விட்ட இடத்திலிருந்து !
தொட்டுப் பார்க்க !
நினைக்கும் மனம் !
இன்னும் மறக்கவில்லை !
அந்த சோகத்தின் வடுக்களை... !
கடற்கரை நண்டுகளெல்லாம் !
காலை விறாண்டிக்கொண்டு ஓட !
காலன் அள்ளிச் சென்று !
காலாவதியாகிப்போன !
அந்தக் கணங்களைத் !
தேடிப்பார்த்த படி !
அந்தத் தேசத்தின் சிறுசுகள் !
சிறகடித்துப் பறந்து திரிந்து !
சிறுமணல் வீடுகட்டி !
சிந்தனையை வளர்க்க வேண்டிய !
சின்னஞ் சிறுசுகளெல்லாம் !
சுற்றிச் சுற்றித் தேடுகின்றன !
காற்றின் இடமெல்லாம் !
தம் பெற்றோர் விட்டுச் சென்ற !
இறுதிச் சுவாசக் காற்றினை !
கடற்கோளாய் வந்து !
காலனாய் அள்ளிச் சென்ற !
அந்தக் கடலை வெறித்துப் !
பார்த்து வேதனிக்கும் மனங்களெல்லாம் !
வெறும் உப்புக்காற்று !
கொண்டு வந்து கொட்டிச் செல்லும் !
வெள்ளை நுரையைத் தான் !
கேட்க வேண்டும் தம் உறவுகளை... !
!
புஷ்பா கிறிஸ்ரி
புஸ்பா கிறிஸ்ரி