தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தமிழின் முன்னுரை

பாஸ்கர் சூர்யா
அன்னையே...நீ.. அதிசயங்களின் பாசறை!
அன்பின் கருவறை..என் அழகுத் தமிழின் முன்னுரை..!
கண்ணுக்கு தெரிகின்ற கடவுள் நீ தானே..!சில நிமிடம் நான்!
காணாமல் போனாலும் கண்உறக்கம் இழப்பவள் நீ தானே..!!
ஐந்திரு மாத கருவறையில் என்னை காத்தவள் நீ தானே..! என்!
ஐம்புலன் நலமின்றியும் எனை அழகனென்பவள் நீ தானே..!!
மழலையாய் செய்த தவறை மகிழ்வோடு ரசித்தவள் நீ தானே..! இன்று!
மமதையால் செய்த தவறால் என்னோடு கலங்குபவள் நீ தானே..!!
பயணங்கள் தரும் சோகங்களில் நிழலாய் தொடர்பவள் நீ தானே..! நான்!
பயன்படாதவன் ஆனாலும் என்மேல் பாசமாய் இருப்பவள் நீ தானே..!!
கல்லில் தடுக்கி விழுந்தபோது அந்த கல்லை அடித்தவள் நீ தானே..! என்!
கண்ணீல் தூசு பட்டால் கலங்குபவளும் நீ தானே..!!
வேலையின் தாமதத்தில் சில நிமிடம் ஆனாலும்!
வீட்டுக் கதவின் நிலையாய் மாறுபவள் நீ தானே..!.!
உண்மையன்பு ஊறுகின்ற ஊற்று நீ தானே..!!
உனக்கு உதவாதவன் நானாலும் என்!
உச்சிமுகர்ந்து மீது முத்தம் தருபவள் நீ தானே..!!
தொலை தூரம் பயணத்திலே என்னோடு!
திருநீறாய் வருபவள் நீ தானே..! அந்த திருநீறும்!
கண்ணில் பட்டு கலங்கிடுமோ கண்..? என அதை ஊதி!
கலைத்தவள்.. நீ தானே..!!
!
அன்போடுஇதமிழ்ப்பண்போடுஇதேசப்பற்றோடு என்!
தேகத்தை வளர்த்தவளே..!!
இன்று என்னை தவியாய் தவிக்கவிட்டு!
தனியாய் சென்றது நீ தானே..?!
சோகம் கொண்டு நான் வாடும் போது!
எனை தேற்றுவது நீ தானே..!!
நீ பிரிந்த சோகத்துடன் நான் அழுகிறேன்..!
என் கண்ணீர் துடைக்க நீ வருவாயா..?!
என் உச்சி முகர்ந்து அன்பு முத்தம் தருவாயா..?!
உன் மடியில் கண்ணுறங்க சில நொடி எனக்கு தருவாயா..?

மதியுரை

அகரம் அமுதா
கவிஆக்கம்: அகரம் அமுதா!
தேய்ந்து தேய்ந்து!
தொலைந்த நிலாவும்!
தோன்றி வளருது கண்டாயா ? அது!
தேய்ந்து தொலைந்தும்!
தோன்றி வளர்த்தும்!
தருமதி யுரைதனை கொண்டாயா?!
வளரும் போதும்!
மதியிழந் தேசிறு!
வழியும் மாறிச் செல்வதில்லை அது!
தளரும் போதும்!
தன்னை மறந்து!
தடத்தை மாற்றிக்கொள்வதில்லை!!
கொடுக்கக் கொடுக்கக்!
குன்றும் குறையும்!
கோள நிலாவும் குறைகிறது தனை!
எடுத்துக் கொடுத்த!
இளைய நிலாவின்!
இசையே பிறையாய் நிறைகிறது!!
முயன்றால் நிச்சயம்!
ஏற்ற மென்பதே!
பிறைவளர்ந் துணர்ந்தும் மதியுரைகாண. - நாம்!
முயலா விட்டால்!
வீழ்ச்சி யென்பதை!
முழுமதி தேய்ந்து உரைப்பதுகாண்!
இல்லை என்னும்!
இருளை ஓட்ட!
இளைய நிலாபோல் ஈந்துவிடு நீ!
கொள்ளை காணா!
திருக்க வேண்டின்!
ஈயும் போது ஆய்ந்துகொடு!
!
கவிஆக்கம்: அகரம் அமுதா!
தெகடர்புக்கு: 92468200

விலகலுக்கான நெருக்கத்தில்

தர்சினி சண்முகநாதர்
பருவச்சுழற்சியில் !
பாதையோரப் பனித்துளிகள் !
கசிந்துருக !
கொட்டும் பனியும் !
கருக்கும் வெயிலுமில்லாத !
இளவேனிற் காலத்து !
இதமான ஆரம்பம் !
ஏனோ !
மனவெளிமட்டும் !
புழுங்கித் தவிக்கிறது !
சைக்கிளில் பள்ளிபோய் !
சாயங்காலம் !
ரியூஸனுக்கும் போய் !
கச்சான் கடலைக்காய் !
கோயில் திருவிழாபோய் !
நிலவுமிழும் ராத்திரிகளில் !
நீள நடந்தலைந்து !
பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட !
பால்ய நட்பல்ல எங்களது !
அந்நிய தேசமொன்றின் !
அர்த்தப்படாத வாழ்க்கையில் !
உணர்வுகளைத் தேடி !
உறைந்து போயிருந்தேன் !
பனிக்கால மரங்களைப்போல் !
பட்டுப்போன என் !
நட்பின் வேர்களுக்கு !
இந்த கால்ற்ரன் வளாகத்தில் !
வைத்து !
நீதான் நீரூற்றினாய் !
எனக்குள்ளிருந்த !
உணர்வின் உயிர்ப்புக்களை !
உலுக்கியெழுப்பினாய் !
விழித்து நானெழுகையில் !
விடைகொடு என்கிறாய் !
போய்வா நண்பனே !
நீயும் நானும் சேர்ந்து !
பீட்ஸா கடித்த !
யுனிசென்ரர் நாற்காலிகள் !
இனியும் அங்கிருக்கும் !
அருகமர்ந்து !
மடல்கள் மாற்றிக்கொண்ட !
மக்கன்ஸி கணனிகளும் !
அங்கேதானிருக்கும் !
வகுப்புக்குப் போகாத !
வசமான நேரங்களில் !
சுற்றி நாம் நடந்த !
சுரங்கப் பாதைகளும் !
நீண்டிருக்கும் !
பரீட்சைத் தாள்களில் !
படிக்காததையும் !
இறக்கிவைத்துவிட்டு !
பித்துப் பிடித்ததுபோல் !
பேசாமல் நாமிருந்த !
ஆற்றுப் பாறைகளும் !
அங்குதானுறைந்திருக்கும் !
ஆனாலும் !
நீ !
இப்போது போகவேண்டும் !
போய்வா நண்பனே !
இது விடைபெறும் நேரம் !
கைகளில் !
பட்டம் !
நெஞ்சினில் !
கனக்கும் நினைவுகள் !
கண்களில் !
நாளைக்கான !
கனவுகளையும் மீறிய !
ஈரக் கசிவுகள் !
நீ !
புறப்பட்டுவிட்டாய் !
போய்வா நண்பனே !
இது விடைபெறும் நேரம் !
நாளை... !
அசைன்மென்ஸ் !
லாப்ஸ் எக்ஸாம்ஸ் !
எல்லாம் உறிஞ்சி !
எஞ்சியுள்ள என் நேரங்களில்... !
யாரோ முணுமுணுக்கும் !
உனக்குப் பிடித்த !
சினிமாப் பாடலில் !
ஓங்கியுயர்ந்த !
மரங்களின் அடியிலிருக்கும் !
ஒற்றை நாற்காலியில்... !
உதிர்ந்திருக்கும் !
உனது !
ஞாபகத்துணுக்குகளை !
நான் ஒன்று !
சேர்த்துப்பார்க்கலாம் !
எப்போதாவது !
நீயனுப்பும் மடல்களில்... !
ஏதோவொரு !
திருமண அல்பத்தில்... !
இப்போதைய உன்னை !
இனம்காண முயற்சிக்கலாம் !
வாழ்வற்ற !
வாக்குறுதிகளிலும் !
ஆதாரமற்ற !
நம்பிக்கைகளிலும் !
சுமக்கவியலாத இந்த !
பிரிவுச்சுமையிற்கு !
கொஞ்சம் சாய்ந்துகொள்ள !
உள்ளம் கெஞ்சுகிறது !
உன் தோள்வளைவில் !
என் முகம்புதைத்து !
ஓவென்று கதறியழுது !
ஆசுவாசப்படுத்திக் கொள்ள !
மனம் அவாவுகிறது !
ஆனாலும் !
முடியவில்லை நண்பனே !
உன் !
இமை விளிம்புகளுரசும் ஈரம் !
என் விழியுடைப்பிற்காகத்தான் !
காத்திருக்கிறதென்பது !
தெரியும் !
ஆதலால் !
முடியவில்லை !
போய்வா நண்பனே !
இது விடைபெறும் நேரம் !
சற்றுமுன்... !
என் எலும்புருக்கி !
நீயணைத்து நின்ற !
அந்த கனமான நொடிகளாய் !
எனக்குள்ளும் !
உனக்குள்ளும் !
எம் நட்பு !
சாஸ்வதமாயிருக்கும் !
அதனால் !
போய் வா நண்பனே... !
!
நன்றி :: !
கால்ற்ரன் பல்கலைக்கழக தமிழ் பட்டதாரிகளின் மலர் 2002

உனைப் பெற்ற நிறைவுக்கு ஈடுமில்லை

புகாரி
தத்தித் தித்தித் !
தங்கநிலவே - நீ !
தாவணிப் பூவுக்குள் பூவானாய்! !
முத்துத் தெறித்திடும் !
மெய்யழகே - நீ !
முகத்தைக் கவிழ்த்தே சிரிக்கின்றாய் ! !
பெத்த மனங்களின் !
பொந்துகளில் - நீ !
பிறந்ததும் மீட்டிய குரலிருக்கு ! !
எத்தனை வளர்ந்து !
நிமிர்ந்தாலும் - உனை !
எடுத்தே கொஞ்சிடும் உயிரெனக்கு ! !
பத்துத் திங்கள் !
சுமந்தவளும் - உன் !
பருவம் கண்டே வியக்கின்றாள்! !
ரத்த ழையின் !
சின்னவனும் - நீ !
ரத்தினத் தீவெனக் கூவுகின்றான் ! !
நித்தம் ஒளிரும் !
நெற்றிமொட்டே - என் !
நெஞ்சலே¢ வளரும் தாலாட்டே! !
புத்தம் புதிய !
மழைத்துளியே - நீ !
பேசிடும் மொழியும் தேனிசையே! !
முத்தக் காட்டில் !
விட்டுவைத்தேன் - நீ !
மூர்ச்சையாகிப் போகவில்லை ! !
கட்டித் தழுவி !
நொறுக்கிவைத்தேன் - உன் !
கண்களில் தாகம் தீரவில்லை ! !
எத்தனைப் பாசம் !
பொன்னழகே - நீ !
ஏணிக்கு எட்டாத வெண்ணிலவே! !
பொத்திய கைக்குள் !
வைரமென்றே - உனைப் !
பெற்ற நிறைவுக்கு ஈடுமில்லை

கோடை விடுமுறை

அருண்மொழி தேவன்
7மணி முதல் 8மணி வரை!
சங்கீத சாதகம்...!
8மணி முதல் 10மணி வரை!
கணிப்பொறி பயிற்சி...!
10மணி முதல் 12மணி வரை!
அபாகஸ் பயிற்சி...!
12மணி முதல் 1மணி வரை!
நீச்சல் பயிற்சி...!
மதிய உணவு முடிந்தவுடன்!
ஆரம்பித்து விடுகிறது!
ஓவியப் பயிற்சி...!
4மணிக்கு தொடங்குகிறது!
நடனப் பயிற்சி...!
8மணிக்கு இந்தி வகுப்பை!
முடித்துக்கொண்டு!
வீடு திரும்பிய!
ப‌க்க‌த்து வீட்டு பாப்பாவுக்கு!
த‌மிழ் பாட‌ம்!
ந‌ட‌த்த‌த் துவ‌ங்கினேன்!
ஓடி விளையாடு பாப்பா என்று. !
-அருண்மொழி தேவன்

மழையாக பெய்திடுவோம்

அஸ்மின், ஈழநிலா, இலங்கை
இலங்கையர்கள் நாங்களெல்லாம் சகோதரர்கள் என்றிடுவோம்!!
இசையோடு நாதம்போல் இணைந்தேநாம் நின்றிடுவோம்!!
கலங்குவதால் பயனில்லை கவலைகளை கொன்றிடுவோம்!!
விலங்குகளாய் விளங்காமல் விலங்குகளை வென்றிடுவோம்..!!
உலகத்தின் ஐக்கியத்தை ஒன்றாகி நெய்திடுவோம்..!!
உலர்ந்துநிற்கும் மனங்களுக்குள் மழையாக பெய்திடுவோம்..!!
கலகத்தை காதலிக்கும்; உணர்வுகளை கொய்திடுவோம்..!!
களைவளர்ந்த பூமியிலே கலைவளர செய்திடுவோம்..!!
நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்!!
நேர்வழியில் பூப்பறித்து பாரினிலே சிறந்திடுவோம்!!
சிரமம்தான் என்செய்ய கடந்தவற்றை மறந்திடுவோம்!!
சிக்கல்களை விட்டுவிட்டு சிறகடித்து பறந்திடுவோம்!!
சாதிமதம் பார்க்கின்ற சறுகுகளை உதைத்திடுவோம்!!
சாத்தானின் சரித்திரத்தை குழிதோண்டி புதைத்திடுவோம்!!
சாந்தியினை ஊர்கூடி உலகெங்கும் விதைத்திடுவோம்!!
சண்டையிட்டு சரிந்தவர்கள் உளம்;திறந்து கதைத்திடுவோம்..!!
அடிமைக்கும் மிடிமைக்கும் கொடுமைக்கும் கொள்ளிவைப்போம்!-எம்மை!
அழவைக்கும் விழவைக்கும் தவறுகளை தள்ளிவைப்போம்!!
புரிந்துணர்வு கோலமிட புன்னகையால் புள்ளிவைப்போம்-நாம்!
புரிந்துகொண்ட சேதிகளை பூக்களுக்கும் சொல்லிவைப்போம்..!!
!
எம்நாடு முன்னேற எம்மவர்கள் சேரவேண்டும்!!
நம்நாடு இலங்கையென நம்மவர்கள் கூறவேண்டும்!!
கண்ணோட வலிதந்த காயங்கள் ஆறவேண்டும்!!
மண்ணோடு போய்விடமுன் மனதெல்லாம் மாறவேண்டும்!!
எம்துயரம் இன்றோடு வீழவேண்டும்.!
எமக்குள்ளே நல்லுறவு சூழவேண்டும்-நாம்!
ஒருதோப்பு குயிலாக வாழவேண்டும்-எம்!
ஒற்றுமையால் எம்தேசம் வாழவேண்டும்.!
மண்ணாகும் வாழ்வினிலே மனமுவந்து விட்டுக்கொடு!!
மாற்றானின் முயற்சிக்கும் துவேசமின்றி முட்டுக்கொடு!!
இல்லாத மனிதருக்கு இருப்பதனை பெற்றுக்கொடு-நாம்!
இலங்கையராய் வாழ்வதற்குன் குழந்தைக்கும் கற்றுக்கொடு..!!
மடமைகளை துரத்திவிட்டு மனங்களினை வாசிப்போம்!!
மறைந்திருக்கும் கலைஞர்களை மனமுவந்து ஆசிப்போம்!!
இனமதங்கள் நாம்கடந்து தாய்நாட்டை நேசிப்போம்.!!
இருக்குவரை இறக்கும்வரை தமிழ்மொழியை சுவாசிப்போம்

பள்ளத்தில் நெளியும் மரணம்

கே.பாலமுருகன்
இறந்தவர்களெல்லாம்!
பள்ளத்தில் விழுந்து !
மீண்டுமொருமுறை!
மரணிக்க முயற்சிக்கிறார்கள்!!
அவர்களின் தற்கொலைகள்!
தோல்வியில் முடிகின்றன!!
இந்தப் பள்ளங்கள்!
ஒருவரை ஒருமுறைதான்!
இரட்சிக்கும்!!
நிலத்தின் !
சதைப் பிடிப்பில்!
விழுந்த காயங்களைச்!
சுமந்து கொண்டு!
மரணம் நெளியும்!
பள்ளங்கள்!!
வீட்டுக்கொரு!
பள்ளம் உருவாகி!
உயிரோடிருப்பவர்களுக்காகக்!
காத்திருக்கின்றன!!
அவர்கள்!
பள்ளத்தில் விழும்!
கணங்களை!
அங்குலம் அங்குலமாக!
அளவெடுத்து!
நீண்டுருக்கிறது அவர்களுக்கான!
மரணங்கள்!!
நிலம்தோறும்!
வளர்ந்திருக்கும் பள்ளங்கள்!
மரணத்தைக் கண்டு ஓடுபவர்களை!
மிக அலட்சியமாகக் !
கொன்று குவிக்க!
கடவுள் ஏற்படுத்தியிருக்கும்!
பலவீனம்!!
கே.பாலமுருகன்!
மலேசியா

பார்வை

இ.இசாக்
ஒப்பனையோ !
ஒப்பேற்றல்களோ எதுவுமின்றி !
நிர்வாணமாக !
கூச்சமின்றி அறிமுகப்படுத்திக்கொள்கிறேன் !
ஒளிவுமறைவற்ற சொற்களால். !
கேலியாகவும் !
கிண்டலாகவும் !
பேசுகிறாய் !
சிரிக்கிறாய் கொஞ்சமும் வெட்கமின்றி !
பொய்களுக்குள் !
உன்னை புதைத்துக்கொண்டு

நளாயினி குட்டிக்கவிதைகள் 1

நளாயினி
1) !
முகத்திரை விலக்கு. !
மனசை திற. !
வானம் அகல நடைபோடு !
உலகம் உனக்குள். !
2) !
களைப்பைக்காட்டும் !
மூச்சை வெறு !
உடல் எடை குறை. !
துள்ளித்திரி !
நோயில்லா வாழ்வு. !
3) !
தலையில் காக்கா எச்சம். !
தற்செயல் நிகழ்வு. !
தடை தாண்டு. !
4) !
விழிகளைத் திற !
இயற்கையுள் இறங்கு. !
இன்பம் உனக்குள். !
5) !
மழையில் நனை. !
வழிநீர் கரை. !
புதிதாய்ப் பிற. !
!

நளாயினி தாமரைச்செல்வன். !

சொற்களுக்குள் ஒளிந்திருக்கும் மரணம்

சித்தாந்தன்
ஒரு கத்தியிலோ!
உடைந்த கண்ணாடித் துண்டுகளிலோ!
சவரம் செய்து வீசிய பிளேட்டுகளிலோ!
வெட்டியெறிந்த நகத்துண்டுகளிலோ!
எல்லாவற்றிலும்!
ஒட்டியிருக்கிறது மரணத்தின் நெடி!
!
துவைத்துக் காயவிட்ட சட்டைப் பையினுள்!
நனைந்திருந்த கடதாசித்துண்டில்!
எவனோ ஒருவனின்!
மரணம் பற்றிய வாக்குமூலம் எழுதப்பட்டிருந்தது!
காலையில் புறப்பட்டு!
மாலையில் என் பிணத்தை நானே காவியபடி!
வீடு திரும்புகிறேன்!
எதிர்பாராத யாரோ ஒருவனின் வெறித்த பார்வையில்!
நள்ளிரவு நாய்களின் குரைப்பில்!
நிச்சயிக்க முடியாத் தருணத்தில்!
ஏதோ ஒன்று உடைந்து சிதறுகையில்!
உறக்கத்தில் யாரேனும் தட்டி எழுப்புகையில்!
பலமுறையும்!
நான் கொல்லப்பட்டு விடுகிறேன்!
மரணங்கள் அச்சிடப்பட்ட பத்திரிகைகளில்!
இரத்தத்தின் மணம் வீசுகிறது!
எல்லோருடைய சொற்களுக்குள்ளும்!
ஓளிந்துகிடக்கிறது மரணம்!
எனது சொற்களில்!
எனக்கான மரணம் சொருகப்பட்டிருக்கிறது!
இப்போதும்!
நான் படித்து மூடிவைத்த!
புத்தகத்திலிருந்து!
மரணத்தின் மொச்சை அடிக்கிறது