என்னைக் கடந்து செல்லும்!
முகங்களின் புன்னகைகளை!
ஏளிதில் என்னால்!
நம்பிவிட முடியவில்லை !
புன்னகைகளின்!
பின்னால் தடவப்பட்டுள்ள!
விஷங்களின் கதிர்கள்!
என்னைப் பயமுறுத்துகின்றன !
என் முன்னால்!
பற்கள் வெள்ளையாய்ச் சிரிக்கின்றன!
என் பின்னால்!
அவை என்னைக் கேவலப்படுத்தி!
வஞ்சகம் செய்கின்றன !
எதையும் நம்பிவிடமுடியாதபடி!
காலம் என்னைக்!
கடந்தபடி இருக்கிறது !
ஊரெல்லாம் என் கதைகளை!
சொல்லித் திருப்திப்படுகின்றன வாய்கள் !
வாய்களில் வழிந்தபடி இருக்கும்!
விஷங்களையும் வீணீரையும்!
என் கண்கள் கண்காணித்தபடியே இருக்கின்றன !
யாரையும் எளிதில்நம்பமுடியாத!
அபத்தம் எண்ணி!
என் மனம் அழுகின்றது !
என் முன்னால்!
நீலம் பாரித்த ஒரு நதி!
ஓடிக்கொண்டிருக்கிறது !
ஏன் கண்ணீர்த்துளிகள்!
நீலநதியில் சேர்கின்றன !
கண்ணீர்த்துளிகள்!
என்றோ ஒரு நாள்!
நதியைச் சுத்திகரிக்கும்!
என்று என் மனம்!
நம்பியபடி இருக்கிறது

த. அஜந்தகுமார்