வாழ்வோடும் சாவோடும்;!
போராடும் மனிதர்களை!
வாழவைக்கும் தாய்நாடே!
உறவுகளைத்தேடி!
ஓடுகின்றது என்மனசு.!
வரவு செலவுப் பதிவும்;!
கொடுத்து வாங்கும் நட்பும்!
பாதிவாழ்வை கொன்று போட்டது;!
அனுபவங்கள் வலிக்கிறது!
ஆயிரம் படிகள் ஏறியும்!
அமைதி கிட்ட மறுக்கிறது!
அமைதியைத் தேடி!
ஓட நினைக்கும் ஓரிடம்!
தாயும் தாய்மண்ணுமே!!
கொட்டித்தந்த செல்வத்தை!
தத்துக் கொடுத்தது போல்!
கைவிட்டு வந்துவிட்டேன்!
எந்த சுகமும் இனிக்கவில்லை!
விட்டுப்போன இன்னிசை!
புயலாக முட்டி மோதுகிறது,!
காற்றோடு பேசும் நெல்மணிகள்!
தலைசாய்த்து வாஎன்று அழைக்கிறது!
களவாக உறவாடும் முகில் கூட்டம்!
கவிதையை மழையாக பொழிகிறது!
நினைவுகளின் போராட்ட முடிவில்!
கால்முத்தம் மண்ணில் பதிக்கிறது.!
வழமைபோல்!
நெல்மணிகள் கதைபேசும்;!
மாமரங்கள் மூச்சுவிட்டுக் காய்க்கும்;!
கட்டிடங்கள் அத்திவாரத்தில் ஏறும்;!
கறுத்தக்கொழும்பான் மாம்பழமும்!
கண்ணைப்பறிக்கும் நாவற்பழமும்!
ஆட்டிறச்சிப் பங்கும்!
கோழிக்கறி மொச்சையும்!
ஊரெல்லாம் மணக்கும்;!
சின்னஞ்சிறு வீதிகளில்!
என் கால்களும் பதியும்.!
சிதறிய உறவுகளும்!
சிணுங்காது வந்திறங்க!
புதியபாலம் திறக்கும்!
எண்ணத்தில் தோன்றும் ஆசையிது!
காலம்தான் காட்டவேண்டும் பாதை.!
ஓ! என் தாய்நாடே!
சொந்தமண்ணையும்!
இந்தப்பெண்ணையும்!
தொடுத்த தொப்புள்கொடி!
அறுந்தவிதத்தை எண்ணிப்பார்க்கிறேன்!
மீண்டும் வலிக்கின்றது!!
செளந்தரி
செளந்தரி