தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

அதற்குப் பிறகு

அ. விஜயபாரதி
கைகளுக்ககப்படும்!
இறகுகளைச் சேகரிக்கிறேன்!
ஒவ்வொன்றிலும் தன்னினத்தின்!
பெயரை மட்டும் எழுதிவைத்திருக்கிறது!
அதில் அநேகமானவைகளை!
இனம் பிரித்தறிய முடிவதில்லை!
வெளியின் விசாலம் குறித்து!
அவை ஒருபோதும்!
அறைச் சுவர்களோடு பகிர்வதில்லை!
சிறகுகளிலிருக்கும் வரையில்!
காற்றை வலித்து!
திசைகளின் கூடடைகிறது!
இலைகளைப் போலல்லாமல்!
உதிர்ந்த பிறகும்!
பறக்கத் தெரிகிறது!
இறகுகளுக்கு மட்டும்.!
!
அ. விஜயபாரதி

யாதுமூரே

வை. அண்ணாஸாமி
யாதும் ஊரே யாவரும் கேளீரென!
ஓதிய உத்தமர் ஒருங்கே நின்றிட,!
தீதிலா தமிழில் நானும் கலந்தேன்.!
புதிய கவிதை ஒன்றை புனைந்தேன்.!
ஆர்வம் அன்போடு என்னை அழைக்க,!
தீராக் காதல் கொண்டேன் மொழிமேல்;!
பாரினில் கவிஞனென போர்வையோடு நானும்!
தேர்வில் வெற்றி உறுதி கொள்வேன்

புரிந்தால் சொல்வீர்களா?

சத்தி சக்திதாசன்
எனக்குள்ளே!
என்னைப் பரப்பி!
அதற்குள்ளே!
அதனைத் தேடி!
எதற்காக இத்தனை!
ஏக்கம்?!
விடைகாணா!
வினாக்களின் முழக்கம்!
நினவாலே இசைத்திடும்!
சங்கீதம்!
கனவோடு கலந்திடும்!
சிலநேரம்!
முடிவோடு தொடக்கம்!
முடியாமல்!
ப்கலோடு இரவாகத்!
தெரியாமல்!
இது என்ன மாற்றம்?!
இதுதானா சீற்றம் ?!
தெரியாத ஊருக்கு ஏனோ!
புரியாத பயணம்!
புலராத் பொழுதொன்றில்!
முடியாத கனவு!
சுகமான சுமைகளை!
சுமந்திடும் தோள்கள்!
கனக்கின்ற எடைகளை!
களைகின்ற மேடை!
சொல்லொன்று தீட்டிய!
ஓவியத்தை!
கண்ணில்லா மனிதனிடம்!
காட்டிய நேரம்

வெற்றியின் ஸ்பரிசம்

லலிதாசுந்தர்
தோல்விகள் முற்றுப்புள்ளிகள் அல்ல - அவை!
வெற்றியின் ரம்பபுள்ளிகள்!
தோல்விகள் தடைகற்கள் அல்ல - அவை!
உன் மனதை எடைபோடும் எடைகற்கள்!
தோல்விகள் நெரிஞ்சில் முட்கள் அல்ல - அவை!
உன் தன்னம்பிக்கையையும் முயற்சியையும்!
அளக்கும் தராசு முட்கள்.!
தோல்விகள் சுனாமிகள் அல்ல!
வாழ்க்கையை புரட்டிப்போட - அவை!
உனை வெற்றியை நோக்கி !
ஓடவைக்கும் சுகமான வலிகள்.!
பூக்களின் வலி!
விதைகளின் வெற்றி.!
வேர்களின் ஊடுருவல் வலி !
கிளைகளின் வெற்றி.!
குளிர்மேகங்களின் வலி!
மழையின் வெற்றி.!
உளிகளின் செதுக்கல் வலி!
சிற்பங்களின் வெற்றி.!
தோல்வியின் வலியே!
இந்த வெற்றியின் ஸ்பரிசம்.!
- லலிதாசுந்தர்

யார் கொடியவர்கள்?.. காத்திருக்கின்றது

தேவி
01.!
யார் கொடியவர்கள்?!
---------------------------!
பெண்ணாக பிறந்து !
பெண்ணை விரும்ப வைத்த !
இயற்கையின் கொடுமை !
எதற்கு எனக்கு?!
எல்லாவற்றையும் !
இலகுவில் மறக்கலாம் !
என்று கூறுபவர், !
நிலை உணர்ந்து தான் !
இப்படி கூறுகிறார்களா?!
இவர்கள் இயற்கையை !
விட கொடியவர்களாயிற்றே!!
அப்படி தான் நினைத்தேன் !
ஒரு பொழுது! - ஆனால் !
விரும்பியவளின் !
அன்பே கிடைக்காத போது, !
அந்த காதலை வேறு வழியின்றி !
கைவிட வேண்டிய நிலை!
மட்டும் எம்மாத்திரம் !!
இப்போது !
யார் தான் கொடியவர்கள்?!
02.!
காத்திருக்கின்றது..!
------------------------!
உன் விழிகளில் !
இனம் தெரியாத மின்னல் கண்டு !
என் கண்கள் கூசாதா?!
இவ்வுலகில் தொலைந்து நிற்கின்ற எனதுயிரின் ஆத்மா !
என் கண்களினூடு எட்டிப் பார்த்து உன் அன்பை தேடுகிறது!
ஓ! என அழுகிறது ஜீவாத்மா. எடுத்துறைப்பதற்க்கு !
வார்த்தைகள் இன்றி தவிக்கிறது.!
இருந்தும், !
இந்த உயிர் கொண்ட உடலால் !
ஆத்மாவின் கீதத்தை இசைத்து !
உன்னிடம் தஞ்சம் புகுகிறது.!
வாழ்வின் எல்லையில் !
உன் ஆத்மாவோடு !
என் ஆத்மா சேர்ந்து கரைய காத்திருக்கிறது

வருந்தாதே கடலே

ரவி (சுவிஸ்)
வருந்தாதே கடலே !
உன் அடிமடி பிளந்து !
வெளிப்பிரசவமாகிய சுனாமிப் பயங்கரம் உன் !
முதுகுமீதேறி அதிசவாரிசெய்தது. !
நாம் அறிவோம் !
வருந்தாதே கடலே !
நீர்திருகி அலைதிரட்டி எம் வாழ்வின் !
குரல்வளைவரை தாக்கியது. !
உயிரோடு நீருள் புதையுண்டனர் மனிதர்கள் !
சிதைவுகளுள் சொருகுண்டனர் !
தப்பிப் பிழைத்தவர்கள் உறவறுந்துபோயினர். !
கதறினர் நினைவுகளை வீசி !
அவர்தம் வரவை கேள்விக்குறிகளால் !
வரைந்து தள்ளினர். !
வலிதாங்க முடியவில்லை. !
எங்கள் குழந்தைகளும் சேர்ந்தே !
காணாமல் போயினர், காவுபோயினர். !
மரணம் எம் மனிதர்களை !
உனது மடியில்வைத்து !
உயிர்கோதி உறங்கச் செய்த கதை !
சொல்லிமாளா. !
வலிதாங்க முடியவில்லை. !
நீ மண்ணோடு பிணைந்ததனால் நாம் !
உன்னோடு பிணைந்தோம் பார். !
வாழ்வளித்து வாழ்வளித்து !
சலிப்படையா மனசுனக்கு. !
நீ அளித்த வாழ்வின் பலிபீடம் !
உன் பரப்பில் நாட்டப்பட்டிருந்ததுதான் !
இன்னும் துயர் தருகிறது. !
வலிதாங்க முடியவில்லை. !
கடலே, !
உனை தழுவி எழும் காற்றுக்குச் !
சொல்லிவிடு - வீழ்ந்த எம் வாழ்வை !
சிலிர்ப்பிவிடு என. !
எஞ்சிய எம் மனிதர்களை !
நோய் பசி எடுப்பெடுத்து !
மரணமேடைக்கு அழைத்துச் சென்றுவிடாதே !
என்றேனும் சொல்லிவிடு. !
வலிதாங்க முடியவில்லை. !
ஏவியவன் இருக்க அம்பை நொந்தென்ன. !
வருந்தாதே கடலே !
உன்மீது வலைவிரித்து !
அவர்கள் தம் வாழ்வைப் படர !
மீண்டும் வருவர். !
நிலாச் சந்திப்பொன்றில் !
காதலர்கள் ஒளிவீசி உன் !
மணலில் புரண்டெழுவர். !
ஓயாது நீ பாறைகளில் !
மோதுமோர் உயிர்ப்பொழுதில் !
துயர்கரைத்து !
இலேசாகிப்போக நான் வருவேன். !
ஓயாது மண்நுகரும் உன் !
அலைநுனியின் குறும்பினில் எம் !
குழந்தைகள் மகிழ்வெடுப்பர். !
அளைந்து அளைந்து !
அழிவினதும் ஆக்கத்தினதும் புள்ளிகளில் !
நம்பிக்கைகளை சலிப்பின்றி வரைவர். !
வருந்தாதே கடலே, நீ !
வருந்தாதே! !
- ரவி (சுவிஸ்)

ஆடுகளம்

த.சரீஷ்
மாறாத சுவடுகளாக!
அங்கும்!
இங்கும்!
சிலசமயங்களில்!
மறக்கமுடியாமல் அகலவிரிந்தாடும்!
துயரங்களாக...!
ஆட்டங்கள் தொடர்கின்றன...!!
அடுத்தது என்ன...?!
என்ற கேள்விக்குறியோடு!
அவர்களின்!
ஆட்டத்தின் போது!
எங்களுக்கு...!
ஏக்கங்கள் கலந்த!
வழமையான காத்திருப்புகள்!
வளர்ந்துகொண்டே செல்கின்றது.!
வீரம்கொண்ட உலக நாடுகளின்!
விளையாட்டு!
சிலவேளைகளில்!
விளையாட்டுத்தனமாகவும்!
பலவேளைகளில்!
கவலைக்குரிய விடயமாகவும்!
ஆட்டங்கள் தொடர்கின்றன...!!
இப்போது நாங்கள்!
நினைப்பதெல்லாம்!
இனி...!
ஆடுகளம் எது என்பதும்!
நடுவர்கள் யார் என்பதும்தான்!
எதிரணியில்!
ஆட்டக்காரர்கள் யார் என்பதில்!
எமக்கு எப்போம்!
சந்தேகம் உண்டாவதே இல்லை...!!
இன்றைய ஆட்டம்!
நல்ல விறுவிறுப்பு என்று!
சொல்லிக்கொண்டே!
தொடர்ந்தும்!
அவன் அதே...!
உலகக்கிண்ண உதைபந்தாட்டம் பற்றி!
பேசிக்கொண்டிருக்கின்றான்.!
நான்...!
மனிதர்களால் ஒருபோதும் ஆடமுடியாத!
மகிந்தரின் சிந்தனைப்படி...!
வங்காலையிலும்!
அல்லைப்பிட்டியிலும் ஆடிய!
அந்த ஆட்டம் பற்றி!
சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்...!!
த.சரீஷ்!
20.06.2006 பாரீஸ்

ஏமாற்றம்

அனாமிகா பிரித்திமா
வீட்டின் அழைப்புமணி அடித்தது...!
மானாய் துள்ளி ஓடினேன்...!
அது நீங்களாய் இருப்பீர்கள் என்று...!
இம்முறையும் இல்லை... !
ஏமாற்றம்...!
தொலைபேசி மணி அழைத்தது...!
மூச்சிரைக்க ஓடி எடுப்பேன்...!
அந்த அழைப்பு தங்களின்...!
சிம்மக் குரலை சுமந்து வரும் என்று...!
இம்முறையும் இல்லை... !
ஏமாற்றம்...!
தபால் என்றவுடன்...!
தலை தெறிக்க ஓடுகிறேன்...!
தங்கள் முத்தான கடிதம்...!
என் கையில் தவழும் என...!
இம்முறையும் இல்லை... !
ஏமாற்றம்...!
இதை ஒவ்வொரு...!
முறையும் செய்கிறேன்...!
என்றாவது ஒரு நாள்...!
என் ஏமாற்றத்திற்கு...!
முற்றுப்புள்ளி...!
வரும் என்று...!
........?!
!
-அனாமிகா பிரித்திமா

நட்பின் வலி

தமிழ் ராஜா
காலங்கள் செல்லும் வழி!
என் காலோடு நான் செல்கையிலே!
வீதி மட்டும் வந்த உன் நட்பு!
என் விழியை நனைத்துப் போகையிலே!
கால் வலியும் தெரியலையே!
கன்னி உந்தன் நினைவினிலே!
முகம் சிவக்க சிரித்தநாட்கள்!
என் ஆயுள் முழுதும்!
என் நெஞ்சினிலே!
பழுகும் பொழுதும் படித்த!
உன் மனது!
பிரியும் பொழுதும்!
நெஞ்சம் மறக்கலையே!
பாசமென்றோ! நேசமென்றோ!!
பல பெயர் சொல்லலாம்!
ஆனால் நட்பொன்றே!
நம் உறவை அழகாகச் !
சொல்லும் வார்த்தை! இல்லை, வாசகம்!!
உன் பந்தம் எனக்கு!
ரத்த பந்த மின்றி ஒரு!
சகோதிரியையே நினைவுப்படுத்துகிறது!
சகோதிரியிடமும் நட்பையே நினைவுப்படுத்துகிறது!
பழைமை கொண்ட நம் நட்பில்!
உரிமையான உணர்வுகள்!
சில காலம் !
ஊஞ்சலாடியது உலக அனுபவம்!
எனக்கு...!
நட்பின் வலியை உணர்ந்தேன்...!
அந்த வலியும்!
நெஞ்சில் சுகமாகவே இருக்கு!
காலங்கள் செல்லும் வழி!
என் காலோடு நான் செல்கையிலே... !
!
--தமிழ்ராஜா

சரியான பிணம்

கே.பாலமுருகன்
“சரியான பிணம்”!
------------------!
அவன்!
நடந்து வருகிறான்!!
“பிணம்” என்று !
சிலர் பிதற்றுக்கிறார்கள்!!
அவனுடைய கண்கள்!
பிணமாகியிருந்தன!!
“பொணம் போது பாரு”!
கல்லெறிந்தார்கள் சிலர்!
விளையாட்டாக!!
அவன் !
பிணமாகியிருந்தான்!!
பிணமாகவே நடந்தான்!!
அருகிலுள்ளவர்களின் கூச்சல்!
விகாரமடைந்து!
பயங்கர முகங்களாக!
மாறியிருந்தன!!
எல்லோரும்!
பிணத்தைக் கண்டு!
வெறுக்கிறார்கள்!!
எல்லோரும்!
பிணங்களைப் பற்றி!
பேசுகிறார்கள்!!
எல்லோரும்!
பிணங்களை அடையாளம் !
காட்டுகிறார்கள்!!
பிணங்களை!
உருவாக்கும்!
இவர்களின் பிடியிலிருந்து!
விலகி!
வேகமாகப் பின்தொடர்கிறேன்!
அந்தப் பிணம்!
என்கிற மனிதனை!!
‘அவன் சரியான பிணம்’!
என்று கதறும்!
ஓசைகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன!!
கே.பாலமுருகன்!
மலேசியா