நெஞ்சத்தின் சோகத்தையும்!
நிகழ்வுகளின் பாரத்தையும்!
நீ கொண்டு துவண்டபோது!
நானுன்னைத் தேற்றினேன்....!
உறவுகளின் பிணைப்பினால்!
உள்ளத்தில் வடுக்களோடு!
உணர்வுகளால் துளைக்கப்பட்டு!
உடைந்து போன உன்னை!
தூக்கி நானும் நிறுத்தி!
தோளில் நன்றாய்த் தாங்கி!
நேரான வாழ்க்கை நோக்கி!
நடைபோட உதவினேனே.....!
தோழா !!
காலமகள் தோட்டத்திலே!
காற்றின் திசை மாறியதால்!
கண்ணீர் காய்ந்து உன் முகம்!
கவலை மறந்து சிரிக்கிறது!
வாழ்வென்னும் பாதையிலே!
கடந்து வந்த பாதையெல்லாம்!
கண்ட மனிதர் பலரும் இன்று!
கத்தி முதுகில் ஏற்றினாரே !!
ஒரேயரு கத்தி மட்டும்!
ஓரடி ஆழப் பாய்ந்து என்னை!
ஒருமுறை அலற வைத்தது!
ஓரக்கண்ணால் திரும்பிப் பார்த்தேன்!
ஜயகோ !!
கத்தியை ஏற்றிய கை!
ஏற்றியபடி நிற்கின்றாய்!
எனதருமை நண்பன் நீ!
என்னெஞ்சில் ஒரு நினைவு!
அன்றொருநாள் ரோமாபுரியிலே!
யூலியஸ் சீசர் முதுகில் கத்திகள்!
திரும்ப்பிப் பார்த்தவன் திகைப்புடன்!
நீயுமா புரூட்டஸ் என்கிறான்!
என்னெஞ்சைத் தைத்த முட்களில்!
எண்ணத்தினால் தாலாட்டிய!
என் இனிய நண்பன் நீ!
எறிந்த முள்ளே ஏனோ!
அதிகமாய் வலிக்குதடா !!
-சக்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன்