலை தீண்டும் தென்றல்” !

தூற்றி உயர்வதுவும் தொல்லுலகில் ஆகாதே

எசேக்கியல் காளியப்பன்
தமிழுக்கே உயிரென்று தண்டவாளம் மேல்படுத்தோர்!
உமிழ்ந்திட்ட தெல்லாமும் ஒருமொழிமேல் விடமன்றோ?!
அமிழ்தென்றே கூறியவர் அதைப்பாட மொழியாக்க!
உமிழ்ந்தாரோ ஒருசொல்லும்? ஊர்,ஏய்ப்பே எல்லாமும்!!
வேற்று மொழிபடித்து வெளிநாட்டு வேலையையே!
போற்றி அவர்தொடரப் போவதுவும் அதனாலே!!
தூற்றி அதனால்தான் தூயதமிழ்ப் பெயர்சொல்லார்!!
சேற்றில் இறக்கிவிட்டச் செம்மல்களை நினையுங்கள்!!
தூற்றி உயர்வதுவும் தொல்லுலகில் ஆகாதே!!