எது மூலதனம்? - வேதா. இலங்காதிலகம்

Photo by Jan Huber on Unsplash

நம்பிக்கை மூலதனத்தில்!
தன்னம்பிக்கைச் சிங்காசனம்.!
சுயநம்பிக்கை நிர்மாணத்தில்!
சுகவாழ்வு ஆரோகணம்.!
மூலதனமற்ற எத்தனம்!
கோலப் பிழையாகும்.!
பாலைவனத்தில் பயிர்செய்ய!
வேலையற்றவனும் சிந்திக்கான்.!
ஆரோக்கிய உடலிற்கு!
உழைப்பு இலட்சணம்.!
உழைப்பின் மூலதனத்தில்!
உல்லாசம் வேதனம்.!
அங்கீகாரம், அரவணைப்பு!
தங்கமூலதனம் பாலருக்கு.!
பொங்கும் ஞானமிதால்!
பூங்காவன வளர்ச்சியாகும்.!
பஞ்சபூத நியமனத்தில்!
கொஞ்சும் இயற்கைத் தரிசனம்.!
மோகன மூலதனம், இது!
அமைதியூருக்கு விமானம்.!
நிர்வாகம் சிறக்க!
நிதி மூலதனம்,!
நிதிநிலை தடுமாறினாலோ!
நந்தவனமல்ல குடித்தனம்!!
அன்பின்மை பலவீனம்.!
அன்பு காலமுழுதும்!
சந்தனப் பற்றாகட்டும்.!
மனிதநேயம் உலக!
சமாதானத்திற்கு மூலதனம்.!
மண்மானம், இனமானம்!
பிரதான ஆதனம். இது!
அவமானமல்ல விழியுங்கள்
வேதா. இலங்காதிலகம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.