தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

சிகத்த இருட்டு

துறையூரான் அஸாறுடீன்
எந்தன் சதிரத்தில் நெய் உருக்கும் - இந்த!
வேண்டாத இரவுகளை!
விரும்பியும் விரும்பாமலும் வரவேற்கிறேன்...!
மலர்கள்.. மணங்கள் மற்றும்!
பழங்கள் எனப் பல ரசங்களோடும்!
கத்தி கறண்டி கைவிரல்கள்!
இன்னும் பலவாய் ஆயுதங்கள்!
அழகழகாய் இருந்திட்டும் - என்னை!
கடித்துச்சப்பி கறுமுறென்ற!
கோர உணர்ச்சிகளின் துவம்சத்தால் - என்!
சதிரத்தில் வட்டமாயும் நீட்சியாயும்!
குறுக்கு மறுக்காய்ப் பல கீறல்கள்!
பரந்த வலைப்பின்னலதுவாய்...!
தேகத்தைத் தேடிவரும்!
வேண்டாத இந்த இரவுகள் - இனி!
சிகப்பாய் இருட்டும்...!
-துறையூரான் அஸாறுடீன்-!
இலங்கை

கருங்குளிராடி

அன்பாதவன்
=============!
நுழைகிறேன் அசந்தோஷமாய்!
மிகவும் மகிழ்வாய் உணரத்தலைப்படும்!
நிகழ்வொன்றில்!
ஒப்பனைகளின் புனைவுகளால்!
தனியனாய் காட்ட யத்தனிக்கையில்!
தேவையாயிருக்கிறதொரு முகமூடி.!
விரும்பா விழிகளை நேராய்ச் சந்திக்க!
விருப்பமின்மையில்!
கருங்குளிராடியொன்று!
கண்மூடியானது.!
பால்ய சிநேகிதங்களும்!
முகவரி மறந்த உறவுகளும்!
புதுப்பித்துக் கொண்டன!
ஸ்பரிச உரையாடல்களூடாக...!
இலகுவாய் மனமுணர்ந்த தருணமொன்றில்!
காணாமல் போயிருந்தது!
கருங்குளிராடி.!
@அன்பாதவன்

காயமும்... புற்று... சுயத்தின்

ரசிகவ் ஞானியார்
1.காயமும்!
பிரியங்களின் ஆளுமை!
சிலநேரங்களில்..!
காயப்படுத்துகிறது!!
காயத்தின் காரணமும்…!
காதல்தான்!!
காதலை உருக்கி நீ!
காயப்படுத்து!!
காயத்தை உருக்கி நான்!
காதல்படுத்துகின்றேன்.!!
2. புற்று!
பிரவேசிக்க வேண்டாம்!!
பட்டாம்பூச்சிகளின் காவலில்..!
பாம்புகள்!
மேய்ந்துகொண்டிருக்கிறது...!
என் அறைக்குள்!!
பாம்புகள்!
பட்டாம்பூச்சிகளாகும்போது...!
நான் அழைக்கிறேன்!!
அதுவரை!
பட்டாம்பூச்சிகளை மட்டும் ...!
ரசியுங்கள்!!
3.சுயத்தின் திமிர்!
சாதாரண இருக்கைக்காக!
என்னுடன்..!
சண்டையிடும்!
சக பயணியே..!
உனக்குத் தெரியுமா?!
நேரத்திற்கு மேல்!
வேலைப்பளு தருகின்ற...!
மேலதிகாரிக்காவது தெரியுமா..?!
எனக்கு!
தேநீர் தருவதற்கு!
தாமதமாக்குகின்ற...!
கடைக்காரனுக்குத் தெரியுமா?!
என்னிடம் வந்து..!
பயணச்சீட்டு சோதிக்கும்!
பரிசோதகருக்காவது தெரியுமா?!
என்!
யதேச்சைப் பார்வைக்குக் கூட,!
முறைத்துப்பார்க்கும்..!
பெண்டிர்கள் அறிவார்களா?!
நான் ஒரு கவிஞன் என்று?!
- ரசிகவ் ஞானியார்

நிலாவனம்

நெப்போலியன் சிங்கப்பூர்
* !
வானத்துக்கன்னி !
வனங்களின் மீது !
உமிழ்கிறாள் !
இரவின் பசியை. !
ஆலிங்கனப் பிணைதலில் !
இடைப்பட்ட ஒளிக்கீற்றால் !
விலகி ஒளியும் !
இருளின் பாம்புகள். !
விருட்சக் கிளைகளின் !
உச்சி முகர்ந்து !
மேனியெங்கும் !
விரிக்கும் விரல்களால் !
வேர் வெறி கொண்டாட !
கூடுகள் நொறுங்கும் !
கானகக் கலவியால். !
அந்தியின் சருகுகள் !
குளுமை குடித்து !
அலையும் காற்றுடன் !
கட்டிப் புரள !
ஒற்றைக்கண் ஏவலால் !
காட்டின் காமம். !
அம்புலியின் ஏக்கம் !
அடர்வுகளால் கரைக்கப்பட !
புலர்தலின் தீண்டலால் !
விழிக்கும் வனம், !
மீண்டும் !
பகல் பொறுக்கும் !
மற்றுமொரு !
இரவின் !
வருகைக்காய். !
-- *நெப்போலியன் !
சிங்கப்பூர்

முகமில்லாத மனிதன்

தீபச்செல்வன்
எழுதியவர்:தீபச்செல்வன்!
!
முகமில்லாத மனிதனின்!
புன்னகை!
அந்த இரவுக்குள்!
தொலைந்துகொண்டிருந்தது.!
இது வேறுஒரு செயற்கை இரவு. !
முதலில் இரவை சிறைவைத்தார்கள்!
பிறகு இரவாய் நாளை!
சிறைவைத்தார்கள்!
பிறகு நாட்டை சிறைவைத்தார்கள்!
இந்த செயற்கை இரவு!
காலத்தை படர்ந்து!
விழுங்கிக்கொண்டிருந்தது.!
இனந்தெரியாத துப்பாக்கிகளும்!
வெள்ளை வான்களும் !
இராணுவ முகாம்களும்!
மனிதர்களை இந்த இரவில்!
தேடித்திரிய தொடங்கியது.!
இரவில் முகங்கள் புதைந்தன.!
மரணத்தை ஊதி பெருப்பித்து!
அழுகைகளை நிரப்பி!
இரவால் நாடு செய்தார்கள்.!
இரவின் தெருவில்!
நிதானமற்று எல்லோரும் !
அலையத்தொடங்கினோம்!
அடங்கிப்போய்!
இருட்டில் அடைந்தோம்.!
இரவு இன்னும் ஆக்கிரமித்தது.!
இருட்டில் எழுதி!
இருட்டில் கேட்டு!
இருட்டில் திருகி!
இருட்டாகி போகிறது!
முகங்களும் புன்னகையும்.!
இரவுக்காக ஒருவன் !
அழுதுகொண்டிருந்தான்!
இரவும் அழுதுகொண்டிருந்தது

அவனவன் பாடு

செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி
கண்டு கொள்ளாமல்!
இருந்திடல் கூடும்!
சிலருக்கு.!
கண்டு கொண்டாலும்!
கைவசப்படுவதில்லை!
சிலருக்கு.!
கண்டதையும் கொள்வதிலும்!
உண்டு!
கணிசமான சிக்கல்கள்.!
அவனவன் பாடு.!
சிலதை கண்டு கொள்ளாமல் இருப்பதும்.!
சிலதை கண்டும் கொள்ளாமல் இருப்பதும்.!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி

தகிக்கும் கூடு

கருணாகரன்
காயங்களிலிருந்து !
வெளியேறிய பறவை!
தன்னுடன் எடுத்துச் செல்கிறது!
தன் அழகிய மலரை!
தன்னுடைய பெருந்தீயை !
தன் கடலை!
தன் வெளியை !
அதனிடமில்லை!
மீண்டும் !
கூடு திரும்பும்!
நினைவின் நிழல்!
அது செல்லும் வழியில்!
தன் சிறகுகளையும்!
கொடுத்துச் செல்கிறது காற்றிடம்!
வலிகளைக்கடந்து போகும் பயணம்!
வெறுமையை !
நிரப்பிவிடுகிறது கூட்டினுள்!
பறவையின் ஆறாச் சூட்டில்!
தவிக்கின்றது கூடு தனியே

வாசல்

கலாநிதி தனபாலன்
வார்ப்பின் வாசல் திறந்து !
வருகிறேன் !
இணைய வலையில் !
இலக்கியம் பகிரும்!
கவிதைக் காதலி !
வளர்மதி வார்ப்பின்!
வாசலில் வந்து!
இரு கரம் நீட்டி என் !
இலக்கியம் தருகிறேன்!
இணைத்துக் கொள்வாளோ?!

ஒரு பூச்செண்டு போதும்

ருத்ரா
ஓ! மானிட உலகமே!!
உன் முயற்சிகள் மகத்தானது!
உன் வெற்றிகள் சிறப்பானது!
கல்லும் மண்ணும்!
உன்னை தன் காலடியில் போட்டு!
ந‌சுக்கிய‌ போது அதிலிருந்து!
ந‌க‌ர‌ங்க‌ள் ஆகினாய்!
காட்டுத்தீ சுட்டுப்பொசுக்கிய‌ போது!
அதிலிருந்து!
அறிவுத்தீ கொளுத்தினாய்!
காற்று உன்னை!
சுழ‌ற்றி வீசிய‌போது!
அதில் ப‌ற‌க்க‌வும் க‌ற்றுக்கொண்டாய்!
க‌ட‌ல் உங்க‌ளை விழுங்கிய‌போது!
அதில் மித‌க்கும் தீவுக‌ளாய்!
மேலே எழுந்தாய்!
உன் ஆராய்ச்சி அறிவுக்கு!
எல்லையே இல்லை!
அத‌னால் இந்த‌!
விண் பிண்ட‌ங்க‌ள் கூட!
உன்!
தின் ப‌ண்ட‌ங்க‌ள் தான்!
செவ்வாயிலும் ச‌ந்திர‌னிலும்!
கூடு கட்ட‌!
உன் இற‌க்கைக‌ள்!
ப‌ல‌ கோடி ஒளியாண்டுக‌ளையும்!
தாண்டி ப‌ற‌க்க‌த்தொட‌ங்கிவிட்ட‌து!
கொல்லும் வெறியோடு!
கூர் ந‌க‌மும் கோர‌ப்ப‌ற்க‌ளும்!
கொண்ட‌ வ‌டிவ‌ங்க‌ளையெல்ல‌ம்!
தாண்டி..!
நீ!
ப‌ல ஒலிம்பிக் விளையாட்டுக‌ளில்!
வென்று!
நாக‌ரிக‌ம் எனும் ப‌த‌க்க‌ம்!
தாங்கி நிற்கிறாய்!
இதில் தோற்றுப்போன‌வை!
அதோ அந்த‌!
ஃபாசில்க‌ளின் ப‌டுக்கையில்!
கிட‌க்கின்ற‌ன‌!
உன‌க்கு பாட‌ம் சொல்லிக்கொண்டு!
இத‌ன்!
உள் விசை என்ன‌ தெரியுமா?!
ஆம்! !
காத‌ல் தான் அது.!
ம‌னித‌ன் ம‌னித‌னை நேசிக்கும்!
மாபெரும் ச‌க்தி அல்ல‌வா அது!!
இந்த சிறு உண்மையா!
இந்த‌ பேர‌ண்ட‌த்தைக்கூட‌!
என் கைக்குட்டையாக்கி!
என‌க்கு த‌ந்திருக்கிற‌து!!
உன‌க்கு சிரிப்பு வ‌ருகிற‌து!
உன‌க்கு விய‌ப்பு வ‌ருகிற‌து!
என் இனிய‌ ந‌ண்ப‌னே!!
உன் முதுகுக்குப்பின்னே!
இன்னும்!
அதிர்ச்சி த‌ருப‌வை!
ஆயிர‌ம் ஆயிர‌மாய் காத்திருக்கிற‌து!
அவற்றையெல்லாம் வெல்லும்!
உன் முக‌த்தின் ஒளி!
பூவின் முறுவ‌ல் போல்!
சுட‌ர்கின்ற‌து!
நீ வெல்ல‌ப்பிற‌ந்த‌வ‌ன் தான்!
குறுகிய‌ வெறிக‌ளையெல்லாம்!
குறி வைத்து தாக்கிவிடு!
நீ ஆள‌ப்பிற‌ந்த‌வ‌ன் தான்!
அன்பால்!
அது நிறைந்த‌ உள்ள‌த்தால்!
நீ ஆள‌ப்பிற‌ந்த‌வ‌ன் தான்!
உயிர்க‌ள் தின்னும்!
இந்த‌!
குண்டுக‌ளை நோக்கி!
ஒரு பூச்செண்டு போதும்!
உன‌க்கு!
காத‌ல‌ர் தின‌த்தின்!
க‌ன‌ ப‌ரிமாண‌மே இது தான்!
இத‌ய‌ம் திற‌ந்து கொள் என்!
இனிய‌ ந‌ண்ப‌னே

இருப்பதிகாரம்

வ.ந.கிரிதரன்
இருப்பொன்று போதாது !
இருத்தல் பற்றியெண்ணி !
இருத்தற்கு! !
- வ.ந.கிரிதரன் - !
!
படைப்பின் நேர்த்தியெனைப் !
பிரமிக்க வைத்திடுதல்போல் !
பாரிலெதுவுமில. !
வீழும் மலர், ஒளிரும் சுடர், !
துணையில் களிப்புறும் இணை, !
நிலவுமனைத்திலுமிங்கு !
நிலவும் நேர்த்தியென் !
நினைவைக் கட்டியிழுத்தல்போல் !
நினைவெதுவுமில. !
முறையெத்தனையெனினும் !
மறையாத நினைவுப் புயல்! !
இருப்பு, இன்னும் புதிர் மிகுந்து !
இருந்திடுமோ? இல்லை !
இதுவும் 'நிச்சயமற்றதொரு !
தற்செயலின்' !
சாத்தியம் தானோ? !
இருப்பொன்று போதாது !
இருத்தல் பற்றியெண்ணி !
இருத்தற்கு! !
---------------------------------------------------------- !
இருப்பதிகாரம் !
- வ.ந.கிரிதரன் - !
நிலை மண்டில ஆசிரியப்பா! !
!
வானினை நிலவினை வரையினை மடுவினை !
தேனினை யொத்த சொல்லினை உதிர்க்கும் !
அணங்கினை அகன்ற இடையினைத் தனத்தினை !
மீறிட முடியா சிந்தையை மேலும் !
தேனிசை சிற்பம் சித்திரம் கலைகள் !
மொழியும் இனமும் மண்ணும் பொன்னும் !
குதலைக் குறும்பும் அன்பும் சிரிப்பும் !
ஆட்டியே வைக்கும் மீட்சி யுண்டா? !
என்றென் துயரும் பிடிப்பும் சாகும்? !
விரியு மண்ட மடக்கு மண்டம் !
அதனை யடக்க மற்றோ ரண்டம். !
வெறுமை வெளியில் பொருளின் நடனம். !
இதற்குள் துளியெனக் கரையு மிருப்பு. !
இதுவும் நிசமா நிழலாக் கனவா? !
நனவும் கனவா? கனவும் நனவா? !
விடைகள் நாடித் தொடரும் வினாக்கள். !
விடைக ளற்ற வினாக்கள்! வினாக்கள்! !
இருப்பு அறிந்திட தேடித் தொடரும் !
இருப்பே எந்தன் வாழ்வே வாழ்வே! !
இதனை அறிதல் புரித லெவ்விதம்? !
நூலினைக் குருவினை அறிவினை உணர்வினைக் !
கோளினைச் சுடரினை வெளியினை விரிவினை !
வாழ்வினைத் தாழ்வினைத் துயரினை மகிழ்வினை !
அறித லெவ்விதம்? புரித லெவ்விதம்? !
கலவிக் குலாவி யிருந்திடு மவைகளாய் !
இருந்தே யிருப்பின் இவ்வித இடரெலாம் !
இல்லா தொழிந்து இருந்தன்றோ இருக்கும்? !
செயற்கை சமைத்திட சிந்தை தந்த !
செயலினால் தானோ செகத்தினில் துயரோ? !
அன்பினை ஆக்கிட அறிவினைப் பாவிக்க !
என்னவர் உன்னவர் நம்மவர் மறந்திட்ட !
பண்பினால் தானோ பாரினில் பகைமை? !
தாமரை இலைமேல் தண்ணீர் போன்று !
தரணியில் வாழ்ந்திடும் பக்குவம் கொண்டு !
நானினைச் சித்தினை அசித்தினை அறிந்து !
விருப்பு விட்டு வாழ்ந்திடும் தன்மை !
வந்திடு மென்றால் அதுவே போதும். !
வேறு.... !
அந்திக் கதிரின் சிவப்பில் நாளும் !
சிந்தை யிழந்து இருத்த லின்பம்! !
இரவில் வானில் நீந்தும் மீன்கள் !
வரவி லிதயம் மூழ்கிக் களிக்கும். !
விசும்பும் மதியும் கதிரும் காற்றும் !
புள்ளும் மற்று மிருக்கு மனைத்தும் !
படைப்பின் திறனை பறையே சாற்றும். !
இன்ப வெள்ளம் மடையை யுடைக்கும். !
கூகைக ளுலாவிடும் நள்யாமப் பொழுதும் !
அகத்தினி லுவப்பினை யேற்றி வைத்திடும். !
உறவினை உதறி யுண்மை அறிதல் !
துறவென ஆயிடு மதனா லதனை !
ஏற்றிடே னானால் உள்ளி ருந்தே !
உண்மை காணலே சிறந்ததோ தறியேன். !
எவ்வித மிருப்பின் உண்மை அறிவேன். !
உளையு முளத்தின் உளைவை எவ்விதம் !
தணிப்பேன் தணித்துப் பதிலை அறிவேன்?