தமிழ்பேசும் மனிதஜந்து!..பே(தா)ய்நாடு!!!.. பசி...!
01.!
தமிழ்பேசும் மனிதஜந்து!!
--------------------------!
குடிநீர் வராவிட்டாலும்!
குடிநீர் வரி...!
தொடர் மின்சாரத்தடை என்றாலும்!
மின்சார வரி...!
வாடகைவீடு என்றாலும்!
வீட்டுவரி...!
விலைவாசி ஏற்றத்தோடு!
போராடும் அளவுக்கு!
வருமானமில்லை என்றாலும்!
வருமானவரி...!
இருசக்கர வாகன!
எரிபொருளின் விலைமட்டும்!
உயர்வதைச் சமாளிக்க முடியாமல்!
அவசரத்தேவைக்குமட்டும் பயன்படுத்த!
சாலைவரி...!
வறண்ட விவசாயவயல்மட்டுமே!
சொத்து என்றாலும்!
சொத்துவரி...!
என வரிப்பணத்தையே!
இலவசத் திட்டங்களாக்கி!
சமுதாயத்தொண்டு!
செய்வதாகச் சொல்லிக்கொண்டு!
வாக்கு வங்கிகளை!
பலப்படுத்தும்!
ஊழல் ‘அம்மா’க்களையும்!
பெருச்சாளி ‘ஐயா’க்களையும்!
குண்டு வைத்துக் கொல்லத்!
துணிவில்லாத கோழைகளாய்!
தமிழகத்தில் வாழும்!
தமிழ்பேசும் மனிதஜந்துக்களில்!
நானும் ஒருவன்!!!!!
!
02.!
பே(தா)ய்நாடு!!!!
-------------------!
பணக்காரர்கள் பயன்படுத்தத்!
தேவையே இல்லாத!
பேருந்துகளை!
அன்றாடம் பயன்படுத்துபவர்கள்!
ஏழைஎளியவர்களும்!
வசதி குறைந்த!
நடுத்தர வர்க்கத்தினரும்!
மட்டுமே..!!!
இருக்கைகள் கிடைக்காவிட்டாலும்!
இருகைகளின் உதவியோடு!
நின்றபடியே பயணித்து!
சேருமிடம் செல்லநினைக்கும்!
அன்றாடங்காய்ச்சி எவனும்!
சொகுசுப்பேருந்துகளையோ!
குளிர்சாதனப்பேருந்துகளையோ!
எதிர்பார்க்காத சூழலிலும்!
உலக வரலாற்றிலேயே!
பயணச்சீட்டுகளின் மூலம்!
பகல்கொள்ளையடிக்கும்!
வணிக(நிர்வாக)த்திறமை கொண்ட!
போக்குவரத்துக்கழகம் அமைந்த!
பெருமைமிக்க(?????????????)!
எங்கள் பே(தா)ய்நாடு!
இந்தியா தான்!!!!!!
03.!
பசி...!
-------------!
விளைநிலங்களெல்லாம்!
விலைநிலங்களாகிப் போனதால்!
சுவரொட்டிகளைக்!
கிழித்துத் தின்று!
பசியாறிக் கொள்கின்றன!
எங்கள்ஊர்ப் பசுக்கள்
முனைவென்றி நா சுரேஷ்குமார்