தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

ஆக்ரமிப்பு... நச்சுத்தனம்.. பெண்

தஸ்லீமா நஸ் ரீன்
ஆக்ரமிப்பு... நச்சுத்தனம்.. பெண்!
1.ஆக்ரமிப்பு!
--------------!
மனித இயல்பு என்பது!
நீங்கள் உட்கார்ந்தால், ''உட்காராதீர்'' என்பார்கள்!
நீங்கள் நின்றால், ''என்னவாயிட்டு? நட'' என்பார்கள்!
நீங்கள் நடந்தால், ''வெட்கப் படுகிறேன், உட்கார்'' என்பார்கள்!
நீங்கள் படுத்து விட்டால், ''எழுந்திரு'' ஆணையிடுவார்கள்!
நீங்கள் படுக்கவில்லை என்றால், தயங்காமல் ''படு'' என்பார்கள்!
நான் எழுந்தும் உட்கார்ந்தும் நாட்களை !
விரயமாக்கிக் கொண்டிருக்கிறேன்!
நான் சாகப் போனால் ''வாழ்' என்பார்கள்!
நான் வாழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால்!
''வெட்கம், செத்துப்போ'' என்பார்கள் நிச்சயம்.!
!
2.நச்சுத்தனம்!
----------------!
பாம்பின் இரு காளாத்திரியைவிட!
இருமுகம் கொண்ட மனிதன் !
நச்சுத்தன்மையானவன்!
பாம்பால் கடி பட்டால்!
நச்சை எடுத்து விடலாம்!
மனிதனால் கடிபட்டால்!
அதுவே முடிவாகிறது.!
!
3.பெண்!
----------!
பிறப்பு!
உலக ஜீவராசிகளில்!
பெண்பால் பிறப்பு நலமான ஒன்று!
ஆனால் மனித இனத்தில் மற்றும் மாற்றம்!
குழந்தைப்பருவம்!
அவள் பிறந்ததிலிருந்து!
வீட்டின் ஒரு மூலையில் வைக்கப் படுகிறாள்!
அங்கேயே வாழப் பழகுகிறாள்!
விடலை!
தலைமயிரை இறுக்கக் கட்டு!
பார்வையை இங்குமங்கும் அலையவிடாதே!
அரும்பும் முலைகளை கவனமாக மூடிவை!
பெண்களை சங்கிலியால் கட்டிவை!
வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வேண்டுமானல் !
போக அனுமதிக்கலாம், அவ்வளவுதான்!
இளமை!
ஆண்கள் கன்னித்திரைகளை தேடுவார்கள்!
அதனை அடித்துக் கிழிக்க வேண்டி!
சிலர் காதலென்ற பெயரில்!
சிலர் கல்யாணமென்று!
வயோதிகம்!
இறுகிய மெல்லிய தோல் சுறுங்கிவிடும்!
மாதவிடாய் வலி எப்பொழுதுக்கும் நீங்கிவிடும்!
சொன்ன வார்த்தைகள் வந்து அறையும்!
மரணம்!
தொல்லைகளிலிருந்து விடுபடலாம்!
இயற்கையின் நிதர்சனத்தில் உலக ஜீவராசிகளில்!
பெண்பால் இறப்பு நலமான ஒன்று!
!
ஓடு! ஓடு!!
நாய்க்கூட்டம் உன்னை துரத்துகிறது!
கவனம், ராபிஸ்!
ஆண்களின் கூட்டம் உன்னை துரத்துகிறது!
கவனம், மோகநோய்

நம்மைத் தொடருகிற போர்

தீபச்செல்வன்
01!
போரே தீர்வென்று கோடுகளின் கீழாய்!
எழுதிச் செல்கிறேன்!
எல்லாம் மாறி உடைத்த பொழுதும்!
போர்க்களங்களின் முகங்கள் மாறவில்லை!
யுத்தம் உன்னையும் என்னையும்!
தின்பதற்காய் காத்திருக்கிறது!
காலம் நம்மிடம் துப்பாக்கியை!
வழங்கிவிட்டு மௌனமாக கிடக்கிறது.!
கருத்தப்பூனையைப்போல!
கருணாநிதி!
மேடையிலிருந்து இறங்கிச் செல்கிறார்!
நேற்றிலிருந்து கருணாநிதி கவிதைகளிலிருந்து!
பூனைகள் வெளியேறுகின்றன!
வாய் கட்டப்பட்டவர்களின்!
பேரணிகளிலும்!
பூனையின் கறுத்த மௌனம் ஊடுருவுகிறது.!
புல்லரித்து முடிந்த நிமிடங்களில்!
வாய்களை மூடும் தீர்வு போரைப்போல வருகிறது!
முப்பது வருடங்களை இழுபடுகிற!
போரை உணவுப்பைகளில்!
கறுத்தப்ப+னைகள் அடைக்கின்றன.!
02!
போர் தீர்வென்று வருகையில்!
நமக்கு போராட்டம் தீர்வென்று மிக கடினமாக!
ஏற்றுக்கொள்ளப்பட்டோம்!
விமானங்களை நம்பியிருக்கும்வரை!
குண்டுகளை நம்பியிருக்கும்வரை!
துப்பாக்கிகளை நம்பியிருக்கும்வரை!
நாமது கைகளிலும் துப்பாக்கிகள் வந்தன!
நமது பதுங்குகுழி விமானமாய் பறக்கிறது.!
போர்க்களங்களில் தீர்வுகள்!
இலகுவாகிவிட்டன!
நீயும் நானும் பெற்றெடுக்கும் குழந்தை!
உயிர் துறக்கப்போகும் இந்தப்போர்க்களம்!
நம்மோடு முடிந்துபோகட்டும்!
விமானங்கள் மனங்களை தீர்மானித்து விட்டன!
மிகக்கொடுரமான அனுபவத்திலிருந்து!
நமது விமானங்கள் எழும்புகின்றன!
எனது காயத்திலருந்து வெளியேறுகிற!
குருதி காவலரணை கழுவுகிறது!
03!
ஓவ்வொரு செய்தியின் கீழாயும்!
மறைக்கப்பட்ட குறிப்புக்களை நீ கண்டாய்!
அதன் மேலொரு கோடு கீறினேன்!
பயங்கரவாதிகளை அழித்துச் சென்ற!
விமானங்களின் கீழாய்!
பள்ளிச்சிறுவனின் முகம் பதிவுசெய்யப்பட்ட!
புகைப்படத்தை நீ கண்டாய்!
விமானங்களும் அதன் இரைச்சல்களும்!
நம்மை மிரட்டிக்கொண்டிருந்தன!
ஒரு விமானத்தைப்போல ஜனாதிபதி பேசுகிறார்!
ஒரு எறிகனையைப்போல!
இராணுவத்தளபதி வருகிறார்.!
கருணாநிதி ஒரு கிளைமோரை!
பதுங்கியபடி வைத்துச்செல்கிறார்!
04!
அழுகை வருகிறது!
தோல்வியிடம் கல்லறைகள்தானே இருக்கின்றன!
எனினும் இந்த மரணம் ஆறுதலானது!
அதில் விடுதலை நிரம்பியிருந்தது!
இரண்டு வாரங்களில்!
எடுத்துப்பேச முடியாத போரை!
நாம் முப்பது வருடங்களாக சுமந்து வருகிறோம்!
நம்மிடமே நம்மை தீர்மானிக்கும்!
சக்தி இருக்கிறது!
மரணங்கள் பதிலளிக்கும்பொழுது!
குருதியில் மிதக்கிற கதிரைகளை பிடித்துவிடுகிற!
அரசியல்வாதிகளிடம்!
நாம் முப்பது வருடங்களாக ஏமாறுகிறோம்.!
அழகான வாழ்வுக்காய் பிரயாசப்படுகையில்!
உலகம் மாதிரியான!
குண்டுகள் அறிமுகமாகிவிட்டன!
மிகவும் கொடூரமாக மேற்க்கொள்ளப்படுகிற!
போரை எதிர்க்கும் பொழுது!
துப்பாக்கிகள் வாழ்வில் ஏறிவிட்டன!
நீ போரின் நுட்பங்களில் கவனம் செலுத்துகிறாய்.!
05!
பிரித்து ஒதுக்கி ஒடுக்கப்படகிறபொழுதுதான்!
இனம் குறித்து யோசிக்கத்தோன்றுகிறது!
எனக்கு இந்தக் கல்லறைகளை!
எண்ணி முடிக்க இயலாதிருக்கிறது.!
படைகள் புகுந்துநிற்பதாய்!
கனவு காண்கையில்!
தூக்கம் வராத நாட்களாகின்றன!
வீட்டுச்சுவர்கள் தகர்ந்துவிட!
பேய்கள் குடிவாழ்கின்ற கிராமங்களில்!
திண்ணைகள் கொலை செய்யப்பட்டிருக்க!
எப்படி தூக்கம் வருகிறது!
அதுவே தீர்வாகையில்!
கை துப்பாக்கிளை இறுகப்பிடிக்கிறது.!
தீர்க்கமுடியாத பிரச்சினைகள்!
போர்க்களத்தில் சுடப்பட்டுக்கொண்டிருந்தன!
நம்மை துரத்துகிறபோர் மிகவும் கொடூரமானது!
அதன் பின்னால்!
அழிகிற இனத்தின் நகரங்கள்!
புரதானங்கள் குறித்து!
சன்னம் துளைத்துச் செல்கிற சுவர்களைத்தவிர!
எதனால் பேசமுடிகிறது?!
06!
நீ போர் அழகானது என்றாய்!
உன்னால் போரில் நசியமுடியாதிருந்தது!
அம்மா பின்னால் நிற்க!
நான் சுட்டுக்கொண்டிருந்தேன்!
நான் போரை சமாளிக்க வேண்டியிருந்தது.!
நம்மால் சட்டென பேசமுடிகிறது!
துப்பாக்கிகளைத்தான் இறக்க முடியவில்லை!
மிகவும் விரைவாக சுட்டுவிட முடிந்தது!
மரணங்களின் பிறகு போர்க்களம்!
அடங்கிக்கிடக்கிறது!
நேற்று நம்மைப்பற்றி பேசியவர்கள்!
மேடைகளைவிட்டிறங்கி!
கதிரைகளில் மாறிக்கொண்டிருந்தார்கள்.!
படைகளும் நகரத் தொடங்க!
நாம் மீண்டுமொரு சமருக்கு!
எதிராக தயாராகினோம்!
சிறுவர்கள் இழுத்துச் செல்லுகிற!
தண்ணீர்க் குடங்களை போர் தொடருகிறது.!
!
-தீபச்செல்வன்!
8.35, 31.10.2008

தென்னோலைக் கிடுகு

புஸ்பா கிறிஸ்ரி
உச்சித் தென்னைமரத்தில்!
பச்சை ஓலை !
படபடத்து அழகுகாட்டும்.!
பழுத்துப் பழுப்பேறி!
மரத்தை விட்டுக் கழன்று!
காய்ந்து கீழே விழும்.!
உருமாறிய தென்னங்கீற்று!
ஓலை மட்டையாகி,!
நீரில் நனைக்கப் பட்டு!
நடுவாலே பிரி¢க்கப்பட்டு!
பாதி ஓலையில்!
மீதி நாடகம் அரங்கேறும்.!
ஆச்சி கைவிரலில்!
ஒரு கீற்றின் கீழே!
இன்னோரு கீற்று !
மடிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு !
ஒன்றுவிட்ட கீற்றினுள்!
இன்னொரு கீற்று!
புகுந்து கொண்டு..!
அழகான 'கிடுகு'!
அருமையாய் உருவாகும்.!
கிடுகுக் கட்டுகளில்!
இருபத்தைந்து சோடி சேர்ந்து!
ஐந்து, ஆறு கட்டுக்கள்..!
வீட்டுக்குக் கூரையாகும்.!
வேலிக்கும் மறைப்பாகும்.!
காய்ந்த முழு ஓலைகளைக்!
கலையாய் மூன்று, நான்கடுக்கி,!
அழகாகத் 'தட்டி' பின்னி,!
வாசலுக்குக் கதவமைப்பார்.!
குடிசை வாசலுக்குத் !
'தட்டிக்' கதவு !
மழை காத்து, !
காற்றுக் காத்து!
மானம் காத்து!
குளிர் காத்து, !
'குமரையும்' காத்திருக்கும்.!
பச்சை ஓலையிலே!
'பாடைக்குக்' கிடத்திட!
பச்சைக் கிடுகுத் தட்டி!
இச்சையாய்த் தயாராகும்.!
கடைசி வழிப்பாதைக்கு!
அழகான பச்சோலைத் !
தோரணங்கள்!
பாதி வழி போனபின்!
மீதி வழிப் பயணம் !
தனித்துப் போக விட்ட!
கவலைக்கு யார் பொறுப்பு?!
இறைவனா? இல்லை மனிதனா?!
-- புஸ்பா கிறிஸ்ரி

யாரறிவார் ?

சத்தி சக்திதாசன்
தண்ணீரில் மீன்!
உன்!
தாகத்தை யாரறிவார் ?!
நீலவானத்துள் உறைந்த!
நீலம் நீ - உன்!
நிறத்தை யாரறிவார் ?!
தென்றலின் குளிர்மை நீ!
உன் கூதலுக்கு போர்வை!
யார் தருவார் ?!
அருவத்தின் நிழல் நீ!
உன்!
உருவத்தை யாரறிவார் ?!
இரவின் இருட்டு நீ!
உன்!
வெளிச்சத்தை யாரறிவார் ?!
கதிரவனின் வெப்பம் நீ!
உன்!
தகிப்பை அறிந்தவர் யார் ?!
காதலென்னும் ஆலயத்தில் நீ!
கற்பூரம்!
கண்டவர் யார் அதன் வாசத்தை ?!
அன்புடன்!
சக்தி சக்திதாசன்

கோல மயில்

மன்மதன்
கோல மயில் !
!
*மண்டியிட்டு வரைந்த !
ஓவியத்தை ஒருதடவை !
உற்று பார்க்கையில்... !
எவ்வளவு கவனமாக !
இருந்தும் வந்துவிட்டதே !
ஓவியப்பெண் முகத்திலும் !
சோகம்.. !
சாலையில் !
வரைந்த ஓவியத்தை !
சரிபார்க்க ஒரு தடவை !
உற்றுப்பார்த்தேன். !
ஓவியத்தில் !
இருந்த பெண்ணின் !
முகத்திலருகே ஒரு நீர்த்துளி.. !
---மன்மதன் !
துபாய்

இருப்புச்சுழி

ரவி (சுவிஸ்)
எனது உடையில் ஓயில் மணத்தது!
உடலை வியர்வை நனைத்திருந்தது!
வேலையில் நான் ஓய்ந்துவிடாதபடி இயந்திரம்!
என்னை இயக்கிக் கொண்டே இருக்கும்.!
விரைந்துகொண்டிருந்தேன்!
ஓடிக்கொண்டிருந்தேன்!
நீ ஒரு மோசமான சுவிஸ்காரனைவிட மோசம் -வேலைசெய்வதில்!
என்பான் அவன்.!
மகிழ்வான், வேலையுடனான எனது போராட்டத்தைக் கண்டு.!
இப்படியே ...இப்படியே...!
தொடர்ந்த காலங்களில் எனது இருப்பு என்னை!
கேள்வி கேட்டபடியே இருந்தது.!
சுவிஸ் பிரஜையாவது என்று முடிவாக்கினேன்.!
அப்படியும் ஆனேன்.!
இப்போதெல்லாம் அவன் நீ!
ஒரு மோசமான சுவிஸ்காரனையும்விட மோசம் என்று சொல்வதேயில்லை.!
இப்போ நீ வெளிநாட்டுக்காரருக்கும் சேர்த்து!
உழைக்கவேண்டும், என்னைப்போல்!
என்கிறான்.!
-ரவி

தவளை ஆண்டு 2008

ஜான் பீ. பெனடிக்ட்
தந்தை கையைப் பிடித்துக் கொண்டு!
தடுக்கிவிடும் நெல் வரப்பு மீது!
தத்தித் தத்தி நான் நடந்த போது!
தாவித் தாவிக் குதித்த தவளை!
பாசி படர்ந்த குட்டைக்குள்ளே!
பச்சை நிறத்தில் நீந்தும் தவளை!
பாவி மனுஷன் சூப்பு வைக்க!
பரிதாபமாய் பலியாகும் தவளை!
தூண்டிலில் உணவாய் உயிர்விடும் தவளை!
பாம்பின் பசிக்கு புசியாகும் தவளை!
மனம் கல்லாய்ப் போன மனிதருக்கும்!
மருந்தாய் இருந்திட மரித்திடும் தவளை!
அந்தி மழை பொழியும் போதும்!
அடை மழை வழியும் போதும்!
அல்லும் பகலும் பேதமின்றி!
அயராமல் கத்தி மகிழும் தவளை!
அழிந்து வருதாம் அந்தத் தவளையினம்!
அக்கறை கொண்ட ஐநா சபை!
ஆண்டு 2008-ஐ தவளை ஆண்டாய்!
அறிவிப்புச் செய்திட்ட ஆறுதலோடு!
ஆரம்பமாகிற்று அடுத்ததோர் ஆண்டு!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
ஜான் பீ. பெனடிக்ட்!
வாசிங்டன்

தயவு செய்து வெளியே போங்கள்

தனுஷ்
ஐயா!
என்னை இங்கு சேர்த்துக் கொள்ளுங்கள்!
நான் பைத்தியக்காரன்!
யார் சொன்னது நீங்கள் பைத்தியக்காரன் என்று!
நான் பைத்தியம் என்று யார் சொல்லவேண்டும்!
நான் பைத்தியக்காரன்தான்!
நீங்கள் உங்களை பைத்தியக்காரன் என்று!
சொன்னால் மட்டும் போதாது !
வேறு யாராவது சொல்ல வேண்டும்!
இதோ என் நண்பன் வந்திருக்கிறான்!
அவனிடம் கேளுங்கள் !
நான் பைத்தியக்காரன் என்பான்!
நீங்கள் பைத்தியக்காரன் என்று உங்கள் !
குடும்பத்தில்!
அப்பா/அம்மா/உடன்பிறந்தவர்கள்/!
மனைவி/பிள்ளைகள்!
யாராவது சொல்ல வேண்டும்!
அதன்பிறகுதான் நாங்கள் இங்கு !
சேர்த்துக் கொள்வோம்!
போலாம் வாடா!
நீ எங்க போனாலும்!
யாரும் சேர்த்துக்க மாட்டாங்க!
உன் பொண்டாட்டிப் பிள்ளைங்க மாதிரி!
சார் இங்கே சேர்த்துக்க பணம் காசு!
எதாவது கொடுக்கணுங்களா!
ஐயா !
நான் உண்மையில் பைத்தியக்காரன்தான்!
அதோ பாருங்கள்!
என் அண்ணன் அங்கே இருக்கிறான்!
அண்ணா என்னையும் !
இங்கே சேர்த்துக்கச் சொல்லுங்கண்ணா!
அவர் உங்கள் அண்ணன் இல்லை !
அவர் டாக்டர்!
உங்கள் குடும்பத்தோடு வாருங்கள்!
அவர்கள் சொல்ல வேண்டும்!
நீங்கள் பைத்தியக்காரன்தான் என்பதற்கு!
சரியான அத்தாட்சிக் கிடைத்தப்பிறகு!
உங்களுக்குக் கண்டிப்பாக இங்கே இடம் உண்டு!
தயவு செய்து வெளியே போங்கள்

எனக்கும் உங்களுக்கும் நீண்டதொரு

மயூ மனோ
வழக்குண்டு! !
-------------------------------------------------------!
முப்புரம் எரித்தவனே!
முக்கண் விநாயகனே!
மூத்தவனைக் கோபித்த!
எந்தன் கடம்பனே!
சிவனின் பாதியே!
சின மிகு காளியே!
கோவில் காத்து நிற்கும்!
வைரவேனே, மாடனே!
முக்கோடி தேவர்களே!
முனிகளே பரிவாரங்களே !
வாருங்கள் எந்தன்!
வழக்காடு மன்றுக்கு!
நில்லுங்கள் அங்கே!
எனக்கொரு வழக்குண்டு !
பாலும் பசுநெய்யும்!
பழமும் பன்னீரும்!
பட்டுங் குஞ்சரமும்!
பறித்தெடுத்த புதுப் பூவும்!
கொட்டும் விபூதியும்!
குளிர்க்க வைக்கும் அபிசேகமும்!
நாவினிக்கும் தமிழ்ப் பாவும்!
நாழிக்கொரு பூசையுமாய்!
உங்களுக்கு நாங்கள்!
என்னதான் குறை வைத்தோம்? !
சம்பந்தன் பாக் கொண்ட!
கேதீச்சரத்தானே!
பேடுடன் விடையேறி!
பேருலா நீ வந்த வீதியெல்லாம்!
எருதுடன் எமை வெட்டுகையில்!
நெற்றிக் கண் திறந்து!
நெடுமென நின்ற ஈசா!
முப்புரம் எரித்த தீயில்!
மூன்று பொறி கிடைக்கலையா? !
பசிகொண்ட சம்பந்தன்!
இசைகூட்டி அழுத போது!
ஞானப் பால் கொண்டு!
விடையேறி வந்தவளே!
பிஞ்சு நடை பயிலா வீட்டில்!
பிச்சை மறுத்த சிவனே!
பசி கொண்ட என் குழந்தை!
செத்த தாய் மடி உறிஞ்சிய போது!
வானுக்கும் மண்ணுக்குமாய்!
ஏன் உங்கள் பசு பறக்கவில்லை? !
நாலு வீதியில் பந்தலிட்டு!
நாம் தேர் இழுத்த பாதைகளில்!
நாயாய் என் சனம்!
நாதியற்றுச் சாகையிலே!
நல்லூர்க் கந்தா!
எந்தப் படை வீட்டில் நீ!
எத்துணைவி துணையிருந்தாய்? !
கற்பூரச் சட்டியிலே தான்!
காணிக்கையாக எரிந்த மகள்!
கற்புக்காய் எரிகையிலே!
கற்பூர நாயகியே கனகவல்லி!
எங்கு போனாய்? !
நயினையின் தேவியளே!
தெல்லிப்பளை துர்காவே!
வற்றாப்பளை குடிகொண்ட!
மார்பு திருகி மதுரை எரித்தவளே!
என் தேசம் அழிகையிலே!
எங்கேயம்மா உங்கள் சூலங்கள்? !
பாய் விரித்து மடை கொட்டி!
பால் நிலவில் உனைப் பணிந்து!
கோவில் காப்பது போல் எம்!
கோட்டை காக்கக் கேட்டோமே!
கோப வைரவனே!
நீயுமேன் வரவில்லை? !
ஐயோ ஐயோ என்று!
அலறித் துடித்தோமே!
எரியுதே என் தேசம்!
ஈசா வா என்றோமே!
படைத்தவன் படி அளப்பான் என்று!
பட்டினியில் செத்தோமே!
எங்கு போனீர்கள்!
ஏன் ஒருவருமே வரவில்லை? !
என் தாய் எனக்குத் தந்த!
பாலின் மேல் உரிமை இருந்தால்!
அவளூட்டி வளர்த்து விட்ட!
என் தமிழ் மேல் உரிமை இருந்தால்!
சைவத்தையும் தமிழையும்!
கண்களாக்க உரிமை இருந்தால் !
அந்தக் குருதி மேல் ஆணையிட்டு!
என் தமிழின் மேல் ஆணையிட்டு!
முக்கண்ணா நீ படைத்த!
மூவுலகின் மேல் ஆணையிட்டு!
அழைக்கிறேன் உங்களை; !
வாருங்கள் கடவுள்களே!
நில்லுங்கள் அங்கே!
எனக்கும் உங்களுக்கும்!
நீண்டதொரு வழக்குண்டு

கையாள விரும்பாத ஓர் கவிதைமொழி

துஷாந்திக்கா
முகமூடி அணிந்த இருள் ஒன்று !
கவ்விக்கொண்ட சொப்பனங்கள் !
சுமந்த அந்த சுதந்திரமற்ற அறையின் !
முனையில் சுவாசிக்க கூட முடியாது !
சுருண்டுகிடந்ததொரு கவிதை! !
மண்ணில் ஜனனித்த நாள் முதலாய் !
விடுமுறையின்றி ரசிக்கப்பட்ட !
அக்கவிதை மரணத்தை யாசித்து தன் !
சுவாசங்கள் சுருக்கி சுருண்டுபோய் !
கிடக்கிறது, சுதந்திரம் என்ற சொல்லையே !
சுத்தமாய் துறந்திருக்கும் அவ்விருள் சூழ்ந்த!
இருட்டறையில்! !
தற்கொலைக்கான முயற்சிகள் யாவும் !
தட்டிக்கழிக்கப்பட்ட நிலையில் தளர்ந்து !
போன நம்பிக்கைத்தாலாட்டை மீண்டும் !
ஒருமுறை தூசி தட்டி மெட்டமைத்து!
பாடியது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் !
அக்கவிதை! !
புல்லாங்குழல்களின் துளைகள் வழியே !
ஊடுருவும் காற்று உயிர் பெற்ற !
ஓரிசை போல் உருமாறுவதைப்போல !
இக்கவிதையின் கண்களில் கலந்த !
அகோரக்கோரிகள் கூட அம்சமுள்ள !
ஓர் அற்புதப்பிறவிகளாய் அறியப்பட்டிருந்தனர்! !
ஆற்றாமையின் அடித்தளப்பாதடியில் !
அணுவணுவாய் அனுங்கிக்கொண்டிருக்கும்!
ஒளியறியா கவிதையொன்றினால் உள்!
மூச்சு சுவாசத்தை வெளியெறிந்து விடுவதை !
தவிரவும் வேறென்ன செய்து விட முடியும்?