மது மாது சூது வேண்டவே : வேண்டாம் ! !
மண்ணாசை பெண்ணாசை பேராசை வேண்டாம் ! !
பிறன் மனை நோக்கவே வேண்டாம் - அதில் !
பேரின்பம் உண்டென்று அலைய வேண்டாம் ! !
கல்நெஞ்சர் கயவர் கொடுமதியர் - வஞ்சகர் !
கள்வர் பொறாமைகாரர் உறவு வேண்டாம் !
கடுகளவும் தீமைகளைப் புரிய வேண்டாம் - பிறர் !
குடும்பத்தை ஒரு போதும் பிரிக்க வேண்டாம் ! !
வட்டிப்பணம் வாங்க வேண்டாம் - சிறிதும் !
வரதட்சனை கேட்க வேண்டாம் - ஒரு போதும் !
சட்டத்தை மீற வேண்டாம் - என்றும் !
சங்கடத்தில் மாட்ட வேண்டாம் !
வீண் பேச்சை பேச வேண்டாம் - பிறரோடு !
புறம் பேசி மகிழ வேண்டாம் - வாழ்வில் !
இதையெல்லாம் உணர்ந்து வாழ்ந்தால் !
இறைவனை தேடி எங்கோ அலைய வேண்டாம் !
மாதா பிதா குரு தெய்வம் மதித்து வாழ்ந்து !
மனைவி மக்கள் நலன் பேணிக் காத்து !
குடும்பமே கோவில் என்று வாழும் !
மனிதனே தெய்வம் தேடி வணங்குவோம். !
-து.பாண்டியன்
து.பாண்டியன்