மனைவியென்பவள் யாதுமானவள் - வித்யாசாகர்

Photo by Kilimanjaro STUDIOz on Unsplash

நீயில்லாத இடம் தேடிக் குவிகிறது!
வார்த்தைகள்..!
உன் நினைவுகளின் அழுத்தம் அறையெங்கும்!
கொல்லும் தனிமையை உடைத்தெறிகிறது கவிதை;!
கவிதையின் லயம் பிடித்து!
வரிகளாய்க் கோர்க்கிறேன்!
உள்ளே நீயிருக்கிறாய்,!
என் பசியறிந்தவளாய்!
என் உறக்கத்தின் அளவறிந்தவளாய்!
என் வாழ்வின் தூரம் முழுதும் உன் மயமாகியிருக்கிறாய்..!
காற்று!
வீட்டுச் சுவர்!
உன் துணிகள்!
எங்கும் தொடுகையில் உன் முகம் உன் குரல் உன் அன்பு!
உன் வாசனைமுழுதும் நான் கலந்து!
என் எல்லாமுமாய் நீ மட்டுமேயிருக்கிறாய்..!
உன் பார்வை விடுபடுகையில்!
போகமாட்டேனென்றுக் கதறியதை நானறிவேன்!
போகையில் மறுக்குமுன் பாதங்களின் தவிப்பை நானறிவேன்!
போய் கடைமுனையில் நின்று திரும்பிப் பார்க்கும்போதே!
ஓடிவந்துவிட துடித்த மனசையும் நானறிந்து!
கூடவே நான் கதறியதையும் இந்த வரிகளுக்குச்!
சொல்லிவைக்கிறேன்..!
இந்த வரிகள் நம் பிள்ளைகளுக்கு நம்!
அன்பைச் சொல்லும்!
அன்பு அவர்களையும் வளர்க்கும்!
அவர்களால் வலுக்கட்டுமிந்த சமுகம்’ போய் வா!
ஊர்போய் நீ திரும்பி வரும்வரை,!
நீ விட்டுச்சென்ற உன் மனசாக!
துடித்துக்கொண்டேயிருப்பேன் நானும்’ உனக்காய்!!!
வித்யாசாகர்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.