மூங்கில் நினைவு...சட்டைப்பைக்குள் சங்கிலி...!
1.மூங்கில் நினைவு.!
முட்கம்பி தாண்டி!
மூங்கில் மரம்தறித்து!
முழுசாய் முடிவதற்குள்!
முதுகில் மூங்கிலடி.!
வாரிச் சுருட்டி!
வேலி பாய்ந்து!
வீடு வந்தபோது!
விழுந்த அடிகள்!
மூங்கில் தாகினை!
முழுமை பெறச்செய்தன.!
முந்தநாள் மூத்தமகன்!
மூங்கில் வேண்டுமென்று!
முகத்தைப் பார்த்தபோது!
முதுகைத் தடவிக்கொண்டேன்.!
முப்பது வருடங்களாக!
முதுகைத்தான் தடவுகிறேன்!
மூங்கில் நினைவுமட்டும்!
முதுகைவிட்டு நீங்கவில்லை.!
!
2.சட்டைப்பைக்குள் சங்கிலி.!
!
பக்கத்து மாணவனின்!
பென்சிலைத் திருடி!
மூன்றாக்கிச் சட்டைப்பைக்குள்!
மறைத்து விட்டேன்.!
சட்டைக்குள் என்னவென!
சடுதியாய் விசாரணை!
~சங்கிலி| என்றேன்!
கிலிபிடித்து நின்றநான்.!
அன்று அதிபராயிருந்த!
என் அப்பாவின்!
ஐந்து விரல்களும்!
என் கன்னத்தில்.!
இன்று சங்கிலியைக் காணும்போதெல்லாம்!
என் சட்டைப்பைக்குள் பென்சிலையும்!
கன்னத்தில் வடுவினையும் - ஏதோ!
எண்ணத்திற் தேடுகிறேன்.!
--எஸ். ஏ. ஹப்பார்
மருதமுனை எஸ். ஏ. ஹப்பார்