ஒட்டு மாமரம் - பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

Photo by engin akyurt on Unsplash

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) !
அந்தப்பக்கம் போய் !
ஆண்டுகள் ஆகிவிட்டன !
ஒரே ஊருக்குள்ளிருந்தும் !
எட்டிப்பார்க்காமல் திரும்பியது !
என் மனத்தில் சுமைதான் !
அதன் நினைவையும் !
நிழலையும் !
நான் அதிகமாகத்தான் !
எழுதியிருந்தேன் என்பதைவிட !
ஆழமாய் உணர்ந்து !
அவதிப்பட்டிருக்கிறேன் !
எட்டிப்பார்க்காததை எண்ணி !
அது ஏதோ வாய்திறந்து !
அழுவதாக நினைத்து !
மனம் தானாகக்கனத்துக் !
கரைகிறது கண்களில் !
கோடையின் வாடையை !
வரவிடாமல் தடுத்த !
அதன் அடர்த்தியை !
உணர்ந்தவர்கள் எல்லாம் !
கைதிகள் ஆனார்கள் !
விடுதலை வேட்கையை !
விட்டுத்தொலைத்தார்கள் !
சூரியக்குதிரைகள் !
நுழைய முடியா !
அடர்த்தி அரண் !
நான் !
அதன் அணைப்பில் !
தூங்கி விழித்தவன் !
அதன் பரிசுகளைச் !
சுவைத்து ருசித்தவன் !
எப்போதோ வரும் !
மின்னல் நினைப்போடு இருந்துகொண்டு !
எழுதிக்குவிப்பதில் !
எத்துணைப் போலித்தனம் !
என்னிடம்
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.