தூசு.. தலையில்லா
அஸ்மின், ஈழநிலா, இலங்கை
01.!
தூசு!
--------!
மார்கழியில் மாற்றிடவா மாலை!-நீ!
மனமுவந்தால் பூக்குமடி சோலை!-நான்!
கார்வளவு கேட்டிடதா காளை!-எனை!
காதலிக்க வந்திடுநல் வேளை!!
மோருண்ட சுகம்தந்த பெண்ணே!-நிதம்!
மோதுதடி என்மனசில் மின்னே!!
நீர்காற்று வானமழை முன்னே-உயிர்!
நீதானே வேணுமடி கண்ணே!!
பேரழகி என்மனசு வெள்ள!-நீ!
பேசிடாது போவதேன்டி முல்ல!!
பாருலகில் உன்னழகை வெல்ல -எந்த!
பேரழகும் ஊருலகில் இல்ல...!!
பாடலிலே உன்னழகை சொல்ல!-தினம்!
பாடுபட்டு பாணனிவன் துள்ள!-நீ!
ஊடலிலே பார்வைகளால் கொல்ல!-பயந்து!
உதிருதடி வார்த்தைகளும் மெல்ல!!
பனிமலரே பரிவுடனே பாரு!-நீ!
பாசமுடன் நேசமொழி கூறு..!!
கனிமொழியே காதலுடன் சேரு!-நிதம்!
கனிந்துடலால் பெற்றிடுவாய் பேறு!!
மாரழகி மனம் திறந்து பேசு!-இளம்!
மாருதமே தென்றலென வீசு!!
சீர்வரிசை தேவலடி காசு!-அவையுன்!
சிருங்கார மொழிமுன்னே தூசு!!
!
02.!
தலையில்லா முண்டங்கள்!
-----------------------------------!
தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே!
தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்!
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'!
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!!
தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே!
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்!
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்!
தருவாரே சிலஎலும்பு அதற்கு!!
தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்!
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்!
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்!
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!!
தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க!
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்!
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை!
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!!
தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது!
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்!
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்!
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!!
தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு!
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்!
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க!
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்