வானவெளி உடைவுகளுக்குள்!
அடைகாத்த கனவுகள்!
குஞ்சுகள் பொறித்து!
குதுகலமாக வெளியேறிய!
சிதைவடைந்த நாட்களாக!
இன்றைகள் ஆகிப் போயின!
நறுமனமிழந்த பூக்களை!
கொறித்து துப்பி!
அணில் வேடமிட்ட!
ஆலாக்களின் கால்களில்!
காலத்தின் சாவிகள்!
தொங்குவதை சகிக்க முடியவில்லை!
மரங்களின்!
நிழல் தேடி அலையும்!
ஒரு மைனாகுஞ்சி போல!
மனம் அலைந்து அழுகிறது!
தும்பி பிடிக்க!
தூண்டில் இட்டு!
வண்ணத்திப் பூச்சிகளை!
வேட்டையாடும் அரசியல்!
யாருக்குத் தெரியும்!
கெட்ட கனவாய்!
மறந்து எல்லாம்!
ஒன்றுமில்லை என்று!
நினைக்க!
என் நொண்டிக் கனவுகளுக்கு!
கால்கள் இல்லை!
என்னை விட்டு ஓடிவிட.!

நாச்சியாதீவு பர்வீன், இலங்கை