தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

விதையாகும் மரம்

அறிவுநிதி
கவிஆக்கம்: அறிவுநிதி!
இருட்டறையில் வெளிச்சங்களை!
சேகரிக்கிறாய்!
நீண்டு வளர சுருண்டு படுத்திருக்கும் - ஒரு!
காலத்தின் வலிமை!
பூ பூவைத்தருகிறது!
உயிருக்குள் உயிர்நெளியும்!
மொழியற்ற தேசம்!
உன் தடாகத்தை!
நிறைத்திருக்கின்றன!
உனக்கான பாரம்பரியம்!
தன்னை வருத்தி!
உயிர்கக்குகிறாய்!
உனக்கான புன்னகையோடு!
வணங்குவதில்!
முதன்மை நீயே!!
கவிஆக்கம்: அறிவுநிதி!
006590054078

முதல் இரயில் பயணம்

கார்த்திகேயன், கத்தர்
அகவை ஆறிரண்டில் ஆரம்பம்!
ஒரு பக்கம் அகண்ட காவேரி!
மறு பக்கம் தார்ச்சாலை!
வேகமாய் மறைந்தன மின்கம்பங்கள்!
மோதியது காற்று முகத்தின் மீது இனிதாய்!
முழுவதும் காண்பதர்க்குள் மறைந்த சிற்றூர்கள்!
இத்தனையும் ரசிக்க முடியாமல்!
தடுத்தது ......!
ஊரை விட்டு ஒடிவந்த எண்ணங்கள்

காற்றின் மரணம்

சோமா
வல்லிய நரம்பசைவில்!
சேதமுற்று அழும்!
பெருங்குரலில்!
பறையடித்த அதிர்வை!
உள்வாங்கி புடைக்கும்!
காயத்தின் கதறலில்!
சுதந்திரத்தைப் பறித்து!
ஒரு குழலுக்குள்!
அடிமைப்ப‌ட்டு!
அழும் ஆழத்தில்!
பெரும் நுகர்தலின்!
களிப்பில் சாலைக்கரிமக்!
கரைகளைச் செரித்தலில்!
மூச்சுக்குழாய் வ‌ழி!
நுரையீரல் ஆலைசென்று!
முக‌த்தில் க‌ரிம‌த்தைப்!
பூசிக்கொள்கிற‌!
நிமிட‌ங்க‌ளில் ம‌ர‌ண‌த்தின்!
ஓல‌த்தை ஓயாது!
சும‌ந்து கொண்டு!
ப‌ய‌ணிக்கிற‌து காற்று

காதல்

தேவஅபிரா
கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து !
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா !
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது. !
பொய்யெது மெய்யெது !
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா !
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம் !
உன்மார்பிலணைகிறது. !
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி !
முத்தமிட்டுன் சிறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து !
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும் !
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன். !
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில் புதைந்து புதைந்து !
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன். !
மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது. !
ஆடி - 1997 !
தேவஅபிரா puvanendran@home.nl !
************* !
வெளிவர இருக்கும் !
இருண்ட காலத்தில் தொடங்கிய என் !
கனவுகளும் எஞ்சி இருப்பவைகளும் தொகுப்பிலிருந்து . !
இத் தொகுப்பை இலங்கையில் இருக்கும் நிகரி வெளியீட்டகம் வெளியிடவுள்ளது. எனது கவிதைகள் ஏற்கனவே சரிநிகர், மூன்றாவது மனிதன், திண்ணை, விளக்கு, ழகரம், ஒளி, திசை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன

இலக்கியம் படித்த நீ

ஜோதி - த.ஜெயபால்
'ஜோதி' !
!
இலக்கியம் படித்த நீ !
என்னை இலக்கியம் ஆக்காமல் !
தோல்விக்குப் பொருள் கூறும் !
வெறும் அகராதி ஆக்கிவிட்டாயே! !
அன்பே !
நீ கொடுத்த காதல் பரிசுகள் !
இதோ பார் !
மஞ்சத்தில் மதுப்புட்டிகள்! !
இந்த !
இதயப் பிச்சைக்காரனின் அவலப் பாட்டு !
உன் !
இதய மாளிகையில் !
எதிரொலிக்கவே இல்லையா? !
என் எழுதுகோலின் ஒவ்வொரு அசைவிலும் !
ஒரு கலை மாளிகை உருவாகிறது !
என்று கூறிய என் அன்பே_ !
நீ எனக்களித்து விட்டுப் போன !
இந்த !
முகாரி கவிதையையாவது !
கேட்டுவிட்டுப் போ.. !
பறக்கத் தயாராகிவிட்ட மனக்குயிலே !
ஒடிந்த சிறகும் உதிரக் கண்ணீரும் !
ஒழுக நிற்கும் !
இந்த இணைப் பறவை !
உன் கண்களுக்குத் தெரிய வில்லையா? !
காலத்தின் கோலத்தில் !
கருகிப் போகும் ஒரு மலராக !
இந்த கவி உள்ளம் ஆக வேண்டுமா !
உன்னை மன ஊஞ்சலில் !
இருத்தி மகிழந்த என்னை !
மயானத்திற்கு அனுப்ப வேண்டுமா? !
என் இதய சன்னதிக்கு வெடி வைக்கவா !
உன் நாத்திக மனதின்மேல் !
ஆசை வைத்தேன்? !
துயில் சமாதியைக் கூட !
உன் நினைவு நரிகள் விட்டு வைக்கவில்லை. !
நெருஞ்சிமுள் காலில்தான் தைக்கும் !
ஆனால் நீயோ மனதில்- !
வாழ்க்கைப் பள்ளியில் !
'பெண்கள் சிலபஸ்' இருக்கும் வரை !
தோற்பவர்கள் ஆண்கள் தான். !
உயிர்ச் சீதையே !
மண இராவணணைக் கொன்றுவிடு. !
கால இராமனுக்காக காத்திருக்க !
நீ கல் அல்ல... !
'ஜோதி' !
த.ஜெயபால்.எம்.ஏ.பி.ஜி.எல்.,டி.எச்.பி.எம் !
1258-16 வது தெரு,பூம்புகார் நகர்,சென்னை-600 099

எண்ணித் துணிக

புஸ்பா கிறிஸ்ரி
சிந்திக்க மறந்த காரணத்தால்,!
சிந்திக்காது விட்டு,!
நொந்து நு£லாகி!
வெந்து வேலாகி!
கந்தலாகி!
கடமை மறந்து,!
உம் வாழ்வை!
துன்பத்திடம் கடன் தந்து!
துயரத்தில் மூழ்கிய!
சோதரனே ! சோதா¤யே !!
எண்ணிப் பாருங்கள்!
வள்ளுவன் சொல்லை!
எண்ணித் துணிக கருமம்...!
என்னும் எழுச்சி மிகு!
கருத்தை மனதிற்கொண்டு!
எண்ணித் துணிந்திடுவீர்!
இனியேனும்!
சிந்தித்து நடந்திடுவீர்

பங்குனி

றஞ்சினி
நான் அவன் !
நானாக அவனும் அவனாக நானும் !
சாத்தியமில்லை !
எனது சந்தோசங்கள் அவனது சந்தேகங்கள் !
எனது ஆசைகள் அவன் கற்பனை செய்யாதவை !
அவனது ஆசைகள் என்னை அடிமை கொள்பவை !
எனது கற்பனைகள் அவனுக்கு புரியாதது !
அவனது கற்பனைகள் அலுத்துப்போனவை !
எனது நோக்கு அவனுக்கு புதியது !
அவனது நோக்கு எனக்கு பழயது !
அவன் வளர்ந்தும் ................ நான்............ !
நான் குழந்தை அவன் !
நான் அவனாவதும் அவன் நானாவதும் சாத்தியமே இல்லை !
நான் நான் அவன் அவன் !

நானொரு காகமாகி

அசரீரி
துணையின்றித் தனித்தலையும்!
தேசாந்திரித்தனத்துடன்!
காற்றில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன்!
என்ன பாரந்தான் நான் என்பதன் புதிர்!
என்னில் அவிழ்ந்து!
சிறகை முளைப்பிக்கிறது தோள்களில்!
சூரியன் அது!
காகமாகிய என் வானத்திலும்!
ஒன்று தெரிகிறது இப்போது!
பறித்த பின் துரத்திவிடப்பட்ட என்!
வயலுக்குள்ளும்!
புத்தகங்களுக்குள்ளும் தனித்து!
பட்டுப் போய் நிற்கின்ற மரத்தின் மீது!
பறந்து போய் நிற்கக் கனவு கண்ட ஓர் பகலில்!
சூரிய நிழலின் கறுப்போடு கறுப்பாக!
காகமாகிய நானும் போய்வரத் தலைப்பட்டேன்.!
ஊரின் எல்லையில் வைத்தே!
என் வாலில் நெருப்புப் பிடித்தது!
எரிவோடும்!
மூலத்திலிருந்து சொட்டத் தொடங்கிய!
ஒழுக்குகளோடும்!
காற்றை இழுத்துப் பிடித்துக் கொண்டபடி!
வெகுதூரம் மிக வெகுதூரம் வந்துவிட்ட நம்பிக்கையுடன்!
திரும்பிப் பார்க்கிறேன்!
உள்ளுர்ப் பத்திரிகையொன்றின்!
பாராட்டுக் கவிதை வரிகள் போல கிடக்கிற!
என்னைப் பார்த்து!
பரிதாபமாய்ச் சிரிக்கிறது காலம்!
ஊரின் எல்லைக்குள் வைத்தே

யாருக்கும் வெட்கமில்லை

சத்தி சக்திதாசன்
சத்தி சக்திதாசன் !
உண்பதற்கு உணவில்லை !
உடுப்பதற்கு உடையில்லை !
உள்ளத்திலே அன்பில்லை !
உதட்டினிலே உண்மையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
படுப்பதற்கு பாயில்லை !
பழக ஒரு நண்பனில்லை !
பணத்திற்குப் பாசமில்லை !
பாபத்திற்கும் குறைவில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
தேவைகற்கு அளவில்லை !
தேடல்களில் பொருளில்லை !
தௌ¤வான கொள்கையில்லை !
தெரிந்து கொள்ள ஆசையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
நீதிக்கு வெற்றியில்லை !
நேர்மைக்கு மதிப்புமில்லை !
நேற்றைகளை பார்ப்பதில்லை !
நாளைகளில் அர்த்தமில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
கண்களில் கருணையில்லை !
கடமைகளில் ஆர்வமில்லை !
காதலிலே தூய்மையில்லை !
கடைசிவரை பொறுமையில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை !
யாருக்கும் வெட்கமில்லை !
யாவையுமே தனதுமில்லை !
யாரையுமே நம்பவில்லை !
யாருமே உறவுமில்லை - ஆனால் !
யாருக்கும் வெட்கமில்லை

நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்

நிந்தவூர் ஷிப்லி
எது குறித்த அக்கறையுமின்றி நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்!
என்னை வாழச்சொல்லிச் சபிக்கும்!
காலப்பெருந்துயர நிழலில் மூர்ச்சையற்றுக்கிடக்கிறேன்!
நூற்றாண்டுகள் தாண்டிய இருள்வெளியாய்..!
நகரும் கணங்களின் மிக நிதான திசைகளில்!
எதிரொலிக்கும் என் மௌனக்கதறல்கள்!
துரிதகதியில் காற்றைப்பற்றிக்கொண்டே!
திசைகளை நிரப்புகின்றன..!
நீயும் நானும்!
துரத்தும் மரணக்கால்களின்!
சுவடுகளை அண்மித்தபடி துயரக்கவிதைகளை பாடிக்கொண்டிருக்கிறோம்..!
ஓப்பாரி ராகங்கள் நமது மூங்கில் துளைவழியே!
கசிவது கண்டு வழிப்போக்கர்கள் நம்மை ஏளனிப்பது!
எத்தனை விநோதமானது பார்…!
செல்லும் வழிப்பயணங்களெல்லாம் முடிவிடம் தொடுமென்ற!
அசட்டு நம்பிக்கையில் அவ்வப்போது தீ விழும் துயரம்!
உனக்குமா நிமழ்ந்தேறுகிறது..???!
எது குறித்த அக்கறையுமின்றி நதியென நகரும் வாழ்க்கைப்பயணம்!
எந்தப்புள்ளியிலாவது சந்திக்கலாம்!
இல்லையேல் சந்திக்க முடியாமலே புள்ளிகளாய்த்தொலையலாம்!
அவளும் நானும் பிரிந்தது போலவே!
நீயும் நானும்…