முட்டையின் கோதுகளிலான வாழ்க்கை!
----------------------------------------------------!
இது இக்கணமே!
உடைந்துநொறுங்கும் சாத்தியங்களால்!
நிரப்பப்பட்டிருப்பது தெளிவாகிற்று !
இன்றைக்கும் கனவுகள்!
எழுந்து விழிப்பதற்கு ஏதுவாக!
அழகும்,பதுமையும் நிறைந்த!
பெரும் தரித்திரங்களை அழைத்துவந்து!
நிறுத்திவிடுகிறது வாசலில்!
இதிலிருந்தே அறியமுடிகிறது!
இவை பாதுகாப்பற்ற மேற்பூச்சுநிறைந்த!
படாடோபமென்று!
ஒழுங்கு படுத்தல்களோ,உறுதிப்பாடோஇன்றி!
சிக்கல்களை தோற்றுவிக்கிறபடி!
தயாரிக்கப்பட்டிருக்கிறது இந்த நொடிவரை!
எவரையும் பயமுறுத்தி வீழ்த்த பயிற்றப்பட்ட!
மிருகத்தைப்போல்!
உறுமியபடி துரத்திக்கொண்டிருக்கிறது காலம்
ரோஷான் ஏ.ஜிப்ரி