தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

நான் யார்?

கண்ணபிரான்
(பிரிந்தே இருக்கிறேனின் பின்பக்கம்)!
----------------------------------------------------------------------!
!
நான் ஆண்டாளா? - இல்லையே -!
அபகரிக்கும் ஆசை எனக்கில்லையே!
பின் ஏன் கண்ணா -!
என் மனம் உன்னைத் துதிக்கிறது.?!
நான் பாரதியா? - இல்லையே -!
கற்பனைக் கனா எனக்கில்லையே!
நிஜமான உன்னை!
நிழலாக எப்படி சிருஷ்டிப்பது?!
நான் பார்த்தனா? -இல்லையே -!
காண்டீபம் என்னிடம் இல்லையே!
சாரதியாய் நீ வந்தாலும்!
தேரிழுக்க எப்படிச் சொல்வது?!
நான் ராதையா? - இல்லையே -!
குழல் தந்த போதை எனக்கில்லையே!
மயக்கம் இல்லையெனில்!
குழப்பம் ஏன் வந்தது?!
நான் தாசனா? - இல்லையே -!
தாசனாகும் யோகம் எனக்கில்லையே!
தாகம் இல்லையெனில்!
என்னைக் கவிபாட யார் சொன்னது?!
நான் யசோதையா? - இல்லையே -!
தாலாட்டும் யோகம் எனக்கில்லையே!
தாயுணர்வும் இல்லையென்றால்!
ததும்பும் பாசம் ஏன் வென்றது?!
நான் குசேலனா? - இல்லையே -!
கேட்பதும் கொடுப்பதும் என்னிடமில்லையே!
நெருக்கம் இல்லையெனில்!
நட்புணர்வென் நினைவை ஏன் பறித்தது?!
நான் ஆழ்வாரா? - இல்லையே -!
பாடிப் பணிவது நானில்லையே!
பக்தி இல்லையெனில்!
உள்ளம் நெகிழ்ந்தேன் பரவசமானது?!
பாசமா, பக்தியா, நட்பா, காதலா -!
பயமா, பிரேமையா, மதிப்பா, ஆளுமையா?!
கேளவிக் கணைகள் துளைக்கும் போது!
திணறிப் போகிறேன் -!
வார்த்தையின்றி ஓசையின்றி பதில் வரும்போது!
சிலிர்த்துப் போகிறேன்.!
பிரிவென்ற துயர் வரும்போது!
துடித்துப்போகிறேன்.!
பேதை, நான்!
பேதலித்துப் போகிறேன்.!
நவரசக்கலவையாய் நான்!
சிதறுண்டு போகிறேன்.!
பிரித்துப் பார்த்தால் நிறமாலை -!
வ ( எ ) ண்ணங்களை!
இணைத்துப் பார்த்தால்!
ஒளி ஒன்றுதான் !!
ஆளவும் ஆண்டு கொண்டு!
ஆளுமைக்கும் உடபட்ட!
நான் யார்?!
இந்தக் கண்ணாமூச்சியில்!
கண்ணைக் கட்டிவிட்டது யார்?!
கண்ணைக் கட்டிக் கொண்டது யார்?!
நம் கணக்கில்!
ஒன்றும் ஒன்றும் ஒன்றுதான்!
இல்லையா?

நடிப்பு

முத்து குமரன்
கவிதை: க.முத்துக்குமரன்!
இரவல் வாங்கிய!
கைக் குழந்தையோடு!
“இரவல் தாய்”!
வேடமிட்டாள்!
பெண் ஒருத்தி!
இரவல் குழந்தையை!
அலற வைத்து!
அவள் நடத்தியதோ!
“யாசித்தல்”!
இரவல் குழந்தையின்!
உதடுகள் அழுதாழும்!
உள்ளம் மட்டும்!
சிரித்து!
நடைபயிலாத!
நாம் கூட!
இரண்டு குடும்பங்களுக்கு!
உதவி செய்கிறோமே!
கட்டாய நடிப்பினால்!
அது போதுமென்று!
கவிதை: க.முத்துக்குமரன்!
006581496831

அக்கினியை நூற்று

ருத்ரா
ருத்ரா !
பாரதி எனும் பெருஞ்சுடரே!
கவிதை!
என்ற எழுத்துக்கு!
மூச்சு தந்தவன் நீ.!
வெறும் வித்வான்களின்!
சொத்தாகி இருந்த தமிழை!
உலகின் சிறந்த!
சொத்தாக்கியவன் நீ.!
வடமொழியால் !
வர்ணம் பூசப்பட்டுக்கிடந்த!
தமிழின்!
நிறம் காட்டியவன் நீ.!
தமிழின்!
திறம் காட்டியவன் நீ.!
எளிமையாய்!
அழகாய்!
தமிழில்!
உயிர் பூசி வைத்தவன் நீ.!
எதுகையும் மோனையும் !
மட்டும் அல்ல தமிழ்.!
எரிமலையும் தான் தமிழ்!
என்று!
ஆவேசம் உமிழ்ந்தவன் நீ.!
விடுதலைத்தீயை...நீ!
தொட்டு எழுதியதில்!
தளை பூட்டிக்கிடந்த!
தமிழன்!
தலை நிமிர்த்திக்கொண்டானே!
அப்போது தான்!
புரிந்து கொண்டோம்!
நீ !
தரித்திருந்தது!
தலைப்பாகை அல்ல என்று.!
தமிழனின் இமயம் அது.!
தமிழனின் இதயம் அது.!
ஆம்.!
தமிழனின் தன்மானம் அது.!
எட்டயபுரம் என்ற ஒரு!
சமஸ்தானம்!
மண்மூடிப்போன பின்னும்!
எட்டாத உயரத்திலிருந்து!
நீ பாடிய!
தமிழ்ப்பாட்டு அல்லவா!
இந்த உலகம் எல்லாம்!
இன்னும் கேட்டுக்கொண்டிருக்கிறது.!
உன் கவிதைகளின் தொகுப்பில்!
கொந்தளிக்கும்!
கடல் அல்லவா தமிழ்!!
பசிக்கின்றவர்களின்!
பசிபிக் கடலும் அங்கு உண்டு.!
மூடத்தனத்தின்!
கருங்கடல்களை எல்லாம்!
செங்கடல் ஆக்கிடும்!
பகுத்தறிவும் !
அதில் உண்டு.!
தனியொருவனுக்கு உணவில்லை யெனில்!
இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்!
என்ற கனல் வரிகள்!
கருவுயிர்த்ததும் உன் பாடல்களில் தான்.!
புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி!
மண்ணைத்தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து....!
என்று!
புதுவையின்!
நீளமான நீலத்திரைக் கடலோரத்தில்!
நின்றுகொண்டு!
நெஞ்சையள்ளூம் கவிதைஅலைகள்!
நிறைய வீசியிருக்கிறாய்.!
குயிலுக்கு பாடும்போதும்!
புயலைத்தான் பாடினாய்.!
பாப்பாவின் மழலைக்கு !
பாடினாலும்!
அதில்!
பாய்ந்தோடும் ஒரு வீரம் தந்தாய்.!
கண்ணனுக்கும் பாடியிருக்கிறாய்.!
விநாயகருக்கும் பாடியிருக்கிறாய்!
ஆனாலும் !
உன் கவிதையின்!
இந்து மகா சமுத்திரத்தில்!
மண் பொம்மைகளை கரைத்து விளையாடும்!
இந்த மனம் முதிராதவர்களுக்கு!
இடம் இல்லையே.!
அப்புறம்!
ஏன் இந்த மெரீனா!
இப்படி குப்பைக்காடானது?!
பாரதி எனும் செந்தமிழ்ச்சீற்றமே!!
மதத்தின்!
பினாமியாகிப் போனவர்களை!
சுனாமியாகியாவது வந்து!
சுத்தப்படுத்தி விட்டுப்போ.!
தும்பிக்கையான்!
துணையிருப்பான்!
இருக்கட்டும்.!
தமிழா நீ!
கம்பியூட்ட்டர் அறிவில்!
நம்பிக்கை வை.!
தமிழா!!
யாதும் ஊரே!
யாவரும் கேளிர்!
என்று பாடிய!
கணியன் பூங்குன்றன்!
மட்டும் அல்ல நீ!
யாதும் முடியும்!
யாவையும் இயலும்!
என்று பாடும்!
கணினியன் பூங்குன்றனும்!
நீயே தான்!!
தேமதுரத் தமிழோசை !
உலகமெலாம் பரவ வேண்டும்!
என்பதல்லவா!
அவன் பெருங்கனவு.!
உலகத்தமிழன் ஆகவேண்டிய நீ!
சாதி சமயங்களின் இந்த!
உழக்கிலா கிடந்து நீ!
உழல வேண்டும்.!
பைந்தமிழ்ப் பாரதியின் பாட்டுகள்!
விண்தமிழ் வித்தகன் !
ஆக்கட்டும் உன்னை.!
சோற்றுக்கு பஞ்சம் வந்த போதும்!
தமிழ் ஊற்றுக்கு பஞ்சம் வந்ததில்லை!
ஆனாலும் தமிழா!
உன் தமிழுக்கு ஏன் இந்த வறட்சி.?!
என்று மடியும்!
இவர்களின் சினிமா மோகம்!
என்று தான்!
இன்று நீ பாடியிருப்பாய்.!
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த!
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...!
என்ற வரிகளில் கசியும்!
ரத்தக்கண்ணீரின் சிவப்பு கூட!
இவர்களுக்கு உறைக்கவே இல்லை.!
ஏனெனில்!
இந்த சினிமாத்தமிழரின்!
ஜிகினா எழுத்துக்களில் !
இது வெறும் அக்ரிலிக் சாயம் தான்.!
வெள்ளைக்காரனிடமிருந்து!
விடுதலை பெற்றிட!
சினங்கொள்ள வேண்டும் என்று !
இந்தியனுக்கு!
உருவகமாய்!
பாஞ்சாலி சபதம் பாடினாய்.!
அடிமைச்சங்கிலிகளில்!
கட்டப்பட்டிருந்த போதே!
ஜனநாயகச் சுடரேந்தியாய்!
இவர்கள் எல்லோரும்!
இந்நாட்டு மன்னர் என்று!
மகுடம் சூட்டினாய்.!
ஆனாலும்!
எங்கள் ஒட்டுப்பெட்டிகளில்!
சாதி சமயத் !
துச்சாதனர்களின்!
துகிலுரிபடலங்கள்!
அரங்கேறிக்கொண்டி¢ருக்கின்றன.!
தடுக்கவேண்டிய கிருஷ்ணர்களே!
துகிலுரியும்!
வினோத பாரதம் அல்லவா இது!!
ஒரு குயியிலின் குரலே!
விம்மிப்பரந்து விரிந்து!
வானம் ஆகியது.!
பிரபஞ்சம் கூட!
அந்த சிறு புள்ளின்!
புள்ளியில்!
முற்றுப்புள்ளி ஆகி!
டாக்டர் பென்ரோஸ் கூறும்!
சிங்குலாரிடி'' ஆனது.!
ஏனெனில் அது வெறும் குயில் பாட்டல்ல.!
அது காதல் எனும் காஸ்மாலஜி.!
இந்த சினிமாக்காரர்கள்!
விடும் காதல் எனும் !
சோப்புக்குமிழிகள் எல்லாம்!
வார்த்தைகள் தோறும்!
சுவாசம் சுவாசம் என்று!
காதலை ஒரு காச நோயாக்கிவிடும்.!
·ப்ராய்டிசத்தை பிசைந்து வைத்த!
இந்த நிழல் உருவங்களின்!
காலடிகளில்!
தமிழனின்!
இருபத்தியொன்றாம் நூற்றாண்டே!
மிதிபட்டு நசுங்கிக்கிடக்கிறது.!
!
மனதில் நிற்காமல்!
பஞ்சு போல் பறக்கும் இந்த !
பஞ்ச் டைலாக்குகளில்!
பகடை உருட்டும் சில சகுனிகளால்!
பஞ்சம் ஏற்பட்டதோ!
நம் தமிழ்ச்சொற்களுக்கு!!
என்னே கொடுமை!!
என்னே இழிமை!!
நம் இனிய தமிழுக்கு.!
சில கூச்சல் கூளங்களை வைத்து!
கூடு கட்டிக் கிடக்கும்!
இந்த சினிமா காக்கைககளின்!
இரைச்சல்கள் தான் !
இன்றைய இலக்கியம் !!
சிவாஜி என்ற பெயரே!
கூர் மழுங்கி போனது...இந்த!
கூறு கெட்ட கூட்டங்களால்.!
மராட்டிய வீரன் கூட!
இந்த அட்டைக்கத்தியின் முன்!
முனை முறிந்து போகுமாம்.!
நடிப்பின் இமயமும்!
ஏதோ ஒரு கூழாங்கல்லாய்!
எங்கோ கிடக்குமாம்.!
இது என்ன வீழ்ச்சி !!
மாற்றான் காலடியில்!
தாமே போய்!
அமிழ்ந்து கிடப்பதில்!
பெருமகிழ்ச்சி காணும்!
தனியே ஒரு குணம் கொண்ட!
இனம் அல்லவா!
நம் தமிழ் இனம்.!
தம் அமிழ்வு...!
தம் அமிழ்வு !
என்று சொல்லிக்கொண்டே வாருங்கள்.!
அது!
தமிழ்!
என்று முடியும் அவலம்!
உங்களுக்கு புரியும்.!
சாயம் ஏற்றிய!
விக் எனும் !
ஒரு கூடை தலைமயிருக்குள்!
சூரியனும் சந்திரனும்!
கூடு கட்டி குஞ்சு பொரித்தார்களாம்.!
புதுக்கவிதைச்சிற்பிகள்!
அந்த கானல்நீர் !
சாம்ராஜ்யத்திற்கு!
சாமரம் வீசுகின்றார்கள்.!
பம்மாத்துக்காக!
சும்மா..அதிருதில்ல.. என்று !
பாக்ஸ் ஆ·பீஸ் வசூலுக்கு குறி வைத்த!
பஞ்ச் டயலாக்குகளில்!
படுத்த படுக்கையாய் கிடக்கும்!
தமிழை தலைநிமிர்ந்திட...!
பாட்டுகளால்!
பார் அதிர வைத்த பாரதியே!
இன்னொரு முறை நீ பிறந்திட வேண்டும்.!
தமிழின் இந்த எட்டப்பர்களை !
ஓட ஓட விரட்டுவதற்கு !
தமிழ் மண்ணின் !
ஒவ்வொரு துளியும்!
எட்டயபுரங்கள் ஆகிட வேண்டும்.!
எட்டு திசையும்!
உன் முறுக்கிய மீசையில்!
சூரியன்களின் முகங்கள்!
பூத்திட வேண்டும்.!
பாரதியைப்பற்றிய !
நம் நினைவுகள்!
நூற்றாண்டுகளுக்குள்!
அடைந்து கிடக்கும்!
நூலாம்படைகள் அல்ல.!
இருட்டில்!
இற்றுப்போகும்!
பாட்டுகளும் அல்ல!
அவன் பாட்டுகள்.!
அக்கினியையே!
நூற்றுக்கொண்டிக்குகும்!
நூற்றாண்டுகளே !
அவன் பாட்டுகள்!!
.!
!
- ருத்ரா

கடைசி கடிதம்

சிலம்பூர் யுகா துபாய்
காதல் தடுக்கி!
உன்னில் விழுந்தவள்!
எழுந்தபிறகு எழுதுவது.!
சுகம்சொல்லியோ,!
நலம்நாடியோ!
இல்லை இக்கடிதம்!
ஏனெனில்!
இறுதிகடிதத்தில்!
எதிர்பார்ப்பு பொய்த்தனம்!
என் வாழ்வில்!
எள்ளவும் துக்கமில்லை!
நந்தவனத்தில்!
பயணம் செய்யும் தென்றலாய்!
நளினமாய் செல்கிறது இல்லறம்.!
கணவனால் காதலிக்கப்படும்!
மனைவியின் அவஸ்தையை!
எழுதிவிளக்கிவிடமுடியாது!
நானும் காதலிக்கப்பட்டு-பட்டே!
காதல் வயப்பட்டுபோனேன்.!
எதார்த்தத்திற்கு!
சாயம் பூசும்!
போலிநிலை!
பிடிக்கவில்லை எனக்கு.!
காதல்மணம்முடித்த!
எத்தனை காதலர்கள்!
கனவன் மனைவியான-பின்பும்!
காதலிக்கிறார்கள்!
தாலியேறியவுடன்!
காதலை!
கழற்றிவைத்துவிட்டு!
விடுதலையோ!
விவாகரத்தோ-வேண்டி!
நீதிமன்றவாசலில்!
கூடும் கூட்டம்!
கூடிக்கொண்டேதானிருக்கிறது.!
!
எதை நேசமென்றுகொள்ள!
உரிமையானபின்னும்!
அருமைகுறையாமல்!
நடத்துவதையா,!
அவசரம் தீர்ந்ததும்!
அரிதாரம் மாற்றும்!
நாடகத்தையா?!
பக்கத்துவீட்டு!
பாணு சொன்னாள்!
உன் மனைவியோடு-நீ!
ஒத்துப்போவதேயில்லையாம்!
உள்மனதில்!
உன் மீது-கொஞ்சம்!
வெறுப்பே வந்தது.!
காதலில்கூட-நீ!
சரியாய் கடமையாற்றாததால் தானே!
நாம் கைமாறிப்போனோம்!
இப்போதும்!
அதே தவறை!
ஏன் இழைக்கிறாய்?!
சிறுகச்சிறுக!
சேர்த்துக்கொண்டால்!
விஷம்கூட!
உணவாகிவிடுகிறது!
உன் மனமென்ன!
விஷத்தைவிடகொடியதா?!
என்னை நினைத்தபடி!
உன்னை-நீ!
மறந்துபோவதாய்!
கேள்வியுற்றேன்.!
மனைவியை!
நேசிக்கத்தெரியாத-நீ!
மற்றவன்!
மனைவியையா நேசிக்கிறாய்?!
மனம்சொல்கிறது!
உன்னை!
மறந்ததே சரியென்று.!
காலாவதியானகாதலனே!!
இலக்கியமும்!
சினிமாவும்!
காதலை!
சுயநலமாகவே!
சொல்லிக்கொடுத்திருக்கிறது.!
ஹார்மோசோம்களின்!
கட்டளைக்கிணங்கிதான்!
காதலித்தோமோ!
என்கிற சந்தேகம்!
இப்போதெல்லாம்-எனக்கு!
வருவதுண்டு.!
தெரிகிறது-என்னை!
திட்டத்தொடங்கிவிட்டாய்!
சந்தோஷம்-!
உன்மனைவியை!
நேசிக்கத்தொடங்கியதில்.!
இப்படிக்கு!
என்றுமே உன்னை!
நினைக்கவிரும்பாதவள்!
(பொய்கூட!
சந்தோஷமாகத்தான்!
இருக்கிறது!
காதலுக்காக!
சொல்லப்படும்போது.)

சப்தம் கண்டுபிடித்த மௌனம்

சிலம்பூர் யுகா துபாய்
பெண்ணே!!
காட்டுத்தீயாய்!
கிடந்த அழகு!
உன்மீது!
விழுந்தபோதுதான்!
தீபமானது.!
மொழியாய்!
கிடந்த தமிழ்!
உன் உச்சரிப்பிற்குட்பட்டு!
இசையாகிப்போனது.!
பெண் இலக்கணம்-இனி!
உன்னளவாகவே!
உருமாறிப்போகும்.!
நீ!
பேசத்தொடங்கினால்!
வாய் மூடிக்கொள்ளும்!
உன்கொலுசு.!
எல்லோரும்!
மொழிக்குள்!
கவிதை தேடும்!
முயற்சியிலிருக்க!
உனக்கு மட்டுமெப்படி!
கவிதையே!
மொழியாகிப்போனது!!
மரபை நிராகரித்த!
பெண்களுக்கு கூட!
கற்பு நிலையில்!
உன் மார்க்கமே!
நெறியாகிப்போனது.!
எங்கிருந்து பெற்றாய்!
இருபத்திரெண்டு வயதில்!
இத்தனை பக்குவம்!!
உன்னை!
பார்த்தபோது மட்டும்தான்!
என் பேனா!
கொஞ்சம் பிரமித்து நின்றது!
மனம் சல சலத்து போனது!
ஆணென்ற அகம்பாவமும்,!
கர்வமும்-கொஞ்சம்!
கரையத்தொடங்கியது.!
பிழையின்றி செய்த!
பிரம்மனின்!
ஒரே படைப்பு நீ!!
நான்!
சப்தமென்றால்!
நீ!
மௌனம்.!
ஒவ்வொரு சப்தமும்!
ஏதோ ஒரு!
மௌனத்திற்காக வேண்டிதான்!
கர்ஜிக்கிறது!
அப்படித்தான் நானும்.!
ஒவ்வொரு மௌனமும்!
ஏதோ ஒரு!
சப்ததிற்காக வேண்டிதான்!
தவமிருக்கிறது!
அப்படியா நீ?!
----------------------------------!
இடுப்புக்கடியிலா இதயம்!
!
இதயம் வேண்டியே!
எப்போதும்!
காதிருப்பதாய்!
சொன்னவனே!!
துண்டுஇருட்டில்!
அதை!
தொடையில் தேடுகிறாயே!
இதயமிருப்பது!
இடுப்புக்கடியிலா?

இரண்டு தலை இராசஷன்

நவீனன் பாரதி
நட்ட நடு நிசியில் மொட்டை மாடிக்கு,!
நிலாவின் கதவைத் திறந்து வந்தான்,!
இரட்டைத்தலை இராட்சஷன்.!
கனவா நனவா...யோசிக்கும் முன்,!
நான்தான் உன் மனசாட்சியின்,!
ஒட்டு மொத்த கசடு....,!
உன் எண்ண தேசத்திலிருந்து,!
கற்பித தேர் வழியாக வந்தேன்!
என்றானே பார்க்கலாம்!!!.!
என்ன விசயமாய் வந்தாய்?.,!
என வினவலாம் என்பதற் குள்ளே,!
உன் கெட்ட எண்ணங்களை எல்லாம்....!
உன்னுள் புதைத்து விடு,!
வெளியில் பரவிடும் கசடு எல்லாம்...!
புதிய உயிர்க்கு கேடு என்றான்....!
எப்படி புதைப்பது என்றால்,!
செப்படி வித்தையா உள்ளது....!
!
மனிதர்களுடன் மட்டும் சேர் என்றான்,!
அப்போ நீ கிளம்பு,!
நான் தேட வேண்டும் என்றேன்.!
- நவீனன் பாரதி

பேசுவது குறித்து சில

மதியழகன் சுப்பையா
மதியழகன் சுப்பையா !
மும்பை !
1 !
மற்றவர் பற்றி !
மணிக்கணக்கில் !
பேசுகிறாய், விசாரிக்கிறாய் !
பிடித்தவைகளை !
கேட்காமலேயே !
சொல்லுகிறாய் !
ஆடம்பரவாழ்வு பற்றி !
எதிர்காலத்தேவை பற்றி !
இப்படி !
என்னென்னமோ !
அவ்வப்போது !
'கேக்குறீயா?' !
என உற்றுப்பார்க்கிறாய். !
எவர் பற்றியும் !
பேசாத என்னிடம் !
எல்லோரைப் பற்றியும் !
எக்கச்சக்கமாய் !
................ !
................ !
எரிச்சலூட்டுகிறாய் !
என்னைப் பற்றி !
யாரிடமாவது !
என்றைக்காவது !
எப்பொழுதாவது? !
2 !
பேசுகின்ற !
செய்கின்ற !
அனைத்தும் !
ரொம்பப் பிடித்திருக்கிறது !
அதனால்தான் !
மறுக்கிறேன். !
!
3 !
பேசித்திரும்புகையில் !
செய்துத்திரும்புகையில் !
இப்படியும் !
பேசியிருக்கலாம் !
செய்திருக்கலாம் என்றும் !
தவறு நேர்ந்திருந்தால் !
தவிர்த்திருக்கலாம் என்றும் !
கைத்தொட்டுத் !
திரும்புகையில் !
கட்டிப் பிடித்திருக்கலாம் என்றும் !
வாய்ப்புகளை !
நழுவவிட்ட பின் !
அழுகிறது மனம் !
அடுத்து வரும் !
வாய்ப்புகளை !
அறியாமலேயே. !
4 !
இது இரைச்சல் காடு !
காது நிரம்பி சத்தங்கள் !
மனிதர்கள் !
மிருகங்கள் !
விணைப் பொருட்கள் !
எல்லாமே ஒலி !
எழுப்பியபடி !
உறுப்புகளும் !
உதிரிகளும் !
உரக்க உரக்க !
புலப்படாதவைகள் !
புரியாதபடி ஒலிக்கிறது !
சில ரசிக்கும்படி !
சில கடுப்பாக்கும் !
அமைதி அமைவதில்லை !
எப்போதும் !
ஓசையற்றவை !
உயிரற்றவையாகக் கூட !
உணரப்படுகிறது !
ஓசையோடு வாழ்ந்தால் !
இசைபட வாழலாம். !
5 !
கனத்த பூட்டு திறக்கும் !
சிறிய கம்பிகள் !
துளியே போதும் !
ஆக்க அழிக்க !
மயிரிழையில் !
உயிர் பிழைக்கிறோம் !
சில்லரைகளும் !
அவசியமாகிறது !
எப்போதும் !
வார்த்தையோ !
வாக்கியமோ !
வாழ்க்கையை தீர்மானிக்கிறது. !
6 !
காத்திருக்கையில் கூட !
கனவாய் பேசிக் கொள்வது !
போன்றதொரு உணர்வு !
எதிரெதிரேயாய் !
இடதுவலதாய் !
என எல்லா நிலைகளிலும் !
பேசிவிட்டிருக்கிறோம் !
நீ கேட்க நான் சொல்ல !
நான் கேட்க நீ சொல்ல !
மணிக்கணக்காய் !
மகிழ்ந்திருக்கிறோம் !
பாராமல் கூட பல முறை !
கடிதம், தொலை பேசியில் !
கதைத்திருக்கிறோம் !
உனக்காக ஒருத்தனையும் !
எனக்காக ஒருத்தியையும் !
பேச பணித்திருக்கிறோம் !
எதுவும் பதியவில்லை !
பேசிப் பிரிகையில் !
நீ இறுக பிடித்து !
பதிந்து போன விரல் !
ரேகைத் தவிர. !
7 !
வணக்கம் சொல்லி !
சந்திக்கையிலும் !
வருகிறேன் என !
விடைபெறுகையிலும் !
இயல்பாய் பேசி !
விலகுகிறாய் நீ !
இயக்கமே தடைப் பட்டு !
நிற்கிறேன் நான்

நாம் புதியவர்கள்

புதியமாதவி, மும்பை
நான் தென்றலாக !
வரவில்லை !
அதனாலெயே !
புயல் என்று !
யார்.. சொன்னது? !

நான் கனவுகளாக !
வரவில்லை !
அதனாலேயே !
நிfம் என்று !
யார்.. சொன்னது? !
நான் காதலியாக !
வரவில்லை !
அதனாலேயே !
சகோதரி என்று !
யார்.. சொன்னது? !

நான் மழையாக !
வரவில்லை !
அதனாலேயே !
சூரியன் என்று !
யார்.. சொன்னது? !
நான் விடியலாக !
வரவில்லை !
அதனாலேயே !
இருட்டு என்று !
யார்.. சொன்னது? !
நான் அதாக !
வரவில்லை !
அதனாலேயே !
இதாக இருக்க !
யார்.. சொன்னது? !
நான் நானாக !
நீ நீயாக !
நீயும் நானும் !
புதிதாகப் பிறந்தவர்கள்.. !
நான் யார்....? !
நாளைய !
அகராதி !
எழுதும்.... !
அதுவரை !
இருக்கின்ற சொற்களில் !
என்னைக் கழுவேற்றி !
உன்னை !
முடித்துக்கொள்ளாதே

நாற்காலிச் சண்டை

மன்னார் அமுதன்
ஆண்டாண்டாய்!
ஒலித்து ஓயும்!
இசையில் தொடர்கிறது...!
ஆணவக் கூட்டணிகளின் !
அதிகாரத்தைப் !
புதுப்பித்துக் கொள்ளும்!
ஆசன விளையாட்டு!
அடிக்கடி ஆடப்படுவதால்!
ஆண்டியாகிப் போனது !
ஆண்டுப் பொருளாதாரம்!
அமர்ந்தவர் வெல்ல!
தோற்றவர் கொல்ல!
சமநிலை மாறிக்!
கதிரைகள் சாய!
பூனை பங்கிட்ட !
அப்ப மாகிறது!
அதிகாரப் பரவலாக்கம்!
நாற்காலிச் சண்டையில்!
விடுவிக்கப்பட்ட !
வறுமையின் குரல் மட்டும் !
தெருவெங்கும்!
ஒலித்து ஓயும்!
இசையாய்த் தொடர்கிறது!

படிக்கத் தொடங்கும்முன்

நீதீ
கவி ஆக்கம்: நீ “தீ”!
!
விழிகள்!
பெருமூச்சுடன்!
புத்தகத்தை தேடுகிறது!
பேசத்தொடங்குகிறேன்!
புத்தகத்திற்கும்!
எனக்குமான தொடர்பு!
இரவுகளில் தான் அதிகம்!
புரியாமல் தான் வாசிப்பேன்!
வாயில்லா புத்தகம்!
எதுவும் பேசுவதில்லை!
என்னை பேசவிட்டு!
வேடிக்கை பார்க்கும்!
படிக்கும் ஆர்வம்!
தினமும் அதிகரிக்கிறது!
பக்கத்திற்கு பக்கம் - உன்!
கட்டுப்பாடுகள் உடைகிறது!
பக்கங்களை புரட்டும்போதெல்லாம்!
என்னையே புரட்டிவிடுகிறது!
ஆனால்!
இன்னமும் என்னால்!
முழுமையாக படிக்கமுடியவில்லை!
ஒரு கட்டத்தில்!
வாசிப்பு தடைபடுகிறது!
உதிர்ந்து போன!
உறக்கங்களுடன்!
கசங்கிய பக்கங்களாய்!
என் மார்பில்!
தலைவைத்து படுத்துறங்கும்!
புத்தகத்தின்!
புரிதலின் புன்னகையை!
அதிகாலையில் உணர்கிறேன்!
கவி ஆக்கம்: நீ “தீ”!
006598870725