திரைப்பட வாய்ப்பு மறுக்கப்பட்டு!
ஊடக வாசல்கள் மூடப்பட்டு!
அலைகள் உரசும் கரையின் நடுவே!
பயணம் போனான்!
கம்பன்!
பசியோடு!
சுவடுகளின் உதிர்ந்த!
கவிதைச் சொற்களைக்!
கையகப்படுத்திய கடல்!
பையப் பையப்!
பாற்கடல் ஆயிற்று,,,!
வறண்ட காவிரி!
மனதைப் பிறாண்ட!
தொண்டை அடைத்தது!
கவிச்சக்கரவர்த்திக்கு.!
கொக்கக்கோலா விற்கும்!
சிறுவனுக்குக் கொடுக்கக்!
காசில்லை.!
சம்பந்தமில்லாமல்!
அரபு நாட்டிற்குப் பிழைக்கப்போன!
சடையப்பன் ஞாபகம்!
தொற்றிக் கொண்டது.!
குலோத்துங்கன் டெல்லிக்குப்போய்!
நான்கு நாளாச்சு!
அமெரிக்க அதிபர்க்குக்!
கொடை கொடுக்கப் போனவன்,,,!
மிச்சமிருக்கும் காவியச் சித்திரங்கள்!
கோடைவெயிலில்!
வியர்வைத் துளிகளாய்!
உதிரத் தொடங்கின,,,!
(தொடரும்)!
-சேதுபதி!
[ இது நெடுங்கவிதைகளின் தொகுப்பு நூல் ]
சேதுபதி