மீண்டும் உன் மடி - பாரதி ஜேர்மனி

Photo by engin akyurt on Unsplash

இடர்கள் வந்து சூழ்ந்தபோதும் !
மிடியில் நானும் வீழ்ந்த போதும் !
மிதந்த விழிநீர் வழிந்த போதும் !
மிஞ்சும் வார்த்தை அம்மா தானே !
அன்பு என்னும் தளையிட்டு !
அகிலத்தையே அரவணைக்கும் !
தாய்மை என்னும் தெய்வீகத்தால் !
தவமாய்க் கிடைத்த என் தாயே !
சேயாய் பிறந்து மண்மீது !
மீண்டும் உந்தன் மடி தவழ்ந்து !
து£ய்மையான உன் அன்பில் !
துளிர்த்து வளர வரம் கேட்பேன் !
மீளாத்துயிலில் நான் ஆளும்போதும் !
மீண்டும் உன் மடி உறங்கும் குழந்தையாய் !
!
பாரதி ஜேர்மனி
பாரதி ஜேர்மனி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.