வாழ்க்கை வணிகன் .. நகரியம் - ஆ.மணவழகன்

Photo by Didssph on Unsplash

வாழ்க்கை வணிகன் !
01.!
வாழ்க்கை வணிகன் !
------------------------!
பாருங்க சார்!
தெய்வப் புலவர் வள்ளுவர்!
எழுதியது சார்!
வாழ்க்கைக்குத் தேவையான !
வழிகளைச் சொல்வது சார்!
மூன்று பெரும்பகுப்புகள்!
நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள்!
ஆயிரத்து முந்நூற்று முப்பது !
குறள்களைக் கொண்டது சார்!
வெளியில் வாங்கினா!
இருபத்தி ஐந்து ரூபா சார்!
கம்பெனி விளம்பரத்துக்காக!
வெறும் பத்து ரூபா சார்!
தொடர்வண்டிச் சிறுவன்!
மலிவு விலையில் விற்றுச் செல்கிறான்!
திருக்குறளோடு வாழ்க்கையையும் !
02.!
நகரியம் !
---------------!
சாக்கடை நாற்றத்தோடு !
கழிவுநீர் ஊற்றுகள் !
அலங்காரத்திற்கு மட்டும் அணிவகுக்கும்!
பறவைகள் அமர்ந்தறியா செயற்கை மரங்கள் !
முளைக்காத தானியங்கள்!
விதை கொடுக்காத கனிகள் !
உயிரில்லா முட்டைகள் - தாய் தந்தை!
உறவறியா குளோனிங் குழந்தைகள் !
ஆணிவேரில் வெந்நீர் ஊற்றும்!
அறிவியல் வளர்ச்சிகள் !
ஆடுகளை மலையில் விட்டு!
அருகிருக்கும் கொல்லையில் கதிரொடித்து!
பால் பருவக் கம்பைப் பக்குவமாய் நெருப்பிலிட்டு!
கொங்கு ஊதித் தாத்தா கொடுத்த!
இளங்கம்பின் சுவைக்கு!
ஈடு இது என்று!
எதைக் காட்டி ஒப்புமை சொல்வேன் !
பச்சைக் கம்பு தின்றதே இல்லை!
ஆதங்கப்பட்ட தோழிக்கு
ஆ.மணவழகன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.