தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அ-ப்-பா

நளாயினி
வாருங்கள்!
எனது அப்பாவைப்படிப்போம்.!
அழகியவாழ்க்கை.!
செல்லமாய் எனது அப்பாவின்!
கன்னம் கிள்ளி!
செவியைத்திருகி!
தலையில் குட்டி!
அவரின் மனதுள்!
சிம்மாசனம் போட்டு!
அமர்ந்திருப்பவள் நான்.!
அப்பா அப்பா அப்பா!
சொல்லிப்பாருங்கள் நீங்களும்.!
எனக்குள் சந்தோசம்!
நிரம்பிவழிகிறது!
தூவானத்துடன் கூடிய மழைநாள்.!
அம்மாவின் கையால் தேநீர்.!
அப்பாவின் மடி.!
சங்கீதம்.!
திருட்டுத்தனம்!
பொய்.!
வீடெங்கும் அமைதி.!
அப்பாவின் புன்சிரிப்பு.!
விடுமுறைநாள்.!
எனது களவு!
கண்டும் காணாமல்.!
அப்பாவின் செருமல்.!
தொடுகை!
அரவணைப்பு!
விழிமொழி!
புன்சிரிப்பு!
புரியாத புதிர் அப்பா.!
மெலிதான அதட்டல்!
கோபமான பார்வை!
தடியெடுப்பது போன்ற பாவனை!
ஆனாலும் அப்பா!
தோற்றுப்போவது ஏனோ என்னிடம் தான்

சிறையா

செண்பக ஜெகதீசன்
உங்களுடையது என்று !
நீங்கள் !
உரைப்பவை எல்லாம் !
உங்களுடையவை அல்ல, !
அதிலும் !
உங்கள் பிள்ளைகள் !
நிச்சயமாய் !
உங்களுடையவை அல்ல, !
அவை !
உலகின் பிள்ளைகள், !
உலக வாழ்வின் பிள்ளைகள்- !
உங்கள் வழியே !
வந்திருந்தால் கூட…! !
உடல்கள் !
உங்கள் வீட்டில் !
உங்கள் கூடவே இருக்கலாம், !
அவற்றில் !
உள்ள எண்ணங்கள் இருப்பதில்லை !
உங்களுடனே, !
உள்ளன அவை நாளை உலகில்- !
அது !
உங்களுக்குப் பிடிபடாது, !
அதனால் !
சுயமாய்ச் சிந்திக்க விடுங்கள் !
சிறுசுகளை, !
சிறைப்படுத்தவேண்டாம் சிந்தனையை !
உறவுகளைக் காட்டி…!!
அழிந்தாலும்…!
கோலங்கள் !
அழியத்தான் செய்யும் !
காலில் பட்டு, !
அழியுமென்று தெரிந்தே !
அழகாய்ப் படைக்கிறோமே !
அதுதான் கலை, !
அதற்கு இல்லை விலை…!!
!
-செண்பக ஜெகதீசன்…

உனதும் எனதும் உறவும் பிரிவும்

பர்ஸான்.ஏ.ஆர்
பற்றிய பாடல்!
--------------------------------------------------------!
எனக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில்!
நீ உன் பெருங்கவிதையினை வாசித்தாய்.!
அன்றைய பொழுதின் வேகத்தினையும் விட உன் கவிதைச் சொற்களின்!
கூர்மையாக்கப்பட்ட வேகம் மிகவும் வலுத்திருந்தது.!
உன் பெருங்கவிதையின் ஒவ்வொரு உச்சரிப்பின் பின்னும்!
நான் அதற்கென அரசியல் கண்டுபிடித்தேன்.!
உன் பெருங்கவிதைக்குள்ளே உணர்ச்சி, சுயம், ஆழம், தூய்மையென!
அனைத்து மனிதமும் நிறைவாய் இருந்தது.!
நீ மிக உயர்ந்த இடங்களில் எழுந்து நின்று!
~என் கவிதைகள் நமக்கே| யென உரத்த குரலில்!
என்னை அரவணைத்துக்கொண்டு முழங்கினாய்.!
உன் கவிதை எனக்கும் இனித்தது!
உன் கவிதை எனக்கும் உறைத்தது!
உன் கவிதை எனக்கும் உயிரானது!
உன் கவிதை எனக்கும் பலமானது!
உன் கவிதை எனக்கும் வலுத்தது!
உன் கவிதை எனக்கும் எனக்கானது!
உன் கவிதை என்னையும் எழுப்பியது!
நீ உன் கவிதையில் அன்பை விதைத்து நாமொன்று என்றாய்!
நமது இனங்களின் தொடக்கங்களை இணைத்தாய்!
நமது குடிப்பரம்பலை நிறுவினாய்!
நாம் இறைவனால் இணைக்கப்பட்டோமென்றாய்!
நம்மை பிரித்துவிட்டார்களென்றாய்!
நாம் இணைந்து கொள்வோமென்றாய்!
நமக்கென நிலம் வேண்டுமென்றாய்!
நமக்கென புதிய வரலாற்றினை எழுதினாய்.!
நான் உன் கவிதையினை புரிந்துகொண்டேன்!
அப்போதெல்லாம் நீயும் என்னை அரவணைத்தாய்!
உன்னுடன் உறவாடுவது என்னை எனக்குப்பிடித்ததினை விட பிடித்துப்போனது!
மகத்தான ஆரம்பங்களுடன் நம்பயணம் தொடங்கிற்று.!
உன் கவிதைக்குள் என்னையறியாமலே நான் புதைக்கப்பட்டேன்.!
நீயும் உன் கவிதையும் எனக்கும் என நீ கூறியதால்!
உன் பெருங்கவிதையெனக்கு பலமென நம்பி!
இறுதியில் உனக்குள்ளும் உன் கவிதைக்குள்ளும் சரணாகதியானேன்.!
நீ எழுதிய வரலாற்றில் காலம் ஓடியது!
உன் பெருநில கவிதையின் சொற்கள் மாறின!
உன் நிகழ்ச்சி நிரல்கள் எங்கோ நிர்ணயிக்கப்பட்டன!
உனக்குள் இருந்த ஆரம்பங்கள் தொலைந்தன.!
எனக்கும் உனக்குமான காதலால்!
நீ பலமடைந்த பொழுதுகளை மறந்தாய்!
திடிரென என்னையும் நம் காதலையும் நிராகரித்தாய்!
உன்னையே நம்பிய பாவத்திற்காய்!
முஸல்லாவிலே பலிக்கடாவாக்கினாய்!
எனது அறிவகங்களின் கற்பை அழித்தாய்!
பாங்கிற்காய் உயர்ந்த குரல்களை அறுத்தாய்!
நிர்வாணமாக்கி என் நிலத்திலிருந்தே துரத்தி!
நடுத்தெருவிலும் அடர்ந்த காட்டிலும் விரட்டி விரட்டியடித்தாய்.!
உன் அன்பின் பின்னரசியல்!
இவ்வளவு வக்கிரமென நான் நம்பியிருக்கவில்லை.!
நீயடித்த அடியில் என் காதல் போதை கலங்கியது!
நானும் நீயும் வேறென அறிந்தேன்.!
தேடிப்பார்த்த போது!
உனக்குமெனக்கும் வெகு தூரம்.!
நீ காட்டிய காதல் பொய்!
நீ கூறிய உலகம் பச்சப்பொய்!
நீ நிறுவிய அனைத்தும் பொய்!
நீயெழுதிய வரலாற்றில் பொய் மாத்திரமே உண்மை.!
என் வலிகள் என்னைத்தேடியலைந்தன...!
நீ வேறு நான் வேறு!
எனதும் உனதும் மொழிகள் வேறு!
எனதும் உனதும் பொழுதுகள் வேறு!
எனதும் உனதும் சூரியனும் சந்திரனும் வேறு!
எனதும் உனதும் நாட்களும் நிமிடங்களும் வேறு!
எனதும் உனதும் கவிதைகளும் பாடல்களும் வேறு!
எனதும் உனதும் மொத்தமும் வேறு வேறு.!
நீ விரட்டும் போது உனக்கு நான் வேறு!
அதை நான் கூறும் போது!
உன் வன்முறையெனக்கு மீது.!
நிச்சயமாக,!
எனதும் உனதும் அனைத்தும் வேறு!
நம் நன்றிகள் கூட வேறுநமது கவிதையும் பாடலும் வேறு வேறு என்பது போல.!
!
-பர்ஸான்.ஏ.ஆர்

சிவப்பு மல்லிகை

ஷஹீ
இரத்தம் குடிக்கும் மேகம்,!
நிலத்தில் படிந்த கொலைகளில்லிருந்து.!
நிறத்தில் பெய்கிறது மழை!
மரத்தில் எல்லாம்!
அரம் !
மறந்த சிவப்பு !
மல்லிகை!!
நிறம் வெளுத்த மலர்கள்!
துறந்தது போல் அஹிம்சை உடை.!
இனி பனி தவழ!
இதழ்கள் மிருதுவில்லை !
நரைத்த மரங்களின்!
நன்மலர் வேட்டையால்!!
உரு சிதைந்த!
ஊன மலர்கள்,!
உதிர்க்கப்பட்ட மகரந்தம்!!
நன்மலர்கள் தீனியாயின!
நரை மரங்களின் வேட்கையுள்!!
மர முற்களின் கொடுமையால்!
முறிந்து போன மிருது இதழ்.!
உரிந்து போகும் பட்டைகலின் !
பருவம்!
நரைத்துப் போன மரங்களுக்கு

புலம்பெயர் பிரிவு

வேலணையூர்-தாஸ்
பூக்களில் தினமும் உன் புன்னைகை பார்கிறேன்!
தென்றலில்உன் சுவாசம் தேடி வேர்க்கிறேன்!
நீ மிகவும என் அருகில் இருக்கிறாய்!
நினைவுகளில்!
தினமும் கன்னம் தொடுகிறாய்!
தலை கோதிச்செல்கிறாய்.!
கனவுகளில்.!
உறக்கம் தொலைத்த இரவுகளுடன்!
ஏககம் நிறைத்து நகர்கிறது வாழ்க்கை!
காட்டில் எறித்த நிலவாய்கழிகிறதென் இளமை!
காதலர் தினம் வருகிறது!
காதலன நீ தான் வரவில்லை!
உன் றிங்கிங் ரோனாய் அடிக்கிறது என் இதயம்!
ஸ்கைப்பில் தெரியும் உன் விழியில்!
என் காதலை தேடுகிறேன்!
எழும் ஆவல் கரைகடக்க கண்ணாடி தடவுகிறேன்!
காற்றாய் மாறி உன் கன்னம் தழுவேனா!
காலம் சுருங்கி உன் வருகை நாளை நிகழாதா!
என் காதல் நெருப்பில்!
இந்த கடல் வற்றி போகாதா!
காலால் நடந்து கரை சேர மாட்டேனா!
நம் இடை வெளிகள் குறுகாதா !
இதயம் ஒன்றாய் சேராதா

நட்புக்காலம்

நிஹ்மத்
என் கல்லூரி நாட்களை !
நினைவில் வைத்துக்கொள்ள !
உன் அறிமுகம் !
என்னுள் !
இனிமையுடன் !
கலந்துள்ளது தோழனே ! !
சில நட்பின் !
அளவுகளை !
தூறலுடன் கணக்கிட்டால் !
உன் நட்பு !
என்னில் ஓர் அடைமழை ! !
இதயத்துடிப்புகளை !
காணமுடியாது !
ஆனால் உணர்ந்திடலாம் !
இதைப்போல்தான் ஒரு நட்பின் !
வலியும் உன்னால் உணரப்படுவதற்கு !
எத்தனை நாள் காத்திருந்தது ! !
மழைக்காலங்களில் !
சில தூறல்களில் மட்டுமே !
மண்ணின் வாசனை புலப்படுமே !
அதைப்போல்தான் !
உன் நட்பில் மட்டும் !
என் இதயத்தின் வாசம் !
புலப்பட்டது ! !
உன் ஞாபகங்கள் !
என் வீட்டில் நுழைந்தால்கூட !
சிம்மாசனமிட்டு !
உட்காரச்சொல்லுகிறேன் !
உன் நட்பிற்கான !
மரியாதை இது ! !
எவ்வளவு வெப்பம் !
சூரியனுக்கு வலிக்குமோ... !
இப்படித்தான் இருந்தது !
உன் நட்பின் தாக்கம் ! !
ஓட்டமாய் ஓடிவந்து !
கால் நனைத்துச் !
சென்றுவிடும் !
அலைகள் போலில்லை... !
இதயம் நனைத்து !
இன்றும் மனதில் ஒட்டியபடி !
நீ ! !
------நிஹ்மத் nih

இனியும் பொழியேன்.. அரூபமானவன்

கிண்ணியா பாயிஸா அலி
01.!
இனியும் பொழியேன்!
---------------------------!
கத்தி முனையில் நடப்பதாகவும்!
நொறுங்கும் மெலிதான!
கண்ணாடி இருக்கையில் அமர்வதானதுமான!
நுண்ணிதானங்களோடும் எச்சரிக்கையோடும்!
அலுவலகத்தில் வேணுமென்றால்!
தொடர்பாடலாம்.!
ஆனாலும் உன்னோடுமா..?!
பகலவன் வெம்மையில்!
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்!
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு!
உன் தொடர்புறக்கணிப்புகளால்.!
இன்னமும் எத்தனை தடவைகள்தான்!
தன்மானத்தைப் பிணை தருவது?!
என் நிஜ நேசிப்புகளை உனக்குள்ளுணர்த்திட.!
புரிந்து கொள்ளப்படாமலேயே கழிந்துபோன!
இறுதிக்கணங்களில்கூட!
ஒரு வேகஉந்துருளி உதைத்தெறிந்த தெருநாயாய்!
காயங்களின் அனுக்கங்களோடே!
மீளத் திரும்புகிறதென் பிரியங்கள்!
அவமானங்களைச் சொட்டியபடி.!
முன்னைய தடவையும் போலல்லாது!
முடிவு கொள்கிறது மனசு மிகவுமாய்…!
இனியும் பொழியேனென் கிரணங்களை!
வெறுமனேயும்!
இனி!
ஒரு உலர் காட்டில் பரவும்!
பெருந்தீயின் அதிவேகங்களோடே!
புசுபுசுவெனவே துளிர்த்துப் போகட்டுமென்!
பசியவனம்;!
இப்பிரபஞ்சமும் தாண்டியே…!
!
02.!
அரூபமானவன்!
--------------------!
அதீத முயல்வுகளினூடே சுபமாய் முடிவடைவதான!
மிகச்சில நிகழ்வுகளிலும்கூட அரூபமாயெனை!
எதிரீடு செய்யும் கிளைத்து நீண்ட!
கோரநகங்கள் சூடிய பெயரறியாச் சில ஊணுண்ணிகள்.!
வென்றுவிட வேண்டுமே யென்ற பதகளிப்போடு!
வெளியிலே என்றைக்குமே ஓயாத ஆட்டந்தான் அவைகளோடு.!
ஒவ்வோர் தடவையும் அவைகளே வென்றுவென்று!
மிக அகங்காரமாய் தம்துர்க்கரங்களை!
உயர்த்தி உயர்த்தி எம்பியபடியே கூக்குரலிட!
நானோ எப்போதுமே துவண்டு வீழ்வேன் களத்திலேயே.!
நிலம் புதைந்த நீர்க்குழாய்ப் பின்னலிலே!
எங்கோ ஓர் சிறு வெடிப்பு அரூபமாகவே.!
நானறியாமலே நீர் பொசிந்து பொசிந்து!
மண்ணுறிஞ்சிட, உச்சத்திலே இருத்திய!
நிறை கொள்கலனோ காலியாகிற்று!
சப்தமின்றியே.!
நான் சாய்ந்து விடக்கூடாதென்றா!
சட்டென உள்ளிழுத்துக் கொண்டாயுன் தோள்களை.!
என்றைக்கும் என்றைக்கும் போலவே!
என் தொழுகைப்பாய் மட்டுமே!
அளவீடு செய்திற்றென் கண்ணீரின் உப்புச்செறிவை.!
நீ மட்டுமேன் மௌனமாகவே இருக்கிறாய்?!
புலனறியா நிலமிருந்துங் கூட எனைப் பொசுக்கும்!
முரண்கள் நெருக்கீடுகள் போலவே!
நீயுங்கூட அரூபமானவன் என்பதனாலா?

ஏக்கம்

அழகு
கவி ஆக்கம்: அழகு!
விழி மூடிய!
இமைகள்..!
வழி தேடும்!
கண்கள்!
நிலை மாறும்!
உலகில்!
அவள் நிழலில்!
நான் குருடனாய்!
----------------------!
பேச்சு!!
!
முப்பால் பெருமை பேசும்!
தமிழ்ப்பால் குடித்து!
வளர்ந்தவனிடத்தில்!
தொடர்பு எல்லைக்கு!
அப்பால் இருக்கிறார்கள்!
என்று கணிணி பேசுகிறது.!
கவி ஆக்கம்: அழகு!
தொடர்புக்கு: 81608619

மௌனம்

றஹீமா-கல்முனை
வார்த்தைகள்!
வலிக்குமென்று!
மனசு சும்மா இருக்கப்!
பிரியப்படும் ஒரு பொழுது!
மௌனம்.....!
வார்த்தைகளை!
மிச்சம்பிடிக்கிற!
யுத்தியல்ல....இது!
உன்னைப்பற்றி!
உனக்கே!
உணரவைக்கும்!
இன்னுமோருபாஷயின்!
மொழிபெயர்ப்பு...!!!
போதிமரத்தடியில்!
புத்தனை!
புதுப்பித்ததும்!
இந்த மௌனமே!
சுமக்கத்தெரிகிரபோது!
மௌனம் - ஒரு!
சுகமான பயணம்......!!
தொட்டதும்!
சிணுங்குகிற!
சில்லறைகளை விடவும்....!
மௌனமாய் கிடக்கிற!
காகித நோட்டுகளுக்குத்தான்!
கனத்தமரியாதை...!!!
பகலெல்லாம்!
கத்தியலைகிறது....!
காகம்...!!!
இதுபெரிய இழவென்று..!
கடைசியில் !
கல்லெறிகள் விழும்...!
மௌனமாய்!
காத்திருக்கவிட்டு....!
கூவும்!
குயிலோசயில்தான்!
கொள்ளைப்பிரியம்..!!!
வேறுவேலையின்றி!
உளறியபடியே!
கிடக்கும்...!
கடல்..!!
கடைசியில்!
தாகமெடுக்கையில்....!
தண்ணீர்தேடி!
எங்கே போய் முட்டினாய்??!
கடற்கரையிலா???!
மௌனமாய்!
கிடக்கிற!
ஆறு குளம்!
நோக்கித்தானே ஓட்டமெடுத்தாய்!
மௌனம்!
முற்றுப்புள்ளியல்ல...........!
இன்னுமொருதுவக்கத்திர்கான!
அஸ்திவாரம்...!
எல்லா மௌனமும்!
சம்மதத்திற்கான!
அடையாளமாய்!
ஒப்புக்கொண்டு!
தப்புக்கனக்குப்போடாதே...!
எப்படியோ....!
சுமக்கத்தெரிகிரபோது!
மௌனம் - ஒரு!
சுகமான பயணம்

அழுகை அவதாரம்

கோட்டை “பிரபு
அனுதாப அரங்கேற்றங்களாய்!
உணர்ச்சிக் குவியல்களாய்!
ஆற்றாமையின் ஆற்றுமொழியாய்!
இழப்பின் புன்னகையாய்!
ஏமாற்றத்தின் முடிவாய்!
உடலின் இறுதி உறவாய்!
சிசுவின் தேவை வெளிப்பாடாய்!
மகளிரின் மந்திரக்கணையாய்!
மகிழ்வின் எல்லையாய்!
நடிப்பின் அளவுகோலாய்!
உயிர்களின் உடைமையாய்!
பிரிவின் முகவரியாய்!
தேடலின் விரக்தியாய்!
ஊடலின் தொடக்கமாய்!
கூடலின் முடிவாய். என!
என் அவதாரங்கள் தொடரவே செய்கிறது!!
கவிதை: கோட்டை பிரபு