தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

காதலில் தோற்றவன்

சின்னு (சிவப்பிரகாசம்)
அன்று இஞ்சியும் இனித்ததடி!
இன்று இளநீர் கசக்குதடி!
நிலை கெட்ட பொழுதுகள்!
தரம் கெட்ட செயல்களில்!
தொலைத்த நாட்கள்!
மனதில் வடுக்களாய் !!
பெண்ணே உந்தன் பேரழகு!
மனதில் ரணங்களாய் !!
எத்துணை முறைகளடி!
உனை அனைத்து பார்த்திருப்பேன்!
மனதுக்குள் !!
லட்சியம் இன்றி!
அர்ச்சனை செய்தேன்!
பேரழகாய் உனை ஆராதித்தேன்!
முத்தழகு சித்திரம் என்றேன்!
முடிவைத்த உன் அழகை!
கட்டழகு கோபுரம் என்றேன்!
கண்ணே உந்தன் முன்னழகை!
வளங்கொண்ட நிலம் என்றேன்!
பெண்ணே உந்தன் பின்னழகை!
நீ விலகியது விளங்காமல்!
காமம் நீங்கி காதலித்தேன்!
கற்பனையில் வாழ்ந்து!
சிந்திக்க மறந்தேன்!
குடிப்பது குலத் தொழிலாய்!
ஆத்திரம் என் பெயரின் சொல் பொருளாய்!
புகைப்பது புது பழக்கம்!
வெற்றிடத்தில் என் வாழ்வின் துவக்கம்!
!
நண்பர்கள் தொலைத்து!
நாணயம் இழந்தேன்!
கண்ணிமை அசைவுக்கு!
யாகங்கள் செய்தேன்!
நெருப்பு சாம்பலாகி!
விடியலில் குப்பையானேன்!
விடிந்தபின்னே வேங்கையும் ஆனேன்!
உண்மை சொன்னால்!
இருந்தும் இறந்துவிட்டேன்!
வாழ்ந்தும் மறைந்து விட்டேன்

ஆடுவோமே பள்ளு பாடுவோமே

அருண்மொழி தேவன்
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில்!
என் முப்பாட்டன் முன்டாசு கவிஞன்!
நம்பிக்கையுடன் பாடினான்..!
!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!!
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!!
!
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில்!
நான் பாடுகிறேன் நம்பிக்கையோடு..!
!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!!
வல்லரசாய் நாமின்று ஆகிவிட் டோமென்று!
ஆடுவோமே பள்ளு பாடுவோமே!!
-இ.அருண்மொழிதேவன்

இரவு மழை

சரோஷா
அத்தனை பாதச்சுவடுகளையும்!
தாண்டி, பளிச்செனத்தெரியும்!
குழந்தையின் பாதச்சுவடுகளைப்!
பார்த்து ரசிக்கச்செய்ததற்காக!
நேற்றுப்பெய்த இரவு மழையே!
உனக்கு நன்றி !!
உனக்கான கண்ணாடி!
உனக்கான கண்ணாடியில்!
கல்லெறிந்தாய்!
உடைந்த ஒவ்வொரு துண்டும்!
உன்முகம் காட்டும் !
என்பதை மறந்து!!
சிவப்பதிகாரம்!
எத்தனை பொற்கொல்லர் !
உயிர்கள் !
ஒற்றைச்சிலம்பிற்கு!!
!
-சரோஷா

சித்து.. பார்த்தவர்கள் யாருமில்லை

ந.மயூரரூபன்
01.!
சித்து!
------------!
அசையும் காற்றிலுடைந்து பரவும்!
நீருந்தியெழும் பறவையின் சாரலாய்!
என்னுலவு கணங்களின்!
வனத்தாளுடைந்து கொள்கிறது.!
சிறுபறவைகளின் குலாவுகுரல்!
நுழைந்தென்னுள் வழிகிறது!
என்னுள் பெருகுமுன்னால்!
என்னுதிரா வண்ணம்!
சுடரேறி விண்ணளைகிறது.!
வண்ணவான் படைக்கவெனை!
உந்துமுன்னால் இறைகிறதென்னுள்!
இம்மை பெருக்கும் சித்து.!
!
02.!
பார்த்தவர்கள் யாருமில்லை!
-----------------------------------------!
வாய்ப்புப் பார்த்திருக்கும் தெருவில்!
எனது காலடிகளைத்தேடி!
ஓர் நினைப்பு!
இறங்கியலைகிறது!
என்னைத் தவிர்த்து.!
விழிகள் மயங்கும்!
பொழுதுகள் ஒவ்வொன்றிலும்!
நினைவைக் களைந்து!
திகைத்திருக்கும் எனக்குள்!
நுழைந்து சுருண்டுகொள்கிறது!
என் நினைவு தின்ற அத்தெரு.!
நான் நடந்தலையும் வெளியில்!
மெதுவாய்த் தெரு!
சரிந்திறங்கியதை!
கண்டவர்கள் யாருமில்லை....!
வெளியெங்கும்!
பழமையின் வீச்சமாய்!
என் கனவுகள் மட்டும்!
படிந்திருப்பதைக் கண்டதாய்ப்!
பேசிக்கொண்டார்கள் எல்லோரும்

தமிழ் எங்கள் உயிருக்கு மேல்

இரா.இரவி
தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு!
தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று!
மற்றவர்களுக்கு உயிர்தான் மேல்!
மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல்!
தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன்!
தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும்!
தமிழைப் பழிப்பவர்களை நாங்கள்!
தாயே தடுத்தாலும் விடமாட்டோம்!
உலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி!
உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி!
அனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி!
ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு!
இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி!
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி!
உலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி!
அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி!
பாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி!
பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி!
பாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி!
தேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி!
தேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை!
தமிழின் மகுடமான திருக்குறளுக்கு!
தேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்

ஆளுமை

சு.திரிவேணி, கொடுமுடி
வாழ்ந்த பிறகும் !
பிடிபடாத வாழ்க்கை போல !
தோற்றமும் மாற்றத்தின் காரணமும் !
புலனாகாத காற்றே! !
எங்கும் நிறைந்த !
நீயும் கடவுள்தான்! !
உயிர் வாழ்தலும் வீழ்தலும் !
உன் கையில்தான்! !
மென்மையாய் வன்மையாய் !
உன் திறன் உணரச் செய்வாய் நீ! !
எளியோராயினும் ஏழையர் !
குடிலில் இயல்பாய்ப் போய் வருவாய் !
பிரதிப்பலனும் பேதமும் அறியாய்! !
வாழ்விக்கும் கர்வம் இன்றி - !
புகழும் தேடாது- !
பாகுபாடில்லாத இயற்கையே... !
வெறுப்புடன் கதவடைப்போர் !
மீதும் விருப்பம் கொண்டு !
உள் நுழைந்து சென்று பார்ப்பாய். !
உன் தேவையில்லாப் !
பொருளையும் கூடத் !
தொட்டுச் சென்று !
அன்பைச் சொல்வாய் நீ! !
ஆட்சி செய்யாத !
அதிகாரம் காட்டாத !
ஆளுமையே... !
தலை வணங்கிக் கேட்கிறோம்... !
கற்றுக் கொடு இந்தத் தகைமையை

தூளி.. தருணம்.. அழுகை

ப.மதியழகன்
01.!
தூளி !
-----------!
வளர்ந்ததும் தொலைந்திடும்!
குழந்தைமை பற்றி!
யாருக்கும் அக்கறையில்லை!
பிஞ்சு நெஞ்சத்தில்!
நஞ்சை விதைக்காத!
மானிடர்கள் எவருமில்லை!
பயமுறுத்த வேண்டும்!
என்பதற்காகவாவது!
சொல்லி இருப்போம்!
பேய்க் கதைகளை!
குடுகுடுப்பைக்காரனை!
பூச்சாண்டி எனக்காட்டி!
அச்சுறுத்தி!
சாப்பிட வைப்போம்!
எவ்வளவு!
கவனத்தோடிருந்தாலும்!
தவறுதலாகவாவது!
விஷத்தை விதைக்க!
வேண்டிவரலாம்!
கவனமாகக் கையாள வேண்டிய!
கண்ணாடிப் பாத்திரம் போன்றது!
பால்யம். !
02.!
தருணம் !
------------------!
பரிதியைக் காணோம்!
வானில் பரிதியைக்!
காணோம்!
வனத்தில் திசைதெரியாமல்!
தொலைந்ததா!
கள்வர்கள் கைகளில்!
அகப்பட்டுக் கொண்டதா!
எரிந்து எரிந்து!
சாம்பலாய்ப் போனதா!
ராட்சச பாறைகள் மோதி!
தூள் தூளாய் ஆனதா!
மக்களின் செயல்களைக்!
காணப் பிடிக்காமல்!
மலைகளின் இடையே!
ஒளிந்து கொண்டதா!
நிலவிடம் பந்தயம் கட்டித்!
தோற்றதா!
இருளைக் கிழித்து ஒளியைப்!
பரப்பும் வேலையில்!
அலுப்பு தட்டிவிட்டதா!
இயற்கைக்குப் பயந்து!
நடக்க முடியாதென!
மானிட இனத்தை!
முழுமையாக கைவிட்டு!
விட்டதா. !
03.!
அழுகை !
----------------!
நீர் நிலையில்!
மீனைக் கொத்திச் செல்லும்!
மீன் கொத்திப் பறவையின்!
பிம்பம் நீரில் விழும்!
மீனைப் பிரிந்த!
துக்கம் தாங்காமல்!
நீர் கேவியழும்!
துளித்துளியாய் மழை!
குடை மீது விழும்!
உன்னையும் கொஞ்சம்!
நனைக்கவா என்று!
கேட்டபடியே!
மழை விடைபெறும்!
காலை வருடிச் செல்லும்!
அலைகள்!
கண்டுபிடித்துவிடும்!
காதலியுடன் வந்திருப்பதை!
விட்டில் பூச்சி!
சுடரில் மோதி இறந்தது!
நெருப்பின் கைகள்!
நாலா பக்கமும் நீண்டது!
பரிதி மறைந்ததும்!
இருள் சூழ்ந்தது!
இரவின் ஆகிருதி!
விகாரமாய் இருந்தது

மாவீரர்களே

நிர்வாணி
உங்களின் கல்லறைகளில்!
தமிழினம் தலை நிமிர்ந்து நிற்கிறது!
வீரம் செறிந்தவன் தமிழன் என்று!
உலகம் உணரச் செய்ததால்!
உங்களின் கனவு நிச்சயம் நனவாகும்!
அதற்கான நாட்களை மட்டும்!
நாங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறோம்!
உங்களைப் பெற்ற அன்னையர்!
தம் மக்களை சான்றோர் எனக் கேட்ட!
ஆர்ப்பா¤ப்பில்!
வீரத்திலகங்களே !!
நீங்கள் மரணித்தவர்கள் அல்ல!
மானமுள்ள ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்!
மரணித்து வாழ்பவர்கள்

மண்ணில் தான்

இளந்திரையன்
நீல வானமும் !
நிமிர்ந்த மரங்களும் !
சல சலக்கும் ஆறுகளும் !
சஞ்சரிக்கும் பறவைகளும் !
சங்கீதமாய்தான் இருக்கின்றது !
சந்தோசமாய்த் தான் இருக்கின்றது !
ஆனாலும், !
பசிக்கு அழும் குழந்தையும் !
பாலின்றி தவிக்கும் தாயும் !
ஒரு வேளை சோற்றுக்கு !
ஊரூராய் அலையும் உறவுகளும் !
கந்தகம் மணக்கும் காற்றும் !
கவிதையாய் இனிக்கவில்லை !
உலகத்தின் விளிம்பை !
கரங்கள் தொட நினைத்தாலும் !
உறுதியாய் கால்கள் !
பதிந்திருப்பது மண்ணில் தான் !
!
- இளந்திரையன்

விழிப்புணர்வு

எம்.ஏ.சலாம்
புண்ணிருந்தால் !
ஈக்கள் !
மொய்க்கத்தான் செய்யும் !
கனியிருந்தால் !
கிளி !
கொத்தத்தான் செய்யும் !
திறந்த வீட்டில் !
நாய் !
புகத்தான் செய்யும் !
கறையை !
உன்னில் நிறைத்துக் கொண்டு !
குறையை !
அன்னியரில் காண முயன்றால் !
தரையைத்தான் !
நோக்க வேண்டும் கண்கள் !
அம்பெய்தவனை !
அணுகாமல் !
அம்பை நோவதில் !
பயனேதுமில்லை !
அன்று !
பகைவர்களும் பாராட்டும் !
பரிசுத்த வாழ்வு !
மலிந்து கிடந்தது !
இன்று !
நட்புறவும் நயவஞ்சகத்தை !
மனனம் செய்கிறது !
நரியுடன் பழகி விட்டு !
உன்னையும் நரியாக !
பாவித்துக் கொண்டுள்ளாய் !
நரியல்ல நீ !
இந்த வனத்திற்கே !
வேந்தன் நீ !
கடமையை கை விடாமல் !
கயமைக்கு தலைவணங்காமல் !
ஒரு முன் மாதிரியாக !
எழுந்து நில் !
அடுத்தவர்களை !
உயர்த்துவதாக எண்ணி !
உன் புகழை !
விளம்பரப்படுத்திக் கொள்ளும் !
விநோதமான மார்க்கத்தை விட்டு !
விலகி நில் !
வீழ்ந்தது போதும் !
இனி வாழ முற்படு !
சுற்றுப்புறம் !
ஒளிர்வதால் மட்டும் !
பயனேற்படாது !
காரிருளில் !
மண்டிக் கிடக்கும் !
உன் உள்ளத்தை !
முதலில் பண்படுத்து !
நம் விளக்கே !
நம் வீட்டை !
எரிக்கலாமா? !
-எம்.ஏ.சலாம்