தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பூக்களை மட்டுமே யாசிக்கிறது

அக்மல் ஜஹான்
பூக்களை பரிசளிக்கிறது!
வாழ்க்கை..!
சிலநேரம்!
பூக்களை பறித்தெடுக்கிறது!
பதறப் பதற..!
விதைகளாய் விழுந்து !
பூக்களாய் மலர்கிறது !
சொல்லாமல் கொள்ளாமல்...!
புயலுமின்றி !
மழையுமின்றி!
மரங்களை சாய்த்து!
மண்ணோடு மண்ணாக்குகிறது!
நந்தவனத்தின் கனவுகளை..!
என்றோ ஓர் நாள்!
எல்லாப்பூக்களும்!
உதிர்ந்து விழும்..!
ஒரு கோடி துயர் விதைத்து..!!
என்றாலும்!
பூக்களை மட்டுமே யாசிக்கிறது..!
எப்போதும்!
ஆசைப்பட மட்டுமே!
பழகிப்போன!
மனசு

மனைவி பற்றிய கவிதைகளில்

நாவிஷ் செந்தில்குமார்
நாய் பற்றிய!
கவிதையைப் படிக்கிறபோது!
எனக்குப் பிடித்த மாதிரியாக!
நாயொன்றை!
உருவகப்படுத்திக்கொள்கிறேன்...!
இவ்வாறே பிற!
கவிதைகளை வாசிக்கிற போதும்!
அவையொத்த பிம்பம்!
மனவெளியில்!
மிதந்து செல்கிறது!
'இந்தச் சாயல்!
இன்னொருவன் மனைவியுடையதாக!
இருக்கக் கூடுமோ?'!
என்ற கேள்வியால்!
மனது லயிப்பதில்லை!
மனைவி பற்றிய கவிதைகளில்

பௌர்ணமி

நாவிஷ் செந்தில்குமார்
அமாவாசை அன்று!
இறந்துபோன!
நிலாவின் உடல்!
பதினைந்து நாட்கள் கழித்து!
ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள!
கோயில் குளத்தில்!
மிதக்கிறது

தாய்மை

நாவிஷ் செந்தில்குமார்
நீண்ட நேரமாகத்!
துணி வாங்கும் தாயின்!
முந்தானையைப் பற்றி!
கதறி அழும் குழந்தையின்!
குரல் கேட்டு!
பொம்மையொன்றின் மார்பில்!
பால் சுரக்கிறது!!

பசி

நாவிஷ் செந்தில்குமார்
பொரி போடுவதற்குப் பதிலாக!
குளத்தைச் சுற்றிய!
கழுகொன்றிற்கு!
என் தொடை மாமிசம்!
கொடுத்திருந்தால்!
இன்னும் சில நாட்களுக்கு!
வாழ்ந்திருக்குமோ!
மீன்கள்?!

காதல் சுடுமென்று...

எட்வின் பிரிட்டோ
வாழ்க்கை இனிமைதான்,
காதலிக்கத் தெரிந்தவர்க்கு.

வேலைக்குப் பிறகுதான் மாலையென்று
விலைப் பேசாதே உன் வாலிபத்தை
வாழ வா என்னுடன்

உன் வெற்றித் தோல்விச் சொல்ல
ஒரு நேசம் தேவையில்லையா உனக்கு?
நீ குடும்பத்தை தூக்கி நிறுத்த
நானுமோர் தூணாக மாட்டேனா?

பூக்களை நேசிக்கத் தெரியாதவனால்,
புவியாள முடியாது,
புரியவில்லையா உனக்கு?

மொட்டு வெடிக்கும் ஓசையை உணரா
வண்டு பரிணாமத்தின் பிறழ்ச்சி.

காதலில்லாமல் போயிருந்தால்
கலாச்சார சுவடுகளின்
நிறையப் பக்கங்கள் நிரப்பப்
படாமலேயேப் போயிருக்கும்

பரஸ்பர பறிமாறல்களை
வணிகவியலில் வகைப்படுத்தி
ஆங்கோர் இதயத்திற்கு இடமில்லையெனும்
வயதாகிப் போன வாலிபர்களை
விலகி நிற்கச் சொல்

காதலினால் மானுடற்கு
கவிதையுண்டாம்;
கானமுண்டாம்;
சிற்ப முதற் கலைகளுண்டாம்
ஆதலினால் இப்படி வா மானிடனே...
காதல் செய்வோம்.
வாழ்விற்க்கினிமைத் தானேச் சேரும்.

மௌனித்ததாலே

பாண்டித்துரை
மௌனமான நானும்!
மௌனமான நீயும் !
மௌனித்ததாலே...!
உனதான திருமணமும் !
எனதான திருமணமும்!
சொல்லிக் கொள்ளாமல் !
நடந்தேறியது !

விட்டுத்தர விரும்புவதில்லை

பாண்டித்துரை
சில நேரங்களில் !
யாருக்காகவும் என்னை!
விட்டுத்தர விரும்புவதில்லை!
என் தனிமையையும்!
அதன் மீதான அழுகையையும்!
இரவிற்கு அப்பாலும்... !

எனக்கான விடியல்

பாண்டித்துரை
இமைகளைத் திறக்கிறேன்!
வெளிச்சப் பிரவாகம்!
முழுமையாக ஆக்கிரமிக்கிறது!
என் கண்களிலிருந்து ஆரம்பமாகிறது!
எனக்கான விடியல்! !

மௌனம்!

பாண்டித்துரை
யாருமற்ற வெளி!
பார்த்துக் கொண்டிருக்கும்!
நிசப்தம்!!
பேசத்துடிக்கும் வாய்!
நிலைகுத்திய!
விழிகளுடன்!
தனிமை!
தகர்ந்திடும் போது!
ஏதோ நிகழ்வதாய்!
மௌனம் எனக்கு!
பயத்தையே தருகிறது!