இருண்டே !
கிடந்ததென் உலகம்!
உன்னைக் காணும் வரை !
வெளிநாடு இல்லையென்றும்!
வீண்வேலை எழுத்தென்றும்!
கை பத்தா சம்பளமும்!
கால்நீட்டத் !
தலைமுட்டும் வீடென்றும்!
எத்தனையெத்தனை!
காத்திருப்பும், கைகழுவலும்!
நாய் நா வடியும்!
கோடையாய்!
வறண்டிருந்தது வாழ்க்கை!
எல்லாமுமற்று நிற்கையில்!
உன்னைக் கொண்டு!
என்னைப் போர்த்திக்கொண்டாய்!
புறக்கணித்துக் கடந்தவர்கள்!
மீண்டும் வருகிறார்கள்!
வாழ்க்கையின் புறக்கணிப்பால்
மன்னார் அமுதன்