தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

வைகறை நிலா கவிதைகள் 28-10-07

வைகறை நிலா
நிலா!
-------!
ஜோடி ஒன்று!
தேடாத!
தனிப் பறவை.!
- வைகறை நிலா!
அகிம்ஸை!
----------------!
எவரையும்!
காயப்படுத்தாத!
அழகான ஆயதம் !
- வைகறை நிலா

தீத்துண்டுக் கனவு.. இரண்டாவது பழம்

கவிதா. நோர்வே
தீத்துண்டுக் கனவுகள்.. இரண்டாவது பழம்!
01.!
தீத்துண்டுக் கனவுகள்!
-------------------------------!
முற்பற்றை!
கறுத்த வானம்!
முகம் தெரியவில்லை!
அவர்கள் மூர்க்கமானவர்கள்!
இனம் புரியவில்லை!
இயலாமைக்குள் என் இருக்கை!
புதர்களின் இடையில்!
என் கூச்சல்!
அடிவயிற்றிலேயே அடங்கிவிட!
மூண்டெழுந்த தீத்துண்டு !
மார்பில்!
தணியாது எரிகிறது!
ஆயிரம்தலை நாகம் போல!
என் உருக்கவ்வி !
செரிக்கின்றனர்!
தீ சுட்ட ரணங்களாய்!
வடுக்களும்!
உடலெங்கும் கிறுக்கல்களும்!
!
நரகங்களுக்கப்பால்!
பயணப்பட்டு நான்!
மீளுகையில்...!
இறந்தடங்கிய நிகழ்வெல்லாம்!
தற்கால கனவுகளாய்!
கனத்துக் தொங்கும் ராத்திரிகள்!
இன்னும் விடியவில்லை!
இன்றும் அதே கனவு.!
தன் உடல் எரித்த!
மெழுகுகொன்று தன்னை!
நிறுத்திக் கொண்டது!
தெரிகிறது!
வெற்றுத்தாள் போல்!
என்னைச் சுற்றி!
எந்த வார்த்தைகளுமற்ற!
வெறுமையில்...!
என் சனத்தின் பாவை என்னை !
விழுங்குதல் போல்!
விரியும் கனவு!
எப்போ கண்கள் மூடுமென!
உற்றுப்பார்த்த வண்ணம்!
தலைமாட்டில் அமர்ந்துகொண்டிருக்கும்!
வெட்கங்கெட்ட!
அதே கனவு!
நான் சுருண்டு கொள்கிறேன்!
எத்தனை இரவுகள்!
கனவுப்பயம் சுமந்த இமைகள்!
வாய் பிளந்து விறைக்கும்!
சொல்!!
இரவுகள் புதிதல்ல!
கனவுகள் புதிது!
இரவினை ஒத்து !
எந்தன் சுற்றம் கொடிது!
காயங்கள் விழுங்கி!
கண்களை மூட!
கனவுகள் செறிக்கும்!
இரவுகள் கடக்க...!
வழி ஆயிரம் இருக்கிறது!
இரவுகள் கடந்தால்... !
வாழ்வில்!
இன்னும் ஏதோ இருக்கிறது!!
!
02.!
இரண்டாவது பழம்!
-----------------------!
பெண் புரட்சி என்பது!
ஏதேன் தோட்டத்து வேலி!
தகர்த்துக் கிளம்பிய!
முதல் பெண்ணிலிருந்தே!
தொடங்கலாம்...!
ஆண்கள் வேட்டையாடினர்!
பெண்கள் சமைத்தனர்!
என்ற!
இலகு வரலாற்றை!
எழுதித்தர!
நான் தயாரில்லை!
”நேசிப்பது!
போராடுவது!
பணி செய்வது”!
எனும் பெண் வரலாறு!
சிதையும் உளியை!
கையிலெடுத்திருக்கின்றேன்!
என் உளியின் முனை!
தட்டும் இடமெல்லாம்!
உயிர் பெறட்டும்!
மிச்சம் மீதி துகள்களாகட்டும்!
சமூகத்தின் சிதைவுகளை!
எதிர்க்கத் துணித்ததனால்!
நான் அடங்காப்பிடாரி என்றால்!
அப்படியே இருக்கட்டும்!
நீயூட்டனின்!
மூன்றாம் விதி!
எடுத்துரைத்த எதிர்வினையாய்!
நான்!
ஏதேன் தோட்டத்தின்!
இரண்டாவது பழம்!
இப்போது என் கையில்

என் அன்புக் காதலா.. முதியோர்

பிரதீபா,புதுச்சேரி
01.!
என் அன்புக் காதலா...!
--------------------------!
பாலோளி வீசி!
முழும‌தி உலா வ‌ர‌!
அவ்வோளியை பிரதிப‌லித்து!
அந்தி ம‌ல்லிக‌ள்!
ம‌ண‌ம் வீச‌!
சில்லேனத் தென்ற‌ல்!
ம‌ர‌ இலைக‌ளில்!
இசை மீட்ட‌!
வெண்ம‌தி த‌ன் முக‌ம்!
பார்க்க‌ தோதாக‌!
ச‌ல‌ன‌மின்றி ஒடிய‌!
நிரோடையில்!
ஆங்காங்கே துள்ளி!
குதித்த‌ மீன்க‌ளுமாக‌!
இய‌ற்கை அழ‌கேல்லாம்!
கொட்டி கிட‌ந்த‌!
அந்த‌ இர‌வையும்!
ர‌சிக்காது!
வாடி நின்றேன்!
அழ‌கா உன் வ‌ருகைக்காக‌!
நீ இல்லா இட‌த்தில்!
அமுத‌மும் க‌ச‌கின்ற‌ போது!
இவையேல்லாம் எம்மாத்திற‌ம்....!
!
02.!
முதியோர்!
--------------- !
கடந்து வந்த‌!
நாட்களை!
காலம் முகத்தில்!
அச்சிடக்!
காணவேண்டியவை எல்லாம்!
தேடித்தேடிக் கண்ட‌!
களைப்பில் பார்வை குன்ற‌!
ஒடியோடி உழைத்து!
உடலும் சோர்வு!
அடைய‌!
கம்பீரமாக எதிர்நோக்கிய‌!
வாழ்கையை எண்ணங்கள்!
அசைபோட‌!
கால மாற்றங்களுக்கு!
சாட்சியாய்!
காலம் கற்றுத்தந்த‌!
பாடங்களுக்கு பதிவேடாய்!
நம் அனைவரின் இல்லங்களிலும்!
ஓரமாய் தள்ளாடும்!
அனுபவ அந்தாதி!
படிக்கப்படாமலே

கருவறை உறவு

சு.திரிவேணி, கொடுமுடி
காற்றின் ஈரம் மீட்டெடுக்கிறது !
நினைவின் சுகந்தங்களை. !
ஒன்றை இழந்தால் தான் !
ஒன்றைப் பெற முடியுமா? !
தாயின் கதகதப்பான ஸ்பரிசம் !
கண்ணீரை வரவழைக்கிறது. !
உன் மடியில் தலை சாய்க்கும் !
மறுவாய்ப்புக் கிட்டாமலே !
போய் விடுமோ என !
மனம் பதைபதைக்கிறது. !
என் நெஞ்சத் துடிப்பின் அதிர்வு !
உனக்குத் தெரிந்திருக்கும். !
நம் மனங்களிடையே !
அழுத்தமாய் இருக்கும் இந்தச் சுவரை !
யார் தகர்ப்பது? !
தொலைவுகளைக் கடந்தும் !
எல்லைகள் தாண்டியும் !
எனக்குள் நீயும் !
உனக்குள் நானுமாய் !
காலம் மறந்து உறைந்திருக்கிறோம்

முகம் கிழித்து இன்னொன்று

நிர்வாணி
புரட்சி!
விடியல்!
தேடல்!
வர்க்கம்!
சாதி!
நான் அதிகம் பாவித்த வார்த்தைகள்!
நண்பர்கள் அதிகம் கூடினால்!
வாக்குவாதம்!
இது சம்பந்தமாகவே இருக்கும்!
முற்போக்குவாதி!
சிந்தனையாளன்!
வாசிப்பவன்!
ஆராய்ந்து பேசுபவன்!
இதெல்லாம் அவர்கள் என்னைப்பற்றி!
சொன்ன வார்த்தைகள்!
மேதாவி என்ற போர்வைக்குள்!
ஒளிந்துகொள்ள யாருக்குப்!
பிடிக்காது ?!
பின்னிரா வேளையில்!
எவளோ ஒரு இளம் பெண்!
நடந்து செல்ல!
அவள் ”அதுவாகத்தானிருக்கும்”!
எனக்குள்ளிருக்கும் நான் சொல்லிக்கொண்டது!
முகமூடி கிழிந்து முகம் தெரிய!
உனக்காக!
பொய்முகத்தோடு!
கவிதை!
புனைபெயர்!
கூட்டத்தில் கத்தல்!
எதுவுமே இனி சாத்தியமில்லை!
எனக்கு

காலை

திருமாவளவன்
நான் விழித்தெழும் போதில் !
வெய்யில் இல்லை !
மீசையை மழித்து !
நிலவு வேடம் பூண்டிருந்தது !
சூரியன் !
தலைமாட்டிலிருந்து !
மதியம் ஒரு மணி என !
மனனஞ் செய்த வாக்கியத்தை !
வலு வீறாப்பாய் ஒப்புவிக்கிறது !
கடிகாரம் !
இருபத்துநான்கு மணியும் கண்வளராப் !
பெருநகரில் !
இடறி வீழ்ந்து !
முளைவிட்ட அகதிப்பயல் நான் !
இரவையும் பகலையும் !
எப்படித் தரங்குறிப்பது !
இப்போதென் இணை !
தொழிற்சாலைத் தையல் இயந்திரத்துடன் !
மாரடித்து கொண்டிருப்பாள் !
அவளுக்கு !
இது மதியந்தாண்டிப் பிற்பகல் !
எனக்கு !
நான் விழித்தெழும் பொழுதே !
அஃதே காலை !
என பங்கிற்கு ஓடிச் சோர்ந்து வீழ்கையில் !
அஃதே இரவு !
நன்றி: 'அஃதே இரவு அஃதே பகல்' கவிதைத் தொகுப்பிலிருந்து

மௌனம்

மதிரஞ்சனி
கவிஆக்கம்: மதிரஞ்சனி!
அன்புத் தோழா!!
கண்டேன் கண்டேன் ஓர் அற்புதம்!
ஞாயிற்றின் பொன் சிரிப்பு அனலாய் சிதறவில்லை!
மாறாக குளிர்மை வாரித் தந்தது உன்!
வீட்டு ரோஜாக்கள் - உன் சோகம்!
புரிந்து பூக்கவில்லையா? எத்தி!
திரியும் காகங்கள் கரையவில்லையா?!
தேன் இசை பொழிந்து மீன் பாடும்!
தேன் பாடல்கள் உன் காதில் ஒலிக்கவில்லையா?!
ஆகா, என்ன அதிசயம் என்ன அற்புதம்.!
ஒரு நிமிடம் சிலை ஆனேன்!
புரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன்!
இந்த மாற்றம் எல்லாம் - உன்!
'மௌனம்' ஒன்றே காரணம்

இணையம்

லலிதாசுந்தர்
கணிணிப்பெண் கண்ணசைக்க!
எலி வலைவிரிக்க!
எழுத்துக்கள் விளையாடும்!
டென்னிஸ் அரங்கம்!
உலகிற்குள் வீடு - நிலைமாறி!
வீட்டிற்குள் உலகை கொண்டுவர!
போடப்படும் வலைபின்னல்!
வாழ்த்துகளையும் தகவல்களையும்!
மட்டுமல்ல!
இருமனங்களையும் பரிமாறிக்கொள்ள!
தூதுவிடப்படும்!
நவீனகால புறா - இந்த இணையம்!
- லலிதாசுந்தர்

கால்கள் முளைத்த கவிதை

மன்னார் எம். ஷிபான்
எப்பொழுதாவது கவிதைகள்!
சிறகுகள் தரிப்பதுண்டு.!
கால்கள் முளைத்துக்!
கண்டதுண்டா நீங்கள்..?!!
நான் கண்டேன்...!
கால்கள் முளைத்த!
என் கவிதையை.!
எழுதி முடித்து!
சிறிது காலத்தில்!
எழுந்து நடந்தது.!
வீடு முழுக்க!
வேகவேகமாய்ச்!
சுற்றிவந்தது.!
அடுக்களைக்குள்!
அடிக்கடி நுளைந்தது.!
தட்டு முட்டுக்கள்!
தரையில் சிதறின.!
சாப்பிடும் வேளைகளில்!
எல்லோர் உணவையுமது!
எச்சிற்படுத்திற்று.!
கணினியிலும் அது!
கைவரிசை காட்டியது.!
இதுவரை காணாததெல்லாம்!
திரையில் தோன்றின.!
என் எழுதுமேசையின்!
விரிப்பை அது!
இழுத்தெறிந்தது.!
உடைந்த மைப்போத்தலால்!
உடல் முழுக்கக்!
கோலம் போட்டது.!
கை கால்களை உதறி!
கத்திப் புரண்டது.!
என் எச்சரிக்கைகள்!
எடுபடவில்லை.!
அதட்டல், மிரட்டல்களுக்கது!
அசைந்து கொடுக்கவில்லை.!
கடைசியாக அது!
களைத்துப்போனது.!
மடிமீது வந்தமர்ந்து!
கண்ணயர்ந்த்து.!
என்ன செய்வது...?!!
இல்லறத்தில் இருவர்!
இணைந்தெழுதும் கவிதைகள்!
இப்படித்தான்.!
எப்போதுமே நமை!
செல்லமாக!
சினப்படுத்தும்

மாதா வெளியேற.. அறையை விட்டுப்

தீபச்செல்வன்
01.!
மாதா வெளியேற மறுத்தாள்!
-------------------------------!
சனங்கள் மாதாவையும்!
குழந்தை யேசுவையும்!
கூட்டிச் சென்றிருக்கலாம்.!
யேசுவின் குருதியால்!
எழுதப்பட்ட பைபிள்களை!
கிளைமோரில் சிதறிய!
மாணவர்களின்!
குருதி பிறண்ட!
வெள்ளைச் சீருடைகளில்!
ஆயர்கள்!
கட்டி எடுத்துப்போனார்கள்.!
வத்திக்கான் எங்கேயிருக்கிறது.!
பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்!
வெளியில் போன அருட்சகோதரிகள்!
குருதி பிறண்ட!
திரு ஆடைகளோடு விழுந்தனர் பதுங்குகுழிக்குள்.!
மடு மாதாவின் தேவாலயம்மீது!
எண்ணிக்கையற்ற!
எறிகனைகள் நுழைந்தன!
குழந்தை யேசுவின் அழுகை!
வீறிட்டு கேட்க!
ஆயர்கள் வளாகத்தை எட்டிப்பார்த்தனர்.!
சிலுவை பொறிக்கப்பட்ட!
எறிகனைகளும்!
பிறை பொறிக்கப்பட்ட்!
எறிகனைகளும்!
சூலம் பொறிக்பப்பட்ட!
எறிகனைகளும்!
புத்தரின் மூடிய கண்களில்!
சுழறும் தர்மச்சக்கரத்திலிருக்கும்!
படையினரிடமிருந்து!
வந்து விழுந்து கொண்டிருந்தன.!
வளாகத்தை விட்டு!
வெளியை விமானம் உழுதடித்தபோது!
சனங்கள் மாதாவை குழந்தையோடு!
தனியே விட்டுச் சென்றனர்.!
பாப்பரசர் வத்திக்கானில்!
பைபிளை திறந்தபோது!
குருதி ஒழுகியது!
அமெரிக்காவின் முன்னால்!
குருதி காயாத!
சிலுவையோடு நின்றார் யேசு.!
மிஷன் பாடசாலைகளுக்கு சென்ற!
பிள்ளைகளையும்!
சவப்பெட்டியில் கண்டோம்!
வண்ணத்துப்பூச்சி திரிகிற!
பற்றைகளில்!
பதுங்கியிருந்தன கிளைமோர்கள்!
வருகிற பிள்ளைகளை பார்த்தபடி!
யேசுவை தூக்கிச் செல்ல மாதா அஞ்சினாள்.!
பாப்பரசர் மன்றாடவில்லை!
ஆயர்களும் அருட்சகோதரிகளும்!
ஜெபத்தில் திடுக்கிட்டனர்.!
சனங்களோடிருந்த மாதாவுக்கும்!
குழந்தைக்கும் எதிராக!
அரசுகள் யுத்தத்தை புரிந்தன!
பைபிள்களாலும் ஜெபமாலைகளாலும்!
பதுங்குகுழி நிரம்பியிருந்தது.!
இனி இங்கிருக்கமுடியாது!
என்று!
ஆயர்களும் அருட்சகோதரிகளும்!
மாதாவுக்கு எடுத்துக்கூறினர்!
மாதா மறுத்தாள்!
குழந்தை யேசுவின் அழுகையை துடைத்தபடி.!
சனங்கள் விட்டுப்போன!
மாதாவையும் குழந்தையையும்!
ஆயர்களும் அருட்சகோதரிகளும்!
கட்டாயப்படுத்தி!
நேற்றோடு கூட்டிச்சென்றனர்!
மடு தேவாலய வளாகத்தை விட்டு..!
----------------------------------------------------------------------------!
03.04.2008 அன்று மடு மாதா தேவாலய திருச்சொரூபம் ஆயர்களால் வளாகத்தை விட்டு தூக்கிச்செல்லப்பட்டது என்று ஆயர்கள் பி.பி.சிக்கு தெரிவித்தனர். மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு வருடமாக இலங்கை அரசாங்கத்தின் படைகள் கடும் போர் புரிந்து வருகின்றார்கள். சகல இன மக்களும் வணங்கும் மடு திருத்தல பகுதி பெரும் போர் பூமியாக காணப்படுகிறது. அப்பகுதி மீதான கடும் தாக்குதல்களால் ஏற்கனவே மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று!
மடுமாதாவின் திருச்சொரூபமும் அங்கிருந்து வெளியெறியது.!
----------------------------------------------------------------------------------!
!
02.!
அறையை விட்டுப் போன பல்லி!
------------------------------------------------!
அறையில் வாலருந்த!
ஒற்றைப் பல்லி!
அசையாது கிடக்கிறது!
வாலைத் தொலைத்த!
பல்லியின் மீது!
விளக்கு உடைந்து விழுகிறது!
இரண்டு பல்லிகள்!
ஒருநாள் புணர்ந்தபடி!
நமது படுக்கைகளின் மீது!
விழுந்தோடின!
நீயும் நானும்!
பல்லிகள் புணர்வதையும்!
நெருங்கி நகர்வதையும்!
அதன் சுவர் வெளிகளையும்!
பார்த்துக்கொண்டிருந்தோம்!
நமது காதலிகளுடனான!
புணர்தலின் நெருக்கத்தை!
அதனிடத்தில் கற்றுக்கொண்டோம்!
கண்களின் மோகத்தையும்!
வாயின் தாகத்தையம்!
நீ ரசித்துக்கொண்டிருந்தாய்!
இரண்டு தோழமை பல்லிகளாகி!
அதன் நெருக்கத்தை!
பார்த்துக்கொண்டிருந்தோம்!
பல்லிகளின் நெருக்கம்!
நிறைந்த அறையில்!
இப்பொழுது!
துரோகம் நிரம்பியிருக்கிறது!
மூடியிருந்த அறை!
உடைந்துவிட!
நான் வெளியேறுகிறேன்!
உனது பொருட்கள் நிரம்பிய அறையில்!
எனது கனவு மிதிபடுகிறது!
பாதிக்கனவில்!
பாதிதூக்கத்தில்!
நிலவு விரட்டப்பட்ட!
இராத்திரியில்!
அந்த பல்லிகளையும் என்னையும்!
நீ துரத்தியிருக்கிறாய்!
எனது கட்டிலையும்!
பாதி சாப்பிட்ட தேனீரையும்!
தூக்கி வெளியில் போட்டிருக்கிறாய்!
பொருட்கள் இல்லாமல்!
வெளித்திருக்கிற!
எனது அறையில்!
கதவுகள் திறந்திருக்க!
நான் விழுந்திருக்கிறேன்!
கூடவே வந்திருக்கிறது!
வாலருந்த ஒற்றைப் பல்லியும்.!
!
-தீபச்செல்வன்