நித்திரையின் முன் உள்ள சில மணித்துளிகள்!
நீண்டும் முதிர்ந்தும் !!
சிந்தனை லயம் தேடலுக்குமிடையில்!
மெல்லென முகிழும் என் மனக்கண் -!
நினைவுகளின் சிதைவுகளை!
அசைமீட்ட வண்ணம் !!
என்னை நானே நானாகப் பார்க்கையில்!
ஏனோ வாழ்வு கசந்தது !!
(எனக்குள்) முகங்களை சற்றே மாற்ற முயல்தலில்!
தோற்றே போக -!
சிறுகச் சிறுக விரியும் எனதுலகம் -!
சரி பிழை பார்த்து மீண்டும் மனிதனாய்!
என்னைச் சிற்பமிட முயல்தலில் கண்ணயர்தல் கூடும் !!
அதிரும் கடடிகாரம் - நிறுத்தி மெல்ல எழுகையில்!
ஏனோ மறந்தே போகும் மனிதனாதல்!
மீண்டும் ஓர் இரவிற்காய் . . . . . . .!
பங்குனி 7-2002!
கனடா

மாலியன்