வாழ்க்கை - கா.ஆனந்த குமார்

Photo by Tengyart on Unsplash

என் அம்மா எங்கே இருக்கின்றாய் .?!
நானும் நீயும்!
அப்பாவும் தம்பியும் அனைவரும்!
அன்பாகத்தானே இருந்தோம்!
ஊரெல்லாம் ஓடிக்களைத்த!
என் மனதில் நீயும்!
உன் அன்பும் ...!
உறவுகள் நீங்கிய உலகில்!
சூனியமாகிவிட்டது வாழ்க்கை!
பதுங்கு குழி வாழ்க்கை!
பயமாயுள்ளது அம்மா !!
மீண்டுமொருமுறை தருவாயா கருவறையை!
வேண்டாம் !!
வானிலிருந்து காற்றின் திசை பிளந்து!
இறங்கும் குண்டுகளுக்கு தெரியவா போகிறது ...?!
வித்தியாசம்!
பதுங்கு குழிக்கும் கருவறைக்கும் ....!!
!
-கா.ஆனந்த குமார் !
தமிழ் ஆய்வாளர்!
பாரதியார் பல்கலைக்கழகம்!
கோயம்புத்தூர் -46
கா.ஆனந்த குமார்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.