ஓயாமற்பல கைகளெனை!
ஓங்கியோங்கி அடித்தவாறே!
இருக்கின்றன!
சமயம் பார்த்தெனையடிப்பதற்கெனக்!
காத்திருக்கின்றன!
ஓராயிரம் சோடிக் கைகள்!
உறுதியான வார்த்தைகள் சொல்கிறேன்!
இக்கைகளுடையோரின் காதுகளில்!
இவை உறைக்கட்டும்…!
எனையடிக்கும் !
ஒவ்வொரு கைக்கும்!
ஒரு வலி நிச்சயம்!!
அடித்துக்கொண்டேயிருங்கள்!
கைகளோயுமட்டும்!!
வலி உங்களிடமும்!
வலிமை என்னிடமும்!
ஏறிக்கொண்டேயிருக்கிறது!
மறவாதீர்கள்!!
எனை ஏளனப்பார்வை பார்க்கும்!
அதிருஷ்டதேவதை மைந்தர்களே…!
உங்கள் விழிகள் அவிந்துபோகும்!
பிரகாசத்துடன் நானொளிரும் நாட்கள்!
நெருங்கிக்கொண்டிருக்கின்றன!
எச்சரிக்கையோடிருங்கள்!
எதிர்காலகுருடர்களே!!
!
என் நெஞ்சத்திலெரியும் நெருப்பில்!
என் வெற்றிகளை !
நான் வார்த்தெடுக்கும் வெப்பத்தில் – !
எனை நேசிக்கமறுத்த மனங்கள்!
கருகிப்பொசுங்கும் துர்நாற்றம் –!
என் நாசிகளுக்கு மட்டும் நறுமணம்.!
- ஜதி
ஜதி