தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அர்த்தமிழந்து போன அர்த்தங்கள்

நேற்கொழுதாசன்
நிலாக்கரையும் பொழுதொன்றில் !
உலர்ந்த உதடுபிரித்து !
பேசத்தொடங்கினேன் !
ஒலிக்குறிப்பற்ற சொற்களால். !
நிசப்தமுடைக்கும் !
மிக நிசப்தமாய் !
மிதக்கத்தொடங்கின அர்த்தங்கள் .!
இலையில் பின்னிய வலைக்குள் !
இறந்துபோன புழுவாய் !
உக்கத்தொடங்கியது மனம் !!
இடைவெளிகளை !
முரண்களால் நிரப்பி!
இணைப்புக்களை தயக்கங்களால் !
சோடித்துத்திரும்பியபோது, !
வறண்டு வெடித்துப்போயிருந்த!
மனதேசத்தில் விழுந்த கண்ணீர் துளிகள்!
விதைகளை எரித்து கருக்கின ..........!
மரண ஊர்வலம் போன !
பாதையில் நிலைத்திருக்கும் வாசம்போல் !
படர்ந்திருக்கிறது உள்ளுக்குள் !
காயத்தின் ஊனநீர் நாற்றம் !
ஒடுங்கி !
ஒன்றுமில்லாத ஒன்றாக !
மீண்டும் மீண்டும் !
ஒடுங்கி கொள்கிறது !
இந்த நாட்கள் மீதான இருப்பு !
மெல்ல மெல்ல !
கரைந்து மறைகிறது நிலவு !
அர்த்தங்கள் எல்லோராலும் !
பகிரப்படுகின்றன பெருமூச்சுக்களாக !
அவளிடமிருந்தும்

எங்கும் நீ

கோவிந்தபிள்ளை, சிறீதர்
நினைவினில் நீயானாய்,!
கனவினில் நீயானாய்,!
உயரினுள் ஒன்றானாய் ,!
உறவினுள் இரண்டானாய்,!
உன் குரல் கேளாமல்!
என் உயிர் துடிக்காது,!
உன் மொழி கேளாமல்!
என் விழி மூடாது,!
மனதினில் சுமந்தேனே!
மறுப்பது சரிதானா?!
மயக்கத்திலும் என்னை!
மறுப்பது முறைதானா?!
கிறக்கத்தில் நான் இல்லை,!
உறக்கத்தில் நான் இல்லை,!
இறப்பது என்றாலும்!
நீயின்றி நானில்லை .!
தடுக்கின்ற சுவர் ஏது!
உடைகின்ற வழி கூறு!
அனைகின்ற நாள் பார்த்து!
அருகினில் உறவாடு!
நெருக்கத்தில் நெருப்பாவாய்!
நெஞ்சுக்குள் மழையாவாய்!
நெருங்காதபோதெல்லாம்!
நெருஞ்சியின் முள் ஆவாய்.!
வளைகொஞ்சும் கையாலே!
வளைத்திட மாட்டாயா?!
வலை பின்னும் விழியாலே!
வசமாக்கமாட்டயா ?!
மறுஜென்மம் என்றாலும்!
மறக்காமல் வரவேண்டும்!
மறுபடி பிறந்தாலும்!
மடிமீது நீ வேண்டும் .!
காலங்கள் போனாலும்!
மாயங்கள் ஆகாது!
கண்ணே உன் காதல்தான்!
கதையாகி போகாது!
காணலின் நீர் தானோ!
நான் கொண்ட ஆசைகள்!
கண்களின் நீர் தானோ!
நான் சேர்த்த ஆசைகள்

வீடு திரும்புகிறார்கள்

கே.பாலமுருகன்
சாயும்காலம் தொடங்கி!
எல்லோரும்!
வீடு திரும்புகிறார்கள்!
வீடுகள்!
மதியத்திலிருந்து!
வெயிலில் காய்ந்து!
சோர்ந்து போயிருந்தன!!
அவர்கள் வாசலை !
நெருங்கியதும்!
வீடுகள்!
நிமிர்ந்து உற்சாகம்!
கொள்கின்றன!!
வீடு திரும்புவர்களுக்கென!
ஒரு வரவேற்பு!
எப்பொழுதும் அவர்களுடைய!
வீடுகள்!
சேகரித்து!
வைத்திருக்கின்றன!!
வாய் பிளந்து!
அவர்களை!
விழுங்கிக் கொள்கின்றன!!
!
-கே.பாலமுருகன்!
மலேசியா

நானும் எனது குடும்பமும்

நெடுந்தீவு முகிலன்
வருகிற....!
புது வருடத்தை முன்னிட்டு!
நானும் மனைவியும் குழந்தைகளுமாக!
ஒவ் ஒரு புடவைக்கடைகளாய்!
ஏறி இறங்கினோம்.!
எத்தனை கடைகள் என்று........!
அன்னளவாக இப்போது – எனக்கு!
ஞாபகம் இல்லை....!
மூத்தவள் - கலர்!
பிடிக்கவில்லை என்று.............!
முணுமுணுத்தாள்.!
இளையவள் - இது!
மொடலிங் இல்லை என்று .........!
மூஞ்சியை திருப்பி!
உம்முண்ணு இருந்தாள்.!
அடுத்தது – அக்காட!
மாதிரியே எனக்கும் என்று..........!
அழுதழுது அடம்பிடித்தது!
.கடைசி என் கையைபிடித்து!
அடிக்கடி இழுத்தது –அடுத்த!
கடைக்கு போவோம் என்று.....!
எல்லோரையும் விட – மனைவி!
அலுப்பு கொடுத்தாள்.!
அது பிடிக்கிதா......?...இது பிடிக்கிதா.........?..!
என்று ...கேள்விகளை எழுப்பி!
ஏதோ எல்லோருக்கும் ஒவ்வொன்று!
வாங்கிக்கொண்டு - வீடு திரும்புகையில்!
இரவாகிவிட்டது.!
காலையில் யாரோ ....ஒருவனின்!
அம்மா வருகிற!
வயதாகிப்போன அம்மா தானோ என்று ....!
நான் வாங்காமல் விட்டு வந்த – அந்த!
வண்ண பட்டு புடவையைக் கட்டிக்கொண்டு

ஒற்றுமையின்.. மானஸ்தி அவள்

வித்யாசாகர்
ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது .. மானத்தி அவள்; தமிழச்சி!
!
01.!
ஒற்றுமையின் வெளிச்சம் ஊரெல்லாம் பரவுகிறது!
---------------------------------------------------------------------!
இறந்த போராளிகளின்!
உடல்கள் நைந்துக்கிடப்பதுக் கண்டு!
நெஞ்சு பிளந்தது,!
அருகே நின்று பார்த்தவன் சொன்னான்!
அதலாம் பிணங்களென்று;!
இல்லை.!
பிணங்கள் இல்லை அவர்கள்;!
உயிர் விட்டெரியும் எம்!
விடுதலை தீபங்கள்,!
நாளைய எங்கள் வாழ்வின்!
ஒளியாய் வீசி – உயிர்த்திருக்க காத்திருக்கும்!
தியாக விளக்குகள் என்றேன்; உணர்ச்சிவசப் பட்டு!
அவன் இவ்வுலக மனிதரைப் போலவே!
சிரித்துக் கொண்டே போனான் –!
எனக்குள்ளிருந்த விடுதலையின் தீ!
சுடர்விட்டு எரிந்தது அந்த சிரிப்பில்;!
எரிந்து அனல் பரப்பியது...............!
அதன் அனலில் தகித்து –!
சுதந்திர விளக்குகள் ஒன்றாய் இரண்டாய்!
மூன்றாய் சேர்ந்து – ஒவ்வொன்றாய் கூடி!
மிக ஒய்யாரமாய் ஒட்டுமொத்தமும் எரியத் துவங்கின;!
பரவிய வெளிச்சத்தில் புரிந்தது – நம் வேகத்தை!
எதிராளிதான் வைத்திருக்கிறான் என்று;!
இதோ, இன்று விடுதலைக்கான வெற்றிநெருப்பு!
என் கண்களில் மட்டுமல்ல –!
எல்லோரின் கண்களிலும் மிக நன்றாகவே சுடர்விட்டெரிகிறது!!!
02.!
மானஸ்தி அவள்; தமிழச்சி!
-----------------------------------------!
மண்ணின்!
விடுதலைக்குப் போராடிய!
தமிழச்சியின் நிர்வாணம்!
இணையமெங்கும் ஒளிபரப்பு;!
உயிரிருந்தும் உலவும் நாம் -!
அதை கண்டும் -!
சாகாத; இழி பிறப்பு!!!
மானத்தில் -!
தொட்டால் சுடும் நெருப்பு,!
இழிவாய் -!
பார்த்தாலே பாயும் மின்சாரம்,!
அவள் -!
தாயிற்கும் ஒரு படி மேல் என்று!
இனி புரியும் - சிங்களனுக்கு!!!
அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால்!
ஒன்று பார்த்தவரையெல்லாம்!
எரித்திருப்பாள்,!
அல்லது - தன்னையாவது!
எரித்துக் கொண்டிருப்பாள்!!!
தப்பித் தவறி!
அவள் பிள்ளை இதை!
பார்த்திருந்தால்-!
எத்தனை ராஜபக்ஷேவை அவன்!
கொன்றிருப்பானோ!!!!!!!?!
எம் மண்ணின்; வீரமென்!
தமிழச்சிகள்,!
நாய்கள் கொன்றுவிட்டு தான்!
கொந்தியிருக்கின்றன!!!
ஜென்மம்!
எத்தனை எடுத்தாலும் இனி!
ரத்தத்தின் ஒரு துளியிலாவது!
இருக்கும் -!
அவன் மீதான; அவளின் கோபம்!!
யாரும் சாட்சிக்கு வேண்டாம்!
காற்றும்.. வெளிச்சமும்..!
மண்ணும்.. வானும்..!
மரமும் செடிகளும் -!
பார்த்துக் கொண்டு தானிருந்தன!
அந்தக் கயவர்களை!!!
கடல் தகதகவெனக்!
கொதித்து -!
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;!
அந்த கொடுமைக்கு உடனே!
தண்டனை கொடுப்பதெனில்!!!
யாரோ ஒருவனுக்கு!
துணிவிருந்தால்!
அவள் கையில் ஒரு அரிவாளை!
கொடுத்துவிட்டு சொல் -!
உன்னை இப்படிச் செய்வேனென்று;!
அந்த அரிவாளில் -!
உன்னைப் போல் - அவள்!
நூறு பேரை அறுத்திருப்பாள்!!!
எனக்கு!
மரணத்தை இபொழுதேக் கொடு;!
அதற்கு ஈடாக -!
இணையத்தில் தெரிந்த!
என் தமிழச்சியின் வெற்றுடம்பை!
ஈழ விடுதலையால் போற்று,!
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்

உறக்கமற்றவனின் விடியல்

ப.மதியழகன்
அவனது கிழக்கில்!
கதிரவன் உதிக்காது!
சந்தன மரக்கட்டில் கூட!
முள்படுக்கையாக மாறும்!
அவனது உடலே!
அவனுக்குப் பாரமாகும்!
அந்த நாளில்!
நரகத்தின் நிழல் வீட்டினுள் கவிந்து!
அங்கிருந்த வெளிச்சத்தை விரட்டியடிக்கும்!
கண்கள் ஜீவ ஒளியிழந்து!
தூக்கத்திற்குத் தூண்டில் போடும்!
தாயோ, தாரமோ எவரேனும்!
தனது தலையை மடியில் வைத்து!
கேசத்தை வருடமாட்டார்களா - என!
அவன் மனம் மானிட ஸ்பரிசத்துக்கு!
ஏங்கித் தவிக்கும்!
மரணம்-கடவுளின் அன்புப் பரிசாகவும்!
வாழ்வு-கருணையற்ற கடவுள்!
தனது கொடிய கரங்களால் எழுதிய!
தீர்ப்பாகவும் படும்!
நிமிடங்கள் யுகமாகும்!
போகங்களில் எந்நேரமும் திளைக்கத் தோன்றும்!
விரக்தியின் விளிம்பில்,!
றெக்கை முளைக்காத கூட்டுப்புழுவாய்!
உயிர்வாழ்வதை விட!
மடிந்து மக்கிப்போவதே மேலெனத் தோன்றும்!
கனவுலோகத்தால் கைவிடப்பட்டவனின்!
கற்பனை இப்படிப்போகும் -!
வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு!
மட்டும் தான் இரவுப்பொழுதில் உறக்கம்!
அப்பணத்திற்கு வட்டியாக அளிக்கப்படும்!
என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நேற்று!
செய்தித்தாள்களில் படித்தது போன்ற!
ஞாபகம் எழும்!
தூக்கம் ஒன்றே துக்கம் குறைக்கும்!
இலவச நிவாரணி!
அது கண்களைத் தேடி வந்து!
தழுவாதபோது!
வாழ்வு மகள் பூமாலையுடனும்,!
புன்சிரிப்புடனும் எதிரில் நின்றாலும்...!
அவன் கரங்கள்!
மரண தேவதையை ஆரத்தழுவிக்கொள்ளும்

அந்த இரவு

நடராஜா முரளிதரன், கனடா
இரவின் மீது பிரியமுடன்!
நடந்து செல்லும்!
நாளை நோக்கிக்!
காத்திருக்கும் எனக்கு!
ஒளியை இழந்த!
அந்த இரவினைக் கடப்பது!
என்றும் போல்!
அன்றும் கடினமாயிருந்தது!
சந்திரன் தொலைந்து!
நட்சத்திரங்கள்!
விழுங்கப்பட்ட!
அந்த இரவு!
காற்றில் எழுதப்பட்ட!
வரிகளை!
சுவாசிக்கவும்!
திராணியற்ற!
அந்த இரவு!
காலமெல்லாம்!
கிளர்ந்தெழும்!
காமத்தை!
மறுத்த!
அந்த இரவு!
உறைந்து போய்!
ஒரு வெளியாய்!
திரண்டு போயிருக்கும்!
அந்த இரவு!
எனக்கு வேண்டிய!
சேதிகளைச்!
சொல்ல மறுத்து!
நிற்கிறது

முத்தம்

சந்திரவதனா
அன்பு தேசத்தில் ஒட்டப்பட்ட!
அழகான முத்திரை!
ஆழ்ந்த அன்பைக் கூறும்!
அழகான சொல்!
காதல் தேசத்தின்!
இறுக்கமான கை குலுக்கல்!
அன்பையும் காதலையும் பிழிந்தெடுத்த!
இனிய மது!
ஆயிரமாயிரம் தரம் எழுதியோ!
சொல்லியோ!
புரிய வைக்க முடியாத அன்பை!
ஒரே தரத்தில் உணர வைக்கும்!
உன்னத பரிபாஸை

சில நேரங்களில் சில மனிதர்கள்

லதாமகன்
தோழர் தெய்வநாயகத்தை!
எல்லா மேடையிலும் பார்க்கலாம்.!
நெஞ்சைத் தட்டி கையைத்தூக்கி!
ஆரம்பித்தால்!
நம் மேனேஜர் மேல்!
நமக்கே கோபம் வருமளவு பேசுவார்.!
சிலிக்கான் வேலியில் வேலைகிடத்த!
மகனுடன் இருக்கப்போவதாய் சொல்லி!
அமேரிக்கா கிளம்பும்போது!
பரணிலிருந்த புத்தகங்களை எரித்துவிட்டார்.!
!
பல ஊர் கோயிலுக்கு!
பெயர்வைத்தவர்!
முத்தையா ஸ்தபதி!
வெளிநாட்டுக்கு சிலை கடத்தியதாய்!
மகன் பிடிபட்டதும்தான்!
கடவுள் இல்லை எனச்!
செதுக்கி வைத்துவிட்டு!
சிலை மருந்து தின்று!
செத்துப்போனார்.!
மகனைக்காட்டித் கொடுத்தவர் இவர்தான்!
என்று கூட சிலர் சொன்னார்கள்.!
!
கண்ணாடிக்காரர் தோட்டம்!
மாங்கனிகளுக்கு பெயர்பெற்றது!
கிளி மூக்கிலிருந்து!
மல்கோவாவரை ரகம் ரகமாய் இருக்கும்!
‘செத்தாலும்!
மாமட்டைல எரிச்சுடுங்க மக்கா’!
என கண்ணீர் மல்கிச் சொல்வார்!
மகன் படிப்புக்காக விற்கும்போது!
சிரித்தபடி இருந்தவர்.!
பாதியில் படிப்பைவிட்டுவந்து!
காணாமல் போன மகனை!
கண்ணாடிக்காரர்தான் வெட்டி!
அதே தோட்டத்தில் புதைத்துவிட்டதாய்!
ஊருக்குள் இப்பொழுதும் பேசுவார்கள்.!
!
ஊர்ப்பக்கம் தலைவைக்கமாட்டேனென!
மண்தூற்றிப்போனவர்!
முட்டாய்க்கடை முருகையா.!
ரியல் எஸ்டேட்டில் ஆளாகி!
திரும்பி வந்தபோது!
தான் அவமானப்பட்ட நிலங்களை!
தேடித்தேடி விற்றார் என!
தெரிந்தவர்கள் சொன்னார்கள்.!
!
ஒவ்வொருமுறை தலைசீவியதும்!
கலைத்துவிட்டுக் கொள்வாள்!
அம்சா.!
‘ஒழுங்கா இல்லைனா!
அம்மா தூக்கிக்க மாட்டாங்க’!
என்ற போது!
‘போப்பா ! அம்மாவப்பத்தி!
உனக்கு தெரியாது.!
அவங்க வயித்துக்குள்ள!
இதே ஹேர்ஸ்டைல்லதான்!
பத்து மாசம் இருந்தேன்; என்றாள்!
!
பிறகு ஒரு நாள்!
சந்திக்கையில்!
நான் ‘இன்னொருவனைக்காதலித்தால்!
என்ன செய்வாய்’!
என்று கேட்டாள் கெளரி!
‘இந்த நிமிடமே கிளம்பிப்போய்விடுவேன்’ என்றேன்.!
மறுநாள் சந்திக்கையில்!
‘யாரையும் காதலித்ததில்லை’ என்றாள்.!
காதலிக்கப்போவதில்லை என்று சொல்லியிருக்கலாம்

இருக்கை மனிதர்கள்

ந.அன்புமொழி
பேரூந்தில் பயணம்.!
இவர்கள் !
ஒரு இருக்கை !
சீட்டு வாங்கி !
இரு இருக்கையில் !
அமரும் !
பரந்த மனிதர்கள்.!
இருக்கைக்குரியவன் !
சீட்டோடு வந்தால்,!
அவன் இருக்கையில் !
அவனுக்கே பாதி தரும் !
நவீன வள்ளல்கள். !
இவர்கள் !
நாடுகளின்!
ஆக்கிரமிப்பைக் கண்டு !
கொதித்தெழும்!
மனிதனேயர்கள்.!
இருக்கை!
ஆக்கிரமிப்புகளை!
முறியடிப்பதிலும்,!
இருக்கைகளை!
கைப்பற்றுவதிலும் !
மகா மகா!
அலெக்சாண்டர்கள்.!
மூவர் இருக்கை...!
நடு இருக்கை எனது.!
ஒன்றரை ஒன்றரை !
இருக்கையில் அமர்ந்திருந்த !
அந்த !
இரண்டு மாமனிதர்கள்!
என் உரிமை இருக்கையில் !
கால் பகுதி!
கால் பகுதியென,!
அரை பகுதியை !
விட்டுத்தந்தனர் !
மிகப்பெரிய மனதோடு. !
இருக்கி நெருக்கி !
உட்கார்ந்தேன்,!
உருக்கி ஒட்டவைக்கப்பட்ட !
இரும்பு சட்டங்கள் நடுவில்!
சொருகிய!
பஞ்சாக நான். !
ஆம்!
உறுதியான!
வேண்கலச் சிலைகளாய்!
அவர்கள்.!
நடுவில்!
ஒடுங்கிய!
ஈரக் களிமண் சிலையாய்!
நான்.!
இப்படி அப்படி !
நகரமுடியாதபடி !
தங்களை தாங்களே !
சிலுவையில் !
அறைந்துக் கொண்டு !
சிலுவையிலேயே !
வாழும் !
நவீன இயேசு நாதர்களாய்!
அவர்கள்.!
அடிமைகள்..!
சுதந்திரத் தென்றலை!
நுகராது வாழும்.!
தனக்குத் தானே!
அடிமைகளாய் வாழும்.!
சுய அடிமைகள்.!
!
-ந.அன்புமொழி!
சென்னை