மெய்யைத் தின்ற இருட்டு!
செரிக்க முடியாமல் !
மேடையில் வெளிச்சத்தைக் கக்க!
மினுங்கும் உடைகளுள்!
புதைந்த உடல்களோடு!
வெளிப்படுகிறது பொய்மை!
பொய்யைத் துப்பிப்!
பின்னும் வலைகளில்!
புலன்களையடக்கும் பூச்சிகள்!
மோகப் போதையில்!
வறுமையை முகிழ்தெடுக்கப்!
போதையும் புழங்கும்!
கரைவேட்டி கையசைக்க!
அரைக் கோவணமும்!
அசைகிறது அனிச்சையாய்!
சிலநூறு ரூபாய்களுக்கும்!
ஒரு வேளை உணவிற்கும்!
விற்கப்படும் தேசியம்!
தனியுடமை!
விதைத் தறுத்த !
விலையுயர்ந்த யுக்தியில்...!
ஒளிவெள்ளம் எமை நோக்க!
பாலிற்குப் பசித்தழும் !
குழந்தையையும் மறந்து!
ஓளிப்படத்திற்காய் அசைகிறது கை!
எவனையோ தெரிவு செய்ய!
எம்மையே தொலைத்த !
கூட்டமொன்று,!
மூலை முடுக்கெல்லாம்!
கொடிகட்ட ஓடியலைகிறது!
நிர்வாணமாய்!
முள்வேலிக்குள் அவர்கள்!
கூக்குரலிட்ட காலம் மறந்து!
இவர்கள் அவனுக்காய்க்!
குலவையிட!
மீண்டும் அறுவடையாகும் !
நம்மினம்...ஜனநாயக அடிமைகளாய்!
மன்னார் அமுதன்