உதிர்ந்தும்!
உலர்ந்தும் சர சரக்கும் இலையென!
நீ!
இல்லாத போதும்!
இருப்பதாகவே காட்டிக்கொள்கிறேன்!
வீட்டின் உட்பகுதியில்!
சூனியத்தின் தழுவல்கள் நிறைந்து!
ஆழ்ந்த நிசப்தத்தில்!
வன்முறை அழைகிறது!
இழுத்துவிடும் பெருமூச்சு!
மீட்டுகின்றன உனக்கான அழைப்பொலியை!
உன் இருக்கையில் அமர்ந்துகொள்கிறேன்!
பகிர்வுகள் பற்றி மௌனம்!
பேசிக்கொண்டே இருக்கிறது!
குழந்தையின் அழுகையைப்போல!
சாத்தியிருக்கும் சன்னலுக்கு வெளியே!
மழையும் வந்து செல்கின்றன!
என்னில் நிறைந்து!
கண்ணில் வடிகிறாய்!
ரகசியமாய் பூத்துக்கிடக்கிறேன்!
ஒரு பூவாக!
வாசல் திறந்தே கிடக்கிறது!
பெரும் வரவாய் வந்துவிட்டுப் போ

அறிவுநிதி