தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

இது உனக்கும் எனக்கும் தான்

சேயோன் யாழ்வேந்தன்
பாதிக்கப்பட்ட பின் !
போராடத் துணிந்தால் !
நீ என்ன புரட்சிக்காரன் !
பழிவாங்குவதற்காய் மட்டும் !
ஆயுதம் ஏந்துபவனா !
சமூகக் காவலன்? !
உசுப்பிவிட்டால் தான் !
எழுந்திருப்பேன் என்றால் !
நீயா போர்வீரன்? !
ஓர் அபயக்குரல் போதாதா !
போர்ப்பரணி பாட !
சக f¦விக்கு இழைக்கப்படும் !
ஓர் அநீதி போதாதா !
யுத்தம் செய்ய !
சுய இழப்புக்காய்க் காத்திராதே- !
அழைப்புக்காய்

மனகவலை ஏதுமில்லை

கருவெளி ராச.மகேந்திரன்
அந்த ஒருவழிப் பாதையிலே... !
உனக்கு வழிவிட்டு எதிர்முனையில் காத்திருப்பேன்...!
நான் உனைக் காண கிடைக்கும் ஓரிரு மணித்துளிக்காக! அதை நீ அறிந்திருக்க!
வாய்ப்பில்லை தான்... !
ஒரு வெயில் கால மழையில் வரும் மின்னல் போல... !
முடிந்து போகும் அந்த கணங்கள் தான் என் வாழ்நாளுக்கு எல்லாம் வெளிச்சம்!!
என்றிருந்தேன்... !
அதை நீ அறிந்திருக்க !
வாய்ப்பில்லை தான்... !
இதோ... மாலை மாற்றி... !
உனக்கு நான்... !
எனக்கு நீ என ஆன இந்நொடியில்... !
அந்த ஒரு வழிப்பாதையை!
ஓடோடி நீ கடந்தது... !
என் விழியின் வழியே பாயும் அன்பில் அங்கேயே சிலையாகி போவதை!
தவிர்க்கத்தான் என்கிறாய்! வாழ்க்கையை நினைத்து புன்னகைக்கிறோம்... !
நீயும் நானும்! மனம் அறிந்தால்.... மனக்கவலை ஏதுமில்லை... - என்று எங்கோ படித்ததாய் ஞாபகம்!!
கருவெளி ராச.மகேந்திரன் - தேனி

தமிழ் படிப்போம்

வேதா. இலங்காதிலகம்
வாருங்கள்! வாருங்கள்!!
வண்ணத் தமிழ் படிப்போம்.!
வசீகரத் தமிழ் படிப்போம்.!
வளமான தமிழ் படிப்போம்.!
ஆரியத்தின் மூலமொழி!
திராவிடத்தின் தாய் மொழி.!
உலக முதன் மொழியென்று!
மொழிந்தார் பாவாணர்.!
ஓளவை மொழி பயில்வோம்.!
வள்ளுவர் மொழி படிப்போம்.!
கள்ளமற்ற நல்வழியால்!
வெள்ளை மனமாய் வாழ்வோம்.!
வளர்ப்பது தமிழெனும் எண்ணத்தால்!
வளமான தமிழ் பாய்ச்சுவோம்.!
வாக்குத் திறமை கூட்டி!
வசீகரத் தமிழாய்க் கொட்டுவோம்.!

கவிதைத் தீவு

றஞ்சினி
ஆகாயமாக!
விரிந்து கிடக்கும் !
கடலின்னலை தாலாட்ட!
தென்னை மரக்கீற்றடியில்!
பஞ்சுமணல் தரையில்!
பறவைகள் துயிலெளுப்ப!
ஒருபொழுதேனும்!
கண்விழிக்கவேண்டும் .... ....!
எமை இணைத்த விடுதலை!
உலகெங்குமாய் விரிய!
இயற்கையைத் தின்று!
சூரியன் சுட்டெரிக்கும்வரை!
அங்கேயே கிடப்போம் !
பலகதைகள் பேசி!
உன்னை நான் கவிதையாக்க!
என்னை நீ ஓவியமாக்கு!
எம் கனவுகளை நிஜமாக்கும்!
அந்த அழகிய தீவு .!
-- றஞ்சினி

இரண்டாம் தாய்

அன்பாதவன்
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் !
தொலைந்துவிட்ட என்னை !
நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய் !
தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை !
உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை!
பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும் !
மவுனம்கவிந்த பொழுதுகள் !
மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு !
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள் !
பாறையாயிருந்தேன்; !
சிற்பமானேனுன் செதுக்கலில் !
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா !
கடன் பெற்ற நெஞ்சம் !
உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய் !
தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில் !
தொலைந்துவிட்ட என்னை.!
OOOOO !
அன்பாதவன் !
2006

ஏமாற்றம்

கலியுகன்
எமக்கொன்றும் புதிதல்ல!
உறவுகள் கூட [தேச]!
துரொகிகளாய் மாறும் போது!
பேச்சு வார்த்தை!
உதவி வழங்கும் நாடுகள்!
நேர்வேயின் அனுசரனை!
கண்காணப்புக் குழு !
சர்வகட்சி மாநாடுகள்!
எம்மைப் பொறுத்தவரை!
எல்லாம் ஏமாற்றுத் தான்!
தனியரசு அமைப்தைத் தவிர!
-கலியுகன்

கலவரமா? கொலைவரமா?

கிரிகாசன்
வெட்டி யடித்தது மின்னல், நிலமதில்!
வீசியது சூறைக்காற்று, மழையுடன்!
கெட்டி மேளமிடு சத்தமென வானம்!
கேட்டபெருமிடிசத்தம், முழங்கிட!
வட்டச்சுழல்புயல் காற்றும் இழுவைக்கு!
வந்து விழுந்த மரங்கள், இவைகளோ!
குட்டி கலவரம் செய்யும் இயற்கையின்!
கோலமன்றோ கணநாதா!
மெட்டி யணிந்தொரு மங்கை, அவளினைத்!
தொட்டிழுத்த மணவாளன், தாலிதனைக்!
கட்டியவ ளிடும் கூச்சல், கண்டு கைகள்!
கொட்டிச்சிரித்திடும் கூட்டம், சிறுசிறு!
குட்டிகளாய் பெற்ற பிள்ளை. குமரிகள்!
வட்டமிடும் பலகண்கள் இவைகளும்,!
குட்டிக் கலவர மன்றோ இயற்கையின்!
கோலமன்றோ கணநாதா!
பெட்டி பெட்டியென ஆயிரமாய் பல!
வெட்டி விழுந்த பிணங்கள், இவைதனில்!
கொட்டிசிவந்த குருதி கண்கள் நீரை!
விட்டிருக்கும் சிறுபிள்ளை, உடலினைக்!
கட்டி யழும் பலபெண்கள் எங்கும்படை!
சுட்டுச் செல்லும்பெருஞ் சத்தம், இவையொரு!
குட்டிக்கலவரமென்றோ இயற்கையின்!
கோலமென்று சொல்லலாமோ?!
ஏறிவிழுந்த மனிதன் துடித்திட!
இன்னும் மிதிக்கின்ற மாடு எழுந்திட!
தூறிக் கொட்டும் பெருவானம் குளிர்ந்திட!
துன்பமிடும் புயல்காற்று நடந்திட!
மாறி இடித்திடும் கல்லு விரல்நுனி!
மங்குமிருள் மறைபாதை நடுவினில்!
சீறிநிற்கு மொருபாம்பு இவையெல்லாம்!
சேர்ந்து வரலாமோ நாதா!
பள்ளிசெல்லும் சிறுபிள்ளை இறந்திட!
பக்கத்திலே விழும்குண்டு, அதிர்ந்திட!
துள்ளி விழும்சடலங்கள், துடித்திடத்!
துண்டு செய்யும் படைஆட்கள், தீயெடுத்து!
கொள்ளியிட எரிஇல்லம், இடிந்திடக்!
கூக்குரலிட்ட கணவன், சிரசினை!
அள்ளிஎடுத்திடும் கோரம் தமிழர்க்கு!
ஆனதும் ஏன் கணநாதா!
புட்டவிக்க தின்று போட்டஅடி வாங்கி!
பொய்யுரைத்த கவிசொல்லி மதிகெட்டு!
சுட்டே யெரித்த நக் கீரன் பழி கொண்டே!
செத்தஉடல் எரிசாம்பல் பூசியொரு!
நட்ட நடுநிசி தட்டிஉடுக்கையை!
நாட்டியமாடும் உனை நம்பி நாங்களும்!
கெட்டதுபோதுமினி கொல்லும்நீசரை!
கேட்க வாடா கணநாதா! !

நிலா

நிர்வாணிதாசன்
சன்னலின் வெளியே!
விரிந்து கிடக்கும் இருளின்!
அந்தகார இருட்டு!
மைகொண்டு பூசியது போல!
என் மனதிலும்!
இருளைக் கரைக்க முயலும் மழை!
ஓயாத கிழவியின் முணு முணுப்பாய்!
குளிரில் உடல் நடுங்கும்!
என் மனதில் மட்டும் புழுக்கம்!
என் கரம் பற்றி!
அருகமர்கிறாய்!
வீசும் காற்றில் மழையின் மணம்!
மேகங்கள் விலக நிலவின் வெளிச்சம்!
என் மனதிலும்

செருப்புச் சேதி

ரவி (சுவிஸ்)
14 மார்கழி 2008.!
பாக்டாட்டில் செருப்புக்கு சிறகு முளைத்த நாள்!
இன்னும் 33 நாட்களுக்கான அமெரிக்க அதிபரை!
சொல்லப்போனால் ஒரு போர் எசமானனை!
சீண்டியது செருப்புப் பறவை.!
பத்திரிகையாளர் மாநாட்டில் நடப்பட்டிருந்த!
அமெரிக்க தேசியக்கொடியிடை சிறகடித்து!
மோதி விழுந்தது அது.!
ஒரு செய்தியின் வியாபகம் எழுந்தது,!
அதிலிருந்து.!
பேனாக்களின் வலிமை செருப்புக்கும் இருக்கிறது என!
நினைவூட்டினான் ஒரு பத்திரிகையாளன்.!
மாபெரும் மனித அழிவின் அலறல்களினதும்!
சிதைக்கப்பட்ட ஒரு பூமியினதும்!
இடிபாடுகளினுள் கூடுகட்டிய பறவை அது.!
போருக்கான வியாக்கியானங்கள் தன்னும்!
பொய்யாகிப் போனபின்னும்!
ஈராக் எரிந்துகொண்டுதானிருக்கிறது.!
எண்ணை வளம் அந்தப் பூமிக்கு!
போரை பரிசாக வழங்கியிருக்கிறது!
பதவி அழியமுன், எடுத்துச் செல்!
எங்களது இந்த இறுதி முத்தத்தை என,!
அவமானகரமான உனது முகத்தில் அறைந்துசொல்கிறோம்!
எங்கள் தணியாக் கோபத்தினை என!
செருப்புப் பறவை எடுத்துச் சென்ற சேதி!
வரலாற்றில் அழிக்கப்பட முடியாததாய்!
சொல்லப்பட்டாயிற்று, இரட்டைக் கோபுரத்தின் மீதான!
விமானப் பறவையின் மோதல்போல்.!
இந்த செருப்புப் பறவையின் முத்தம்!
விடைபெற்றுப் போகும் அதிபருக்கு மட்டுமானதா அல்லது!
பதவியேற்கப்போகும் அதிபருக்குமானதா என்பதை!
தீர்மானிக்கும் நாட்கள்!
எதிர்பார்ப்புகளுக்குரியன.!
-ரவி!
(17122008)

அலையில் பார்த்த முகம் தொகுப்பிலிருந்து

பாலு மணிமாறன்
அலையில் பார்த்த முகம் கவிதைதொகுப்பிலிருந்து சில கவிதைகள்!
1.நீர் சுரக்கும் அலை!
ஒரு அலை!
அழித்துவிட்டுப்போகலாம்!
நம்புங்கள்!
ஒரு மழை!
முளைக்க வைத்துப் போகும்!
2.இங்கு இப்படியாக இலக்கியம்!
ஜெயகாந்தன் புதுமைப்பித்தன்!
கு.அழகிரிசாமி தி.ஜானகிராமன்!
சுஜாதா பாலகுமாரன்!
இன்னும் எவர் எவரோ!
நூலக அடுக்குகளில் வரிசையாக!
எத்தனையோ நாளாய்!
என்னோடு பேச!
மன்னிக்கவும்!
ஒன்பது மணிக்கு நூலக அடைப்பு!
ஒரு மணி நேர இண்டர்னெட்டில்!
பிரான்ஸ் தேசத்து பெண்ணோடு!
பில் பிளிண்டன் பற்றிப் பேச!
இன்னும் இருப்பதோ இருபது நிமிடம்!
எங்கே போய்விடும் இலக்கியம்!
பேசலாம் பின்னொரு நாள்!
3.ஈதலே வித்தாக!
சாமி!
வேலை அவசரத்தில்!
சிகப்பு சிக்னல் பரிதவிப்பில்!
பச்சை விளக்குக்கு!
பதற்றமாய் பார்த்திருக்க!
வயிற்றுப் பிழைப்புக்கு!
முகம் முன்னே கரம் நீட்டும்!
குருட்டு மனிதனின் இருட்டுக்குள்!
கரையாமல் மறையாமல்!
ஏதேனும் ஈகின்ற!
இளகிய மனம் எனக்குத் தா