தேவமைந்தன் !
அன்பரே, தற்பொழுது என் பரிணாமம் !
இந்த 'ஜங்க்' காலத்துக்கு ஏற்பவே. !
பொருளாதாரம் - அகம்புறம், !
வீட்டிலிருந்து நாடு, !
நாட்டிலிருந்து வீடு.. வீங்கி. !
சதா விளம்பரங்கள் துண்டித்தும் !
தொடர்ந்து தொடர்கள் பார்த்து-- !
அழுது, விசும்பி, சிரித்து, அதே வசனங்களை !
வாய்ப்பு நேர்கையில் விடாதென் குடும்பத்திலும் விளம்பி--- !
வேறுவீடு பார்த்து, தனிவிலகிப்போய், !
என்னிலிலிருந்தே என்னை விலகவைக்கும் - வினோத !
ஊடக வார்த்தைகளுக்கெல்லாம் விடாமல் செவிகொடுத்து, !
கடனோ உடனோ கால்பிடித்து கைபிடித்து வாங்கி; !
'இங்க்லீஷ் பேப்பர்' வாங்கி, அப்படியே !
மடித்த மடிப்புக் குலையாமல் அடுக்கியே வைத்து !
'வெய்ட்'டுக்குப் போட்டு; அற்பச் சிறுதொகை !
அதையும் கூட அடுத்தபெருஞ் செலவுக்கு !
அச்சாரமாக்கும் நடுத்தரக் குடிமகன், !
வேறுஎன் செய்வேன்? விலகியே வாழ்வேன். !
சம்பளம் வாங்கும் வேலைப் பொறுப்பும் !
ஒழுங்காய் வாழும் வாழ்க்கைப் பொறுப்பும் !
சுற்றிச் சூழும் நீர்போல் எனக்கு. !
எதிரிகள் பலப்பலர். !
விலகி விலகியே நீச்சல் அடிப்பேன். !
நண்பர்கள் மாறுவர் நாளும் எனக்கு. !
எவர் என்ன ஆனாலும் எப்படிப் போனாலும் எனக்கென்ன? !
பயன்பெறு; தூக்கியெறி - என்பதுஎன் !
புனித வாசகம். !
''பயன்பெற வாயாத யாரும் எதிர்வந்தால் !
பாராமல் போயே பழகு'' - அடியேனின் !
புதிய குறள். !
தகவமைப்பு உயிர்களை உருவாக்கும் !
என்பது அறிவியல். என்றால் நிகழ் உலகில் !
மீனாகவே இருப்பேன் நான். !
A.Pasupathy(Devamaindhan)