1.தீவில் தனித்த மரம்!
தூர தேசப் பறவையொன்று!
தங்கிச் சென்ற மரம்!
மீளவும்!
அந்தப் பறவைக்காகக்!
காத்துக் கிடக்கிறது!
தன் கிளைகள் எறிந்து தேடும்!
வான் பரப்பில் பறவை!
அதன் பாடலைப்!
பதித்துச் செல்லவில்லை.!
வேர்கள் ஊர்ந்து பரவும் மண்ணில்!
அது!
எந்த நிழலையும்!
விட்டுச் செல்லவும் இல்லை!
மலைகளிடமோ நதிகளிடமோ!
பறவை தனது!
பயணப்பாதை பற்றிய!
செய்தி எதனையும்!
பகன்றிடவே இல்லை!
சூரிய சந்திரரும்!
தாரகைக் கூட்டங்களும்!
குருவியின் சேதிகளை!
உரைத்திட மொழியின்றி மறையும்!
வேர்களும் கிளைகளும்!
நீளமுடியாமலொரு பெருங்கடல்!
மெளனத்தில் உறைந்த!
மரத்தைச் சூழ்ந்திருந்து!
ஆர்ப்பரிக்கிறது நிதமும்!
2.ஆதித்துயர்!
நிழல் மரங்களற்றுச்!
சூரியன் தவிதவிக்கும்!
நெடுஞ்சாலையோரம்!
வெய்யிலை!
உதறி எறிந்தவாறு!
நடக்கிறாள் மூதாட்டி!
!
குதி கால்களால்!
நெடுங்களைப்பை!
நசுக்கித் தேய்த்தவாறு!
காற்றைப் பின் தள்ளிக்!
கைகளை வீசுகிறாள்!
வெய்யில்!
மிகப் பெரும் தண்டனையை!
வழி நீளப் பரவவிட்டுள்ளது.!
வேட்டை நாய் போல!
அவள் முன்னே!
ஓடிச் செல்கிறது நிழல்!
பதிந்தெழும் ஒவ்வொரு சுவட்டிலும்!
தேங்கி நடுநடுங்குகிறது!
ஆதியிலிருந்து தொடரும் துயரம்

பஹீமா ஜஹான்