தாயின் மணிக்கொடிகள்!
வல்வை சுஜேன்
ஏட்டில் எழுதவில்லை - என் !
சிந்தனையில் செதுக்கவில்லை !
கண்டேன் என் தாயகத்தில் !
தமிழ்த் தாயின் மணிக்கொடிகளை!
குடியுரிமை வாழ்விளந்து!
குலம் தழைக்கும் நிளல் இளந்து!
முடமாய் ஜடமாய்!
இறைமைக்கும் இருள் கொடுத்து!
நடைப் பிணமாய் கிடந்தவர் இடையே!
தமிழ் குல தலைமுறை விடியலுக்காய்!
உங்கள் இன்னுயிரை ஈர்ந்தவர் நீங்கள்!
புலியாய், கரும் புலியாய், !
கடல் புலியாய் வான் புலியாய் !
வியூகச் சமர் புரிந்து !
வைர உயிர்களை!
தாய் மண்ணுக்கு தந்த !
மாவீர மறவர்களே!
உங்கள் ஆலயச் சந்நிதியில் !
உறவுகள் வந்துள்ளோம்!
களம் ஆடி களம் ஆடி !
தமிழீழ எல்லை வகுத்த உறவுகளே !
உங்கள் உதிரம் அதில் பாத்தி கட்டி!
விடுதலை பயிர் வளர்த்தவர் நீங்கள்!
உரம் ஏறி உரம் ஏறி தவம் இருக்கும் !
தாய் மண்ணெடுத்து நெற்றித் திலகம் இட்டு !
நிமிர்த்துகிறது எம்மை உங்கள் திருமுகம்!
!
விடியும் நாளை விடியும் ஓர் நாள்ளென!
தமிழீழ விடிவையும் கண்டோம் !
உயிர் கொடை ஈர்ந்த !
உத்தமர் உங்கள் தீரத்தில்!
குறு நிலமும் ஆண்டு !
குருசேத்திரமும் தந்தான் !
தேசியத் தலைமகன் பிரபாகரன் !
தமிழ் தேசிய விடுதலை ஒளி முகத்தில்!
அகிலமே திரண்டு அழித்தாலும் !
வஞ்சனை நண்பர்கள் நஞ்சினை கலந்து !
வெண் சிறை இட்டாலும், அணையுமா ?!
அணையாது அணையாது இந்த ஒளி !
வெண் சங்கின் நாத ஒலி கேக்கின்றது!
அழைப்பாணை விடுத்து!
போர் முரசும் கொட்டுகின்றது!
உங்கள் நினைவாலயம் தனில் நின்று!
உமை தொழுகின்ற விழிகளிலே !
ரெத்த நாளங்கள் வெடித்து!
சுதந்திர வர்ணம் தீட்டி !
தமிழீழத் தாய் மண்ணை தொடுகின்றது!
சுதந்திர நாத்துக்கள் சுயம்புகளாய் எழும் எழும் !
தன் மானக்குடை விரித்தே !
தமிழீழத் தாகம் தணித்திட பகை அறுக்கும்!
தளிர்விரல் பாதங்கள் தாயகம் தழுவும்வரை!
இமையச் சுவரும் இவரிடம் சிறிதே!
கண்டேன் தாயின் மணிக் கொடிகளை !
என் தாயகத் தமிழ் மண்ணில்