அந்தரங்கம் - செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி

Photo by Sajad Nori on Unsplash

இருவர் பேசிக்கொண்டிருந்த!
இடத்தருகே!
எதேச்சையாய் போய் நின்றேன்.!
அப்படியே பேச்சு நின்று!
அமல்படுத்தப்பட்டது அமைதி.!
!
இன்னொருவனுக்கு!
அனுமதியில்லாத!
இருவரின் அந்தரங்கத்தின்!
இடையே புகுந்ததறிந்து!
வெறுமே சிரித்துவைத்தேன்!
வேறெதுவும் தோன்றாமல்.!
-செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
செல்வராஜ் ஜெகதீசன் - அபுதாபி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.