தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

தனிமை பிடித்திருக்கிறது

ரசிகன்!, பாண்டிச்சேரி
தேனூறும் சிறுப்பூவில்!
ஊடல் தேடும் நுண்ணுயிர் போல!
யாருமில்லா தனிமையிலும்!
வலுக்கட்டாயமாய் திணிக்கப்படுகிறது!
ஒரு நினைவும் ஒரு நிழலும்!!
முகம் கொடுத்து பேச இயலாது!
எல்லோரும் முகம் சுழிக்க!
என் பேச்சுகளுக்கு தூக்கமின்மை!!
சூழ்நிலை இசையிலும்!
நினைவுகளின் அலைவரிசையில்!
லப் டப் இசை.. தப்புத்தாளமாகி விடுகிறது!!
இறுகிப்போன இதயத்தின் மத்தியில்!
செல்லரித்துப்போன நிஜங்கள்!
யாவும் புறக்கணிக்கப்பட்டவை!!
மீண்டெழும் சாத்தியக்கூறுகள்!
மறுக்கப்பட்ட உண்மைகளாய்....!
தனிமை பிடித்திருக்கிறது-!
எனக்கு நானே செய்துகொண்ட!
மானசீக ஒப்பந்தம்

யாழ் வென்ற ராவணநாடு

சுதர்மன்
வை.சுதர்மன் - சிங்கப்பூர்!
தமிழே தமிழ்ச் செல்வமே!
உன்னை இழந்த தமிழுலகம்!
உன்வீர வரலாற்றிற்கு தலைவணங்குகிறது!
நீ அழியவில்லை அடமானம் போகவில்லை!
நீதிக்கும் நேர்மைக்கும் கொடிஏந்தினாய்!
எட்டுமுலக தமிழர் உள்ளங்கள்!
தோறும் வாழ்கிறாய் வளர்கிறாய்!
உன்நாடு உனதுஇனம் உன்தாயின் மொழி!
வாழ்விற்கும் வளத்திற்கும் உந்துஉணர்வாய்!
கயல்வழியாய் நிழல் தந்து நிற்கிறாய்!
எம் தமிழினமும் ஒரு நாள் பேரினமாகும்!
உனக்கும் கோயில் கட்டி கும்பிடும்!
உன்னைக் கொன்ற வானரக்கூட்டம்!
அன்று! உன்முன் தலைதாழ்ந்து நிற்கும்!!
தமிழினமே ஒன்று படு உயர்ந்து நில்?!
தமிழுக்கும் தமிழினத்திற்கும் அழிவில்லை!
புயலும் நீயே! எழிலும் நீயே! !
முதலும் நீயே! முற்றும் நீயே!!
வை.சுதர்மன் - சிங்கப்பூர்

என் பசி

கவிதா மகாஜன்
என் பசி!
-> மராத்திய மொழிக்கவிதை> தமிழாக்கம் : புதியமாதவி!
ஒத்துக்கொள்கிறேன்!
நான் உன் அடிமை என்பதை.!
உணர்ந்து கொண்டேன்!
இழந்துப்போன!
என் உரிமைகளை.!
நானே வலிய வந்து!
ஏற்றுக்கொண்டு விட்டேன்!
-என் சுதந்திரம்!
பறிக்கப்பட்டதை-!
என்னைக் கட்டிப்போட்டிருக்கும்!
சங்கிலியின் மறுமுனை!
உன் வசம்.!
நீ ஆட்டுகிறாய்!
என்னை ஆட்டுவிக்கிறாய்!
காட்சிப்படுத்துகிறாய்.!
என்னைக் !
காட்சிப்பொருளாக்கும்!
கண்காட்சிகளை!
என் சம்மதத்துடனேயே!
அரங்கேற்றுகிறாய்.!
என்னை விடுவிக்க!
என் மீது கொண்ட!
அபரிதமான உன் காதலால்கூட !
என் கட்டுகளை அவிழ்க்கும்!
நாட்களைப் பற்றி!
பேசாதே.!
உன் வாசலுக்கு வெளியே!
என்னைக் கட்டிப்போடும்!
காலச்சங்கிலிகள்!
சிறைவைக்கும் சிறைக்கூடுகள்!
காத்திருக்கும்!
சிவந்த சவுக்கள்!
!
கெட்டுப்போன!
எச்சில் பருக்கையை!
என் தட்டில் பரிமாற!
காத்திருக்கும்!
ராட்சதக்கைகள்!
என்ன செய்யட்டும்!
இருந்துவிட்டுப் போகிறேன்!
உனக்கு!
உனக்கு மட்டுமேயான !
அடிமையாக.!
களைத்துப் போய்விட்டேன்.!
கண்டவர்கள்!
கால்களை எல்லாம்!
நக்கி நக்கி!
வறண்டு போய்விட்டது!
என் நாக்குகள்.!
அதில் பிறக்கும்!
என் வார்த்தைகள்!
வலிமை குன்றிவிட்டன!
எழுந்து நிற்க முடியாமல்!
சரிந்து விழுகின்றன.!
பற்களுடன் உரசியப்பின்னும்!
என் நாக்குகளுக்கு!
கிடைக்கவில்லை!
வார்த்தைகளின்!
ஒலிச்சுவடு.!
என் உதடுகளைப் !
பற்றிக்கொள்ள துடிக்கும்!
வார்த்தைகள்!
எல்லா இடங்களிலும்!
பலகீனமாய் எதிரொலிக்கின்றன.!
எதுவும் மிச்சமில்லை!
என்வசம் இப்போது.!
கண்களில் !
தென்படும் கடைசி !
எதிர்பார்ப்பைத்தவிர:!
உன் தட்டில்!
எஞ்சி இருக்கும்!
கடைசிப் பருக்கையை!
தருவாயா!
என் பசித்தீர்க்க?!
-- (மராத்திய பெண்கவிஞர் கவிதா மகாஜன் (Kavita Mahajan) கவிதை நூல் தத்புருஷ் ல் எழுதியிருக்கும் பசி என்ற கவிதையின் தமிழாக்கம்.)

மானுடச் சுடர்!

வல்வை சுஜேன்
பொன்னும் மணியும் கொட்டிக் கிடக்கும் உலகில்!
பொய்யுக்கும் மெய்யுக்கும் ஜீவனாம்சம் !
வழக்காடு மன்றில் நிலுவையில் கிடக்கிறது!
உண்மை ஜீவனை ஊனம் வெல்வதில்லை!
மானுடச் சுடருக்கு மரணம் எல்லையும் இல்லை!
இடி மின்னல் கீற்றும் இவனடி கிடக்க!
தமிழ் வானை கிளித்தான், மில்லர்!
அகிம்சை கீற்றொடு !
ஆழி அலையாய் எழுந்தே!
ஆன்மாவை வென்றான், திலீபன்!
மண்மீட்ப்பு போரிலே மரபுக் கனல் மூட்டி!
தந்தை சொல் காத்த தணையனாய் !
உயிரை முந்தி விரித்தான்!
சாழ்ஸ் அன்டனி!
ஒடிபட ஒடிபடத் தானே !
சாரல் அடிக்கிறது இங்கே!
இந்தச் சாரலுக்குள் தானே!
தமிழீழ வானமும் !
தாய் மண்ணை தொடுகிறது !
தோழா நீதிக்கோர் நித்தியச்சுடர்!
மனு நீதி கண்ட சோழனே!
கொன்றவனை நீயும் கொல்!
சம தர்ம தராசு இன்று உன் கையில்!
விடுதலைச் சுடரின் கீற்றுனை!
மாற்று நிறங்கள் !
ஊற்றுக் கொள்வதில்லை!
மானுடச் சுடர்!
மாவீரனின் மகுடமே !
பொறுத்தார் பூமி ஆழ்வார் என்றுருந்தால்!
இலவம் கிளியும் உன்னை பார்த்து சிரிக்கும்.!

ஒப்பம்

வேல் கண்ணன்
கையெப்பம் கேட்டார்கள்!
அவரவருக்கான காற்றில்!
அவரவருக்கான வானத்தில்!
பறப்பதற்கு!
நிரப்பபடாத ஒப்பந்த படிமத்தில்!
கிழிந்து தொங்கியது வானம்!
சுவாசிக்கவும் மிச்சமில்லாத!
காற்று!
மறுக்கையில்!
நிர்முலமாக்கபட்ட பிடரியில்!
வெடித்தது துவக்கு.!
ஒன்றன் பின் ஒன்றாக!
கையெப்பம் இட்டு நிமிர்கையில்!
உடைந்தது சூரியன்

விவரம் அறியா விஞ்ஞானிகள்

ரா. சொர்ண குமார்
உன்னை தொடும் சையிலே!
வெளியில் பெய்கிறது மழை!!
மழையின் சைக்கு மனமிறங்காமல்!
வீட்டுக்குள்ளே நீ!!
தொட்டே தீருவேன் என்று!
விடாமல் பெய்கிறது மழை!!
தொடவிட மாட்டேன் என்று!
வீம்பில் இருக்கிறாய் நீ!!
உனக்கும் மழைக்குமான போட்டியில்!
நஷ்டம் என்னவோ நாட்டுக்குதான்!!
போனால் போகட்டும் !
கொஞ்சம் நனையேன்!!
பாவம் மழைக்கு!
பைத்தியம் பிடிக்கப் போகிறது!!
கடலில் உள்ள புயலால்!
மழை என்கிறார்கள்!
விவரம் அறியா விஞ்ஞானிகள்!!
எனக்குத் தானே தெறியும்!
மழை.!
கடல் புயலால் அல்ல!!
இந்த அழகு!
கன்னிப் புயலால் என்று!!
-ரா.சொர்ண குமார்,!
சென்னை

ஈழத் தமிழனின் நிலை

சித. அருணாசலம்
உயிர் ஒன்று மட்டுமே!
ஊசலாடும் நிலையில்!
ஒட்டிக் கொண்டிருக்க,!
கால்களுக்குக் கூட!
போக்கிடம் இல்லாமல்!
கவலைகள் மலையாய்க்!
கனத்துக் கிடக்கும் மனது.!
முட்களே இங்கு!
ரோஜாவைக் குத்திக்!
காயப் படுத்திக் !
கசக்கிப் பிழியும் நிலையில்,!
இடுப்புக்கு மேல் துணியின்றி!
எல்லோரும் காந்திகளாய்...!
சுற்றம் என்பதே புதிராகி!
முற்றும் துறந்த கீழ்நிலையில்!
ஒட்டுமொத்த இனமே!
ஒடுங்கிப் போனது.!
உலகத்தில் தமிழுக்கு!
உயிர் கொடுத்த கூட்டம்,!
இனபேதத்தைப் பயிராக்கி!
ஈனத்தை வளர்க்கும்!
சர்வாதிகாரச் சாக்காட்டில்!
சதிராடித் திணறுகிறது.!
புத்தனைக் கூடத் தனது!
போதனைகளில்!
பொல்லாங்கு தெரிகிறதா என்று!
திருப்பிப் பார்க்கவைக்கும்!
வெறுப்புகளைச் சுமந்தவர்கள்!
விதைத்த வினை இன்று!
வேதனைகளை விளைச்சலாக்கி!
வேரூன்றி நிற்கிறது

மூலைகள்

கவிதா. நோர்வே
இது எனது வீடு.!
இந்த வீட்டின்!
ஓவ்வொரு மூலையும் என்னுடையவை.!
ஓவ்வொரு மூலையும் தனித்துவமானவை!!
இதோ!
இந்த மூலையில்!
இரண்டு பாத்திரம், நாலு கரண்டி!
ஒரு அடுப்பு…!
எல்லாம் எனது!
எதிர் மூலையில்!
எனக்கென்று வாங்கித்தந்த!
பெரும் இயந்திரங்கள்!
துணிகள் துவைக்கவும்..!
காயப்போடவும்..!
ஒவ்வொரு அறையிலும்!
பெரிய அலமாரிகள்!
காய்ந்ததை அடுக்கவென்று!
வலப்பக்கம் !
இருக்கும் மூலையில்தான்!
படுக்கையறை.!
படுக்கவும்…!
கலைக்கவும்…!
பின் விரிக்கவும்!!
அதன் இடப்புறமும்!
எனது மூலைதான்!
ஒரு தொட்டில்!
பால் போத்தல்கள்!
பொம்மைகள்!
அழுக்குத் துணிகள்...!
டீவி,!
மேசை, !
இருக்கைகள்.!
ஆதன் மேல் எறியப்பட்ட!
பொருட்கள்.!
அடுக்கவும் துடைக்கவும்!
சாப்பாட்டு மேசை,!
தூசி தட்ட பலவித பொருட்கள்.!
எல்லாம் என்னுடையவைதாம்!
வீட்டின் பொறுப்பானவர் என்ற!
பெயரில்!
வீட்டுப்பத்திரம்!
மட்டும் !
என்னை மொத்தமாய் ஆட்கொண்டான்!
பெயரில்!
-கவிதா. நோர்வே

மேகமாய்

பாண்டித்துரை
நர்மதை நதி.!
சரோபவர் அணைக்கட்டு.!
23 ஆண்டு தவம்!!
ஆர்பாட்டமே இவளின் வாழ்க்கை,!
ஆர்பணிப்பே இவளின் வேட்கை.!
நர்மதை நதி கூட!
இவள் நாடியின் துடிப்பறியும்,!
மேகத்தின் துளி கூட!
மேதாவின் சொல் கேட்கும்,!
மேதா பட்கர்.!
அரசியலுக்கு அப்பாற்பட்டு!
அகிம்சா வழியிலே,!
தொலைநோக்கு பார்வைகொண்டு!
தொடர் உண்ணாவிரதம்,!
உயிரையும் விடத்தயார்!
அணை உயர்வதை தடுத்திடவே,!
மக்கள் செத்து வீழ்ந்தாலும்!
செவிசாய்க்க மறுக்கும் அரசின்!
செவியில் அறைந்து கேட்கும் தைரியம்,!
இவள் நலத்தில் இன்னல்கள் விரும்பும்,!
பொது நலத்தில் தன் நலன் மறந்தும்.!
தனியொரு மனிதமாக!
இத்தரணி முழுவதும் சிறந்தும்,!
மக்கள் நலன் காக்கும்!
இவள் ஆத்மா!
மனித நேயத்தில்!
மகாத்மா!
இவளின் அரவணைப்பு இருக்கும்வரை!
அணைஉயரா!!
இவள் அயர்ந்த பின்னே?!
!
எழுத்து: பாண்டித்துரை

எங்கள் பூமிக்கு வா

நவஜோதி ஜோகரட்னம்
அகலத்துக்கும்!
அன்பைப் போதித்த அன்னையே!!
மனிதக் குவியல்கள்!
மடிந்த!
எங்கள் பூமிக்கு வா… !
அல்லலுற்று !
அளவு கணக்கின்றி!
அழிவுக்கு ஆட்பட்டு!
அகதிகளாய் அலைந்து!
அவதிப்படும் ஆத்மாக்களை !
சேர்த்தணைக்க!
எங்கள் பூமிக்கு வா…!
அப்பாவிகளை !
புல்டோசர் கொண்டு !
அரைத்துப் பார்த்தது!
எங்கள் பூமிதான்!
உடைப்பதற்கென்றே !
உருவெடுத்த!
உருவங்களைப் பார்க்க!
எங்கள் பூமிக்கு வா… !
புதைக்க நேரமில்லாத!
புழுத்துப்போனது தேசம்!
பூவாடை இன்றி!
பூக்கள் கருகி !
இன்றும்!
ரத்த வாடை வீசும் !
பாலைவனத்தை பார்ப்பதற்கு!
எங்கள் பூமிக்கு வா… !
திரைமறை நாடகங்கள் !
திசை யாவும் சூழ்ந்துவர!
நச்சுப் புகை வந்து!
நசுக்கியதை அறியாயோ!!
பீரங்கி வேட்டுக்கு இனி ஒரு!
பிஞ்சுடம்பும் வேண்டாம்!
ராட்சத சூரியன்போல்!
எங்கள் பூமிக்கு வா…