தியானம் - முருகன் சுப்பராயன்

Photo by Tengyart on Unsplash

அம்பத்தேழு வயசு கணவன்!
சர்க்கரை வியாதியால்!
செத்து போனதுக்கு!
வாயையும் வயிற்றையும் !
அடித்துக்கொண்டு!
அழும் மனைவி,!
“என் ராசாவ!
எடுத்து போனதுக்கு!
பதிலா!
தொண்ணுத்தி மூணு!
வயசுலயும்!
கல்லு மாதிரி இருக்குற!
அவர் அம்மா!
போயிருக்கலாமே…” !
என்கிற புலம்பலை....!
டிவி நாடகங்கள்!
பார்க்காமல், !
கதை சொல்லி,!
நிலா சோறு ஊட்டி,!
நடக்க கத்து கொடுத்த!
பாட்டியா பத்தி !
பேசுறது கேட்டு!
பதறுகிற!
பேரக் குழந்தைகளுக்கு!
தெரிய வில்லை!
ஐம்புலன்களையும்!
அடக்கி!
தியானம் பயின்ற!
பாட்டியின் காதில்!
கடும் சொற்கள் !
விழ போவதில்லை!
என....!
!
-முருகன் சுப்பராயன!
Murugan Subbarayan, Mumbai
முருகன் சுப்பராயன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.