அதிகாலையில் எழுந்தபோது!
பனிப்புகாரைத் தவிர எதுவும் தெரியவில்லை!
எந்த மொழியிலும் ஒரு சொல்லும் மிஞ்சவில்லை!
எவரிடமும் ஒரு துளி நினைவுமில்லை!
எல்லாம் கரைந்தழிந்தன!
அந்த ஒரேயொரு விஞ்ஞானி !
ஆளியைத் தவறி அழுத்தியபோது.!
நினைவுகள் இல்லாத மனிதர்களுக்கு!
பயணங்களுமில்லை!
அடையாளங்களுமில்லை!
அதனால்!
எந்த வீதியிலும் ஒரு பயணமும்!
நிகழ்வதற்கான அவசியமிருக்கவில்லை.!
என்ன அதிசயம்!
நகரத்திற்கும் யாரும் வரவில்லை!
எங்கே போவது!
யாரைக்காண்பது!
எதைச் செய்வது!
என்று தெரியாத் திகைப்புகளில்!
அலைந்தன ஒவ்வொருவரின் படகுகளும்!
எங்கிருந்தோ வந்த மூங்கிலின் ஒலியைக்கூட!
யாராலும் இனங்காண முடியவில்லை!
ஒரு எறும்பையும் !
அதன் பாதைகளையும் கூட.!
எவரிடமும் பகைமையின் எந்தத் தடயமும்!
எஞ்சவில்லை!
கணவனோ மனைவியோ!
பிள்ளையோ!
அண்ணனோ தம்பியோ!
நண்பனோ அயலவனோ விருந்தாளியோ!
வேற்றாளோ காதலனோ!
அதிகாரியோ பணியாளோ!
யாரென்று தெரியவில்லை!
யாருக்கும்.!
எல்லாப் போதையும் தீர்ந்தது!
ஆளியைத்தவறி அழுத்திய விஞ்ஞானிக்கு ஜே!
மிஞ்சிய தொல்லெச்சங்களை !
எரித்து விடும் கருவியையும் இயக்கிவிடுக.!
கருணாகரன்