தெருக்களில் சுற்றும்!
ஐஸ் பழ ஹோன்களை!
சில்லறைகளோடு துரத்தும்!
ஒரு இறந்தகாலம்.........!!
முட்டாசி கலர் பழத்துக்கு!
முண்டியடித்து!
ஒழுக ஒழுக மல்லுகட்டி!
தின்றதும் திங்காததுமாய்!
கடைசியில் காம்பிலிருந்து கழன்று!
மண்ணில் விழும்...!!
ஒரு கோடி துயர் விதைத்து......!
வாழ்வும் அப்படித்தான்......!!!
குச்சியில் எஞ்சியிருக்கும்!
பச்சை தண்ணி பழம் மாதிரி!
ஏதுமற்று கிடக்கும்...!
எப்போதோ!
விழுந்து விடுமோவென்ற பயங்களோடு
அக்மல் ஜஹான்