தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

உந்து சக்தி

லலிதாசுந்தர்
மனிதனது மனம் ஓர் போராளி.!
நீ கொடுக்கும் உந்துதலே!
தீர்மானிக்கும் அதன் போரட்டத்தை.!
யுதம் தவிர்த்து விவேகம் கொடு-அது!
உன் முன்னே வெற்றிவாகை சூடிவரும்.!
உந்துதலின்றி உந்தாமலிருப்பதை விட!
உந்துதல் கொடுத்தும் உந்தமலிருப்பது-!
ய்வுகூடத்திலே தோற்றுபோகும் சோதனை!
ஏவுகனைப்போல் கிவிடுவாய்.!
பழுதுபார்.!
நிறுத்தாதே உன் உந்துசக்தியை!
உன் இலட்சிய வாகனம் உன்!
இலக்கை அடையும்வரை...!
!
-லலிதாசுந்தர்

தரைக்கு வந்த நட்சத்திரங்கள்

நீதீ
கவி ஆக்கம்: “நீ தீ”!
பிறப்பு முதல் இறப்பு வரை!
பிரியாதொரு நினைவுகளை!
பிறழாமல் சுமக்கின்ற!
ப்ரியம் ஒன்றை தொட்டு!
ப்ரியம் ஒன்றையே விட்டுச் செல்லும்!
தன்னலமில்லாத!
தாய்மையெனும் அன்பு கொண்ட!
மனுசிகளும்....!
கண்டிப்பு காரணமினறி இல்லை!
என்னின் தைரியமாய்!
எதையும் எதிர் நோக்கா!
மனஉறுதி தந்து!
மனதின் பாசத்தை!
மறைவாக காட்டிச் செல்லும்!
தந்தையாய்யிருந்து தோழனாய் மாறும்!
மனிதரெல்லாம

வாக்குமூலம்

இப்னு ஹம்துன்
'நான்' என்பது உலகமாயிருந்தது!!
பால் எது? சுண்ணாம்பு எது?!
விளங்காத போது!
'நான்' என்பது உலகமாயிருந்தது.!
சூழ்ந்து கடிக்க வந்தன!
சுயநலங்கள்.!
ஒதுங்கி ஒடுங்கியதில்!
'நான்' என்பது தானாய் ச்சிறுத்தது.!
இப்போதும்!
இருட்டும் போதெல்லாம்!
வழிகளின் பயத்திலோ!
வலிகளின் உணர்விலோ !
உறவை, நட்பை உள் வாங்கி!
'நான்' சற்றே விரிவதுண்டு.!
சமூக வீதிகளில்!
யுத்த காலங்களின்!
பரஸ்பர தாக்குதல்களில்!
இனத்தை மதத்தை !
இழுத்தணைத்து க் கொள்ளும் 'நான்'.!
அதீத எதிர்பார்ப்புகளின் போதும்!
அநாதரவான தருணங்களிலும்!
இறை ஆதரவை நாடி ஓடி!
இணைந்துக்கொள்ளும் 'நான்'.!
ஆதாயங்களின் போதும்!
கவனிப்பாரற்று தனிமை காணும் போதும்!
தன் கூடடங்கும் 'நான்'.!
அளவீடுகளுக்கு அடங்காமல்!
மாறிக் கொண்டேயிருக்கும் 'நான்'!
மண்ணில் அடங்கிப் பின் தீரும்.!

எப்படி?

சிதம்பரம் நித்யபாரதி
கான்வென்ட் படிப்பின்!
கனத்தில் அழுந்தி!
நெருக்கடி பஸ்சில் திரும்பிய!
பத்து வயது மகளின் முகத்தில்!
என்னைப் பார்த்துப்!
பூக்குது சிரிப்பு எப்படி?!
!
இரண்டு மழலையில்!
பாதி இளமையும்!
உப்பு புளி கணக்கில்!
மீதி இளமையும்!
முழுதாய் தொலைத்த!
மனைவிக்குக் கூட!
என்னைப் பார்த்து!
முகிழ்க்குது சிரிப்பு எப்படி?!
!
---சிதம்பரம் நித்யபாரதி

பிறகும் தொடரும் தீவின் மழை

எம்.ரிஷான் ஷெரீப்
மழை வெளி நிலத்தின் பட்சிகள்!
ஈர இறகை உலர்த்தும் புற்பாதையில்!
மீதமிருக்கும் நம் பாதச்சுவடுகள் இன்னும்!
எப்பொழுதும் மழைபெய்யும் ஊரின் பகல்வேளை!
மென்குளிரைப் பரப்பியிருக்க!
நனைந்திடாதபடி முழுவதுமாக மறைத்த நாம் !
நடந்து வந்த பாதையது!
தீவின் எல்லாத் திசைகளிலும் !
கடலை நோக்கி நதிகள் வழிந்தோடும் !
அவ் வழியே பிரம்பு கொண்டு பின்னப்பட்ட!
கூடைத் தொப்பியை அணிந்து வந்த முதியவள்!
‘கருமேகக் கூட்டங்களற்ற வானை !
ஒருபோதும் கண்டதில்லை’ என்றதும்!
சிரட்டைகளால் செதுக்கப்பட்ட !
அவளது சிற்பங்களை முழுவதுமாக வாங்கிக் கொண்டாய்!
இவ்வாறாக !
கரிய முகில் கூட்டம் நிரம்பிய வானின் துண்டு!
உன் சேமிப்பில் வந்தது!
மழை உனக்கு அவ்வளவு பிடிக்கும்!
புனித ஸ்தல மரமொன்றில் !
கடவுளுக்காகத் தொங்க விடப்பட்டிருந்த ஏவல் பொம்மைகள்!
வெயிலை வேண்டும் அவர்களது பிரார்த்தனைகளை!
பொய்ப்பித்தே வந்தன!
சூரியனையும் நிலவையும் நட்சத்திரங்களையும் !
நேரில் பார்த்திரா அந்த ஊர்வாசிகள் !
நம்மிடம் அவை பற்றிக் கேட்டார்கள் இல்லையா!
ஆனாலும் அப் பிரதேசத்துக்கும் !
அவை தினந்தோறும் வந்தன!
மழைத் திரை ஒரு நீர்க்கோடாய் !
அவற்றை அவர்களிடமிருந்து மறைத்தது!
‘விதியில் எழுதப்பட்டவர்கள், !
சமுத்திரத்தில் வழி தவறி!
திசைகாட்டி நட்சத்திரத்தைத் தேடித் தொலைந்தவர்கள்!
முன்பெல்லாம் அத் தனித் தீவில் கரையொதுங்கினர்’ !
என்றவர்கள் கூறியதை !
நீ குறித்து வைத்துக் கொண்டாய்!
தொலைதூரம் பறந்து சென்ற!
வலசைப் பறவைகள் மட்டுமே கண்டிருந்த வெயிலை !
ஒருபோதும் அறிந்திரா அத் தீவின் சிறார்கள்!
அதன் நிறத்தை, வாசனையை!
அது நம்மைத் தொடும்போது எழும் உணர்வைப் பற்றி!
மழை கண்டு ஆனந்தித்திருந்த நம்மிடம் வினவியதும் !
‘எவ்வாறு உரைத்தல் இயலும்’ என்றாய்!
சிறிதும் கருணையேயற்று!
ஆவி பறக்கும் உஷ்ணப் பானங்களை அருந்தியபடி!
பிரயாணிகள் அனைவரும் சுற்றிப் பார்த்த பின்!
அத் தீவை மழையிடம் தனியே விட்டுவிட்டு!
கப்பலில் நமது தேசம் வந்து சேர்ந்தோம்!
ஆனாலும் அன்றிலிருந்து எப்போதும் !
நமது மர வீட்டின் தாழ்வாரத்தில்!
ஈரத் துளி விழும் சப்தம்!
கேட்டுக் கொண்டேயிருக்கிறது இரவிரவாக

ரகசியம்

நெப்போலியன் சிங்கப்பூர்
உனக்கும் !
எனக்கும் !
ஆயிரம் இருக்கும் !
உள்ளுக்குள் !
சொல்லிக்கொள்ளாதபோது !
சுகங்களாய் நகரும் !
பந்தம் !
உன் !
உண்மை நடத்தையில் !
உருகிப்போய் !
என்றாவது !
ஒரு நாள் !
உடைந்துபோகலாம் !
என் ஆழங்கள் !
என் வேசமற்ற செய்கையில் !
வெட்கிப்போய் !
விருட்டென !
எழுந்து நிற்கலாம் !
நீ புதைத்தவைகள் !
அப்படி !
ஒரு நிகழ்வு !
இருவருக்கும் !
நேரிடினும் !
சொல்லாமல் !
தவிர்த்துக் கொள்வோம் !
காக்கைக் கூட்டில் !
குயில் முட்டையாய் !
அடைகாக்கப்படும் !
நம் !
உறவில் !
நீ புதைத்தவைகளையும்... !
என் ஆழங்களையும்

உன்னைப் போலவே.. கனவு

கனிகை
01.!
உன்னைப் போலவே!
---------------------!
உன்னைப் பார்ப்பதற்காய்!
சாளரம் திறந்து!
காற்றை உள் இழுக்கின்றேன்!
வழமை போல் ஏக்கமுடன்!
சிமிட்டிச் சிமிட்டி ஒளிர்கின்றாய்!
என் தோழியைப் போல!
உன் வருகை எனக்கு!
அவளையே நினைவுறுத்தும்!
வந்தவை தவிர்த்துப்!
பேரங்கள் பேசி!
இன்றவள் இரந்து!
கையேந்தி நிற்கின்றாள்!
ஒரு கல்யாண மாலைக்காக!
அது பெற்றவரெல்லாம் !
பாக்கியசாலிகளல்ல என்பது!
எனக்குத்தெரிந்தும்!
இரக்காதே எனக்கூற!
என்னிடமோ தைரியமில்லை!
நான் சொன்னால் அவள்!
கேட்டிடுவாளென்ற!
சொட்டு நம்பிக்கையும்!
என்னிடமில்லை!
திருமணம் தான் !
சொர்க்கத்தின் வாசலெனும்!
சமுதாயப் பிரதிநிதிகள் நாங்கள்!
எப்படி தவிர்த்திட முடியும்!
அவளே நீயாகத் தெரிகின்றாய்!
கிளி குருவி குரும்பட்டிச் சாத்திரம்!
கேட்டுக் கேட்டு!
அவளுடனே காத்திருந்தேன்!
ஒளிக்கீற்றின் ஒரு பொட்டேனும்!
தெரிகின்ற அசுமாத்தம்!
இல்லவேயில்லை!
சந்தடியற்ற இரவுகளைத்!
தனதாக்கி விழி மூடாது!
எல்லையுடைக்கும் !
மனதை அரவணைத்து!
ஆறுதல் சொல்லி!
காலத்தின் நகர்வையெண்ணி !
பெருமூச்செறிவாள்!
நேரம் ஆக இரவும் குறையும்!
நீயும் ஒளி மங்கிப் போவாய்!
என் தோழியும்… உன்னைப் போலவே!
02.!
கனவு!
----------!
ஓங்கி ஆர்ப்பரித்து நீர் சிதைத்துப்!
தொப்பென வீழ்ந்து!
புரண்டலைந்தது அலை!
வாரியிறைத்த புளுதி சுமந்து!
மூசி மூசிக் காற்றும் சுழன்றது!
வாளாதிருந்தது மானிடம்!
சிருங்கார நிழல் சுமந்த!
மாமரமெல்லாம் பாறி முறிந்து வீழ்ந்தது!
அச்சம் எங்கும் அச்சம்!
மென்மை ரூபமென்றவரெல்லாம்!
வாய் பிளந்து பின் ஒடுங்கி நிற்க!
வீச்சுக் கூடி வானம் அசைந்தது!
தட்டுமுட்டுச் சாமானுடன்!
சமையலறைப் பாத்திரங்கள் உருண்டு!
மூலை தேடியொழித்தன!
தாவியோடி யன்னல் சாத்தக்!
கைகள் கிழித்துக் குருதி பாய்ந்தது!
மாசுற்றதால்!
கௌரவம் அம்மணமாயிற்றென்றவரே!
கஞ்சல் குப்பை கலந்து!
வேஷங்கள் களைந்து!
தலைவிரித்தாடுகின்றேன்!
பார்த்துப் போ; அடங்கிப் போ!
உக்கிரச் சொல்லின் தீப்பிழம்புகள்!
காதுமடல் எரித்தன!
ஐயோ!!
எங்கோ ஓர் ஆண்மைச் செருமல்!
ஒருக்கழித்துப் படுத்துக் கொண்டாள்

கீதையும் காதலும்... காதல்

ப.மதியழகன்
01.!
கீதையும்... காதலும்... !
-----------------------------!
மாலையிலே வீதிப் பாதையிலே!
மயிலென நடந்துவரும் வெண்மதியே!
உன்னை கோளநிலா அழைத்திடுமோ!
தன் காதல்தனை உதிர்த்திடுமோ!
உன் பால்வடியும் முகத்ததைப் பார்த்து!
வெண் சூரியன் தான் விலகி வழிவிடுமோ!
வில்லைப் போன்ற அந்த விழிகளைப் பார்த்து!
அந்த வானவில்லே மயங்கிடுமோ!
உன் எழிலான கூந்தலைப் பார்த்து!
அந்த மேகம் தனில் மழைவருமோ!
உன் இருவிழி பார்வை பார்த்து!
மின்னல் கண் சிவந்திடுமோ!
உன் எழில் கொஞ்சும் இடையைப் பார்க்க!
விண்மீன்கள் தரையில் இறங்கிடுமோ!
யாரும் தீண்டாத இந்த மெய்தனிலே!
கீதையின் புனிதம் அடங்கிடுமோ!
உன் கொஞ்சும் குரல் கேட்டு!
அந்த அலைகள் விண்ணைத் தொட்டிடுமோ!
உன் கனிவான் பார்லையில்!
அந்த புயலும் தென்றலாய் மாறிடுமோ!
உன் பாதச்சுவடு பட்டு!
இந்த மண்ணுலகம் சொக்கமாய் மாறிடுமோ!
உன் கைகள் என்னைத் தீண்டியதால்!
உன் உடலில் என்னுயிர் கரைந்திடுமோ!
உன் விழிகள் இரண்டு பார்த்துவிட்டால்!
அந்த எரிமலைகூட பனிப்பாறை ஆகிடுமோ!
உன் நெற்றிப்பொட்டை பார்க்கையிலே!
பூமியின் நிலவுதான் தேய்ந்திடுமோ !
!
02.!
காதல்!
----------!
சூரியன் பார்வையில் உருகும்!
பனி போன்றது காதல் !
முழு நிலவில் வீசும்!
தென்றல் போன்றது காதல் !
குருவின் மீது கொள்ளும்!
பணிவு போன்றது காதல் !
கடவுள் மீது கொள்ளும்!
பக்தி போன்றது காதல் !
கரை காணா கடலின்!
அலை போன்றது காதல் !
விளக்கு திரியிலுள்ள!
சுடர் போன்றது காதல் !
இருளில் மின்னும் மின்னலின்!
ஒளி போன்றது காதல் !
நீயும் நானும் பிறந்ததற்கு!
காரணமாயிருந்தது காதல்

மனத்தாபம்

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்
தொடைகளுக்குள் நிரந்தரமாய்த்!
தொலைந்துவிட்டது போல்!
முடக்கப்பட்ட அவனது!
முழங்கால்களிரண்டும் தோன்றும்.!
வலதுகைவிரல் மடிப்புகளால்!
வாரப்படாது கோதிவிடப்பட்ட!
முடிகளின் ஒருபகுதி - மாதர்!
முக்காடிட்டதுபோல் தோன்றும்.!
நுளம்புத் தொல்லை என்று!
நூற்ற விளக்கை உயிர்ப்பித்து!
நிமிர்ந்து கையில் அகப்பட்ட!
நாசினியை விசிறும் போதும்,!
பன்னிரண்டு மணிக்கு மேல்!
பக்கத்தில்வந்து படுக்கும் போதும்!
முழங்கால்களும் வலது கையும்!
முடிகளின் ஒரு பகுதியும்,!
அப்படித்தான் தோன்றும்!!
அன்றுமவன் அப்படித்தான் படுத்திருந்தான்!
அவனது ஒருகாலைத் தொலைத்துவிட்டு!!
தொடைகளுக்குள் அல்ல!
தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலிக்குள்

ஏதாவது செய்யணும் ?

ராமசுப்ரமன்யன்
கடவுளாலும் காதலியாலும்!
கைவிடப்பட்ட பின்னும்!
போதையும் புகையுமே!
வாழ்க்கையாகிவிட்ட பின்னும்!
புதைக்கப்பட்ட ஒரு காதலும்!
எரிக்கப்பட்ட ஒரு இதயமுமே!
மிச்சமாயிருக்கும் போதும்!
நாட்டுக்கு ஏதாவது!
செய்யவேண்டுமென்ற துடிப்பெல்லாம்!
வீட்டுக்கு எதுவுமே!
செய்யமுடியவில்லை எனும்!
ஏக்கத்திலேயே வடிந்து விடுகிறது...!
கவிதை ஆக்கம்!
ராமசுப்பிரமணியன்.எஸ்